Monday, May 20, 2013

விதியை யார் மாற்ற முடியும் ?



உடல் மண்ணுக்கு !!                           உயிர் தமிழுக்கு !!  


தமிழனாக வாழ்ந்திடுக !                           


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!


(ஆங்கில மொழிகலப்புஏதும்இன்றி)    


தமிழர்கள்இடையேபேசிடும்போது.    


தினம் ஒரு திருக்குறள்.                                 


அதிகாரம்   :  ஊழ்.                                            


குறள் எண் :  379.                                             


நன்றாங்கால்நல்லவாக்காண்பவர்அன்றாங்கா                                                                                                                                    -                                                                                            -ல்      அல்லல் படுவ தெவன்... .. .. .. .. .. .. .. .. .. .. .. .. ... ...         


விளக்கம் :- நல்ல நிகழ்வுகள் நடை 


பெறும்போது இவை நல்லவை எனக் 


கருதி மகிழ்ச்சி அடைந்திடும் அதே 


நபர் தீவினை விளையும்போது 


துன்பப்பட்டு கலங்குவதும் ஏனோ ?  


இது திருவள்ளுவர் நமக்கு தந்த    


குறளும் அதன் விளக்கமும் ஆகும். 


நமது நாட்டு நடப்பு விளக்கம்:-  


(இந்தக் கட்டுரையில் வெளிவரும் 


நிகழ்வுகள்,குறிப்புகள்,கருத்துகள் 


இவை யாவும் கற்பனையே அன்றி 


எந்ததனிப்பட்டஅமைப்பினையோ 


அல்லது நபரையோ குறிப்பிடுவன 


அல்ல.)


அதுஒருபுனிதமானமாநிலம்.தீபகற்ப 


நாட்டின் தென்கடைக்கோடியில் 


அமைந்திட்ட திருநாடு. அதன் பெயர் 


" வள நாடு " ஏன் இந்தப்பெயர் அந்த 


நாட்டிற்கு வந்தது என்றால்,முன்பு 


ஒரு காலத்தில் அப்படி பலவகை 


வளங்கள் நிறைந்திருந்தது அந்தத் 


திருநாடாம் வளநாடு தனில். ஆனால் 


அந்த நாட்டு மக்கள் சிறந்த அறிவு 


நிறைந்திருந்தவர்கள்தான் எனினும் 


யாராவது இலவசமாக எதைத் 


தரினும் பெற்றுக்கொள்ள தயங்காத 


வர்கள் அந்நாட்டு மக்கள். எதிர்கால -


-த்தினைப் பற்றி கவலைப்படாமல் 


இன்று நாள் எப்படி என்றே வாழ்ந்து 


வருகிறார்கள். யார் ஆண்டாலும் 


அதை பற்றி கவலை இல்லை. அவர் 


நல்லவரா?அல்லது வெறும் மேனா 


மினுக்கித்தனம் மட்டும் தான் அந்த 


நபரிடம் உள்ளதா?ஆளுகைத்திறன் 


உள்ளவரா இல்லையா எந்தக் 


கவலையும் படாதவர்கள். 


எங்களுக்கு மிக்சி,கிரைண்டர்,பேன், 


ஆடு,மாடு இவைகள் போதுமானது. 


இவைகளை எல்லாம் நாங்க  


உங்களுக்குஇலவசமாக தருகிறோம் 


என யார்சொன்னாலும் போதும். 


விலை மதிப்புள்ள தங்களது 


வாக்குச் சீட்டைஎந்த குருடனுக்கும் 


கூட தந்திட தயங்காதவர்கள் அந்த 


வளநாட்டு மக்கள். இப்படிப் பட்ட 


ஒரு கால கட்டத்தில் இரண்டு 


ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற 


பொதுத் தேர்தலில் ஏற்கனவே 


கடந்த 5 ஆண்டுகளாகதிறமை உள்ள


நல்ல பல மக்கள் திட்டங்கள், தடை 


இல்லா மின்சாரம் (கடைசி இரண்டு 


ஆண்டுகளாகத்தான் 2 மணிநேர 


மின் வெட்டு)இதுபோன்ற ஒரு 


சிறந்த ஆட்சிதனை இந்த இலவசங்க 


-ளுக்கு ஆசைப்பட்டு புறந்தள்ளினர் 


அந்த வளநாடு மக்கள். ஆனால் 


இன்றோ தலைநகர் தொன்னை 


தவிர (அங்கு மட்டும் 2 மணிநேர 


மின்தடை)மற்ற நாட்டின் அனைத்து 


இடங்களுக்கும் 9மணி நேரம் முதல் 


12 மணி நேர மின்வெட்டு,குடிக்க கூட 


தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் 


அபாயம்,இது போன்ற சங்கடங்கள் 


அந்நாட்டு மக்கள் வேதனையின் 


விளிம்பில் உள்ளனர். எல்லாம் 


ஊழ்வினைப் பயன். 


இலவசங்களை பெற்று அதை 


அனுபவிக்கும் போது மனம் மகிழ்வு 


பெறுகிறது. அதே மனம் சங்கடங்கள் 


வரும்போது சலிப்படைகிறது. இதை 


தான் அய்யன் திருவள்ளுவர் மேலே 


சொன்ன குறளில் அழகாக குறிப்பிட்-


டுள்ளார். இவை ஊழ்வினைப் 


பயனே அன்றி வேறு ஏதும் இல்லை. 


"விதியை யார் மாற்ற முடியும்" ?


மீண்டும் நாளை சந்திபோமா? 


நேயர்களே !!நன்றி ! வணக்கம் !! 


அன்புடன் மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment