Wednesday, May 1, 2013

காலம் வரும் வரை காத்திருப்போம் !!




தமிழர்களாக வாழ்ந்திடுக !!


தனித்தமிழில் மட்டுமே பேசிடுக !!


                  ( தமிழர்களிடம் )



தினம் ஒரு திருக்குறள். 


அதிகாரம்    :-  காலம் அறிதல்.             

குறள் எண்  :-  481.                                         


பகல்வெல்லும் கூகையைக் காக்கை                                              

                                      இகல் வெல்லும் 

வேந்தர்க்குவேண்டும் பொழுது.        


குறள் விளக்கம் :-   காக்கை தன்னை 

விட வலிமையான (ஆந்தையை)

கோட்டானைப் பகலில் வென்றிடும்*.

அதுபோல பகையை வெல்லக் 

கருதும் அரசர்/தலைவர் இவர்கட்கும் 

அதற்கு ஏற்ற நல்ல காலம்வர 

வேண்டும். இது வள்ளுவர்  நமக்கு 

அருளிய திருக்குறளும் அதன் 

விளக்கமும்.(*பகலில் ஆந்தைக்கு 

தனதுஇரண்டு கண்களும் தெரியாது)


(இந்தகீழ்க்கண்டகட்டுரையில் வரும்  

சம்பவங்கள்,குறிப்புகள்,நிகழ்வுகள் 

இவை அனைத்தும் கற்பனையே 

தவிர வேறு யாரையும் எவரையும் 

குறிப்பிடுவன அல்ல.இது ஆசிரியர் 

தரும் நற்சான்றிதழ்.)

நமது நாட்டு நடப்பு விளக்கம்:- நான் 

உங்கள் அனைவருக்கும்ஏற்கனவே 

கூறியஅதே தீபகற்பநாடு.அதன்தென்                                                                                 

கடைக்கோடியில் உள்ள 3 எழுத்து 

பெயர் உடைய (முன்பு)ஒரு மாநிலம். 

அங்கே விதிவசத்தால் ஆள்கின்ற 

ஒரு பெரும் கடமையைத்  தனது 

தவறான கூட்டணி அமைத்ததன் 

காரணமாக மாநில முதல்வர் பதவி 

பெறத்தவறிய ஒரு முதுபெரும் தமிழ் 

கற்ற நல் அறிஞர், நல்ல முத்தமிழ் 

கற்றவித்தகர்,இன்றைக்கும் அகவை 

ஏறத்தாழ 9௦ நெருங்கிக்கொண்டு 

இருக்கும் நல்ல கலைஞர் இப்போது 

அவரது நிலைமை நான் உங்களுக்கு 

மேலேசொன்ன திருக்குறளில் உள்ள 

அரசனின் நிலையில் தான் வாழ்ந்து 

வருகின்றார். அவரது எதிர்க்கட்சி 

தற்போது மாநிலத்தை ஆள்கின்ற 

கட்சியாக இருந்தபோதிலும் அதற்கு 

எந்த கூறும், திறமையும், இல்லாத, 

ஓர்மன்ணாந்தை நிர்வாகம் நடத்திக் 

கொண்டு,பதவியில் இருக்கின்றோம்  

என்ற, ஒரே ஒரு தகுதிதனைத் தவிர 

வேறு எந்த அருகதையும் இல்லாத 

அந்தமாநில அரசு,இந்த முதியவரை- 

-யும் மற்றும்இவரதுகட்சி,மேலும் 

அதன் முன்னாள் அமைச்சர்கள்,கட்சி 

நிர்வாகிகள் என்று அனைத்து தரப்பு 

பிரிவினர்மீதும்பல்வேறு வழக்குகள், 

நீதிமன்ற அலைக்கழிப்புகள் இதன் 

காரணமாக அந்த கட்சியின் பெரிய 

அடுத்தநிலைதளபதியுள் ஒருவரை 

இந்த ஊருக்கும் அந்த ஊருக்கும் என 

அலைக்கழிவு செய்தே அந்த நல்ல 

முகத்தை பரலோகம் போகவைத்த 

பெருமை இதுபோல அந்த பகை 

உணர்வினை வெல்வதற்கு அந்த 

முதுபெரும்தலைவர்காத்துக்கொண்

டிருப்பதை அந்த தெய்வீகப்புலவர் 

திருவள்ளுவர் 2௦32 (ஏறத்தாழ) 

ஆண்டுகட்கு முன்பே கணக்கில்   

கொண்டு மேலே சொன்ன குறளை 

வரைந்திருப்பாரோ என்னவோ 

என்றஉங்களது சந்தேகம் அர்த்தம் 

உள்ளது என்று எனது கருத்தை நான் 

இங்கே பதிவு செய்துமீண்டும் நாளை 

அடுத்த "குறள் விளக்கம்"வலை தள 

பகுதில் நாம் அனைவரும் கண்டு 

மகிழ்ந்திடுவோம் என்று சொல்லி 

அதுவரை உங்கள் அனைவருக்கும் 

எனது நெஞ்சார்ந்த நன்றியையும் 

நல்வணக்கத்தினையும் ஒன்று சேர 

உங்கள் அனைவரது பொற்கமல 

பாதங்களில் வைத்து விடை பெறும் 

உங்கள் அன்பன் மதுரை T.R.பாலு.


No comments:

Post a Comment