Friday, May 31, 2013

பருவ மழை தவறுவதும் ஏனோ ?




உடல் மண்ணுக்கு !!                           உயிர் தமிழுக்கு !!  



தமிழனாக வாழ்ந்திடுக !!                                                               


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!                                       


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!                                   


தமிழர்களுடன் உரையாடும்போது!!  



தினம் ஒரு திருக்குறள்.                                    


அதிகாரம்  :-  கொடுங்கோன்மை.         


குறள் எண்:-  559.                                              


முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி 


ஒல்லாது வானம் பெயல்.                                                             


விளக்கம் :-  அரசன் முறைதவறி        


நாட்டினை ஆட்சி செய்வானே 


ஆனால் அந்த நாட்டில் பருவ மழை 


தவறி மேகம் மழை பெய்யாமல் 


போகும்.  இது திருவள்ளுவர் நமக்கு 


அருளிய திருக்குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-              


(இந்தக் கட்டுரையில் வரும்/குறிப்பி-  


-டப்படும்  கருத்துக்கள்,விளக்கங்கள் 


இவை யாவும் முழுக்க முழுக்க 


இந்தக் கட்டுரையை தனது சொந்தக் 


கற்பனையில் உருவாக்கி  அதனை 


வெளியிடும் ஆசிரியரின் முயற்சியே 


தவிர, வேறு தனிப்பட்ட எவரையோ 


அல்லது அமைப்பினையோ குறித்து 


எழுதப்பட்டது அல்ல.   இதில் 


குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் 


கற்பனை,கற்பனை,கற்பனையைத் 


தவிர வேறு எதுவும் இல்லை)                       



உலகினில் உள்ள ஜனத்தொகை 


அதிக மதிப்பீடு இதில் இந்த நாடு 


இரண்டாம் இடத்தை பிடித்துள்ள 


நாடு. இந்த தீப கர்ப்ப நாட்டின் தென் 


கடைக்கோடியில் அமைந்துள்ள 


அந்த தொன்மையான மொழி பேசும் 


மக்கள் வாழும் ஒரு மாநிலம். அதில் 


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 


நடை பெற்ற மக்கள் வாக்கெடுப்பில் 


துக்ளக் தர்பாரின் யோசனையில் 


கூட்டணி அமைத்து மிருக பலம் 


கொண்ட பெரும்பான்மையுடன் 


வெற்றி பெற்றவன்தான், அதனால் 


ஆளும் வாய்ப்பையும் பெற்றவனே  


நரகாசுர  ஜெயந்தன் ஆவான். இவன் 


குணத்தின் மகிமையை சொல்ல 


ஒரு நாள் போதாது. ஆளும் திறமை 


இவனுக்கு ஒரு மண்ணும் தெரியாது. 


ஆனால்  தனக்கு எதிராக ஒருவன் 


செயல்பட்டவன்/செயல்படுகிறான் 


என்று தெரிந்தால் போதும் அவனை 


அவனது இயக்கத்தை பொய் வழக்கு 


போட்டு சிறைக்கு அனுப்புவதில் 


இவருக்கு ஆஸ்கார் விருதே வழங்க 


அனைத்து தகுதியும் இவருக்கு 


உண்டு.  ஆக புண்ணியவாளன் 


நரகாசுரன் ஜெயந்தன்   என்னைக்கு 


வெற்றிபெற்று ஆட்சிக் கட்டிலில் 


ஏறி அமர்ந்தானோ முடிந்தது 


அத்துடன் அந்த நாட்டில் பருவமழை 


சரியான தருணத்தில் பெய்து 


அணைகள் நிரம்பி விவசாயப் பணி 


நடைபெறுவது என்பது ஏறக்குறைய 


நின்றே போய் விட்டது. காரணம் 


எல்லாம் நம்ம அய்யா நரகாசுர 


ஜெயந்தனின் முறைகெட்ட ஆட்சி 


மட்டுமே காரணம் என்று மக்கள் 


பெருவாரியாக தத்தமது மனமதில் 


கருத்துக்களை பதிய வைக்கத்  


துவங்கி விட்டனர். நாடெங்கும்                                              


கேடுகள்/கொலை/கொள்ளை/


கற்பழிப்பு/மோசடிசெய்து மக்களை 


எமாற்றிடும் ஜெயந்தனின் கட்சி 


குழுவினர் என மக்கள்  வேதனை 


எழுதி முடியாது. இந்தசோதனையில் 


இருந்தும் வேதனையில் இருந்தும் 


மக்களைக் காப்பாற்றி அவர்கட்கு 


முன்பு இருந்ததுபோல் ஒரு 


நல்லாட்சி தரமுடியும் என்றால் அது 


ஒரே ஒருவரால் மட்டுமே 


முடியும்.அவர் அந்த நாட்டின் 


முதுபெரும் அரசியல்வாதி. 


தொன்மை மிக்க அவரின் மொழிக்கு 


பல்வேறு இலக்கணங்கள் எழுதி 


சிறப்பு பெற்றவர். அவர் மீண்டும் 


வந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால் 


ஒழிய நாட்டில் இந்த பஞ்சம் தீரவே 


தீராது என அங்கு அறிஞர்கள், 


நல்லவர்,உண்மைத்தலைவர்கள்   


அனைவரும் இந்தமுடிவுக்கு வந்து 


பல மாதங்கள் ஆகிவிட்டது. 


அவர்தான் திரு மு.அன்புநிதி ஆகும்.  


அவர் அந்த நாட்டை ஏற்கனவே 


இதற்குமுன் 5ஆண்டுகள் ஆண்டவர்.


அந்த ஆண்டவன்தான் அந்த 


நாட்டைக் காப்பாற்ற வேண்டும்/


காப்பாற்ற முடியும்.                                            



வாழ்க !! ஜனநாயகம் !!. வீழ்க !!


கொடுங்கோன்மை !!சர்வாதிகாரம்!!. 


மீண்டும் நாளை சந்திப்போமா.           


நன்றி !! வணக்கம் !!                                     


அன்புடன் மதுரை T.R. பாலு.



No comments:

Post a Comment