Tuesday, April 30, 2013

படித்த அறிவு பயன் தருமா ? முன்னோர் வகுத்த அறிவு பயன் தருமா ?



தமிழர்களாக வாழ்ந்திடுக !!


தமிழில் மட்டுமே பேசிடுக !!


            ( தமிழர்களிடமாவது )   



தினம் ஒரு திருக்குறள். 

அதிகாரம்  :-  அமைச்சு.

குறள் எண்:-  637.                              


செயற்கை அறிந்தக் கடைத்தும் உல-

இயற்கை அறிந்து செயல்.           -கத்து                                                               


விளக்கம் :-  தான் கற்றுஅறிந்த 

நூல்கள் பலவற்றைப் படித்து அதன் 

வாயிலாகத்  தமக்கு ஏற்பட்ட 

நுண்அறிவின்காரணமாகசெயல்கள்

பல செய்திடும் ஆற்றல் தம்மிடம் 

இருந்தபோதிலும் கூட, உலகத்தின் 

இயற்கையைஅறிந்துஅவைகளோடு

பொருந்துமாறு நமது செயல்களை 

அமைத்து செயல்பட வேண்டும்.இது 

வள்ளுவப்பெருந்தகை நமக்கு 

தந்திட்ட திருக்குறளும் அதன் நல் 

விளக்கமும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-அது  

ஒரு தீபகற்ப நாடு.அதாவது மூன்று 

புறமும் கடல் நான்காவது பக்கம் 

மலை இப்படி இருந்தால் அது நான் 

மேலே சொன்னபடி தீபகற்ப நாடு. 

நான்கு பக்கமும் கடல் இருக்கி-

றதென்று வைத்துக்கொண்டால் அது 

தீவு.

அந்ததீபகற்பநாட்டின்தென்கடைக் 

கோடியில் ஒரு மாநிலம். அந்த 

மாநில மக்கள் என்ன பாவம் செய்து 

விட்டனரோ தெரியவில்லை. 

அரசாட்சி என்றால் என்ன என்பது 

ஒன்றும்தெரியாத  அறிவு இல்லாத 

ஒரு அரசன் அவன் பெயர் வெற்றித்

தாமரைச்செல்வன் அந்த 

மாநிலத்தை  ஆள அவன் வந்தவன். 

அரசனிடம் உள்ள ஒரு சிறப்பு குணம் 

என்னவென்றால் ஆட்சி,அமைச்சு, 

நல்லோர்கள்/அறிஞர்கள்/நல்ல வழி 

கூறுவோர்கள் என யாரையும் 

மதிக்க தெரியாதவன். தமக்கு எதிர் 

அணியில் இருப்பவரையும் 

அரவணைத்து மதித்து ஆட்சி 

செய்யும் வகை தெரியாதவன்.அவன் 

பெற்ற ஒரே அறிவு என்னவென்றால் 

திமிர்,யாரையும்துச்சமாகவே பார்த்-

திடும்மனம்.தனக்குமட்டுமேஎல்லா-

உலக விஷயங்கள் தெரியும். இந்த 

இலட்சணத்தில் சிறு வயதில் 

அயல்நாடு சென்று ஆங்கிலமொழி 

கற்று ஓரளவு தேர்ச்சி பெற்றதால்  

தமக்கு நிகராக எவருக்குமே அந்த 

ஆங்கிலமொழி பேசவராது என்னும் 

ஒரு மமதை. இவைகள்தான் அந்த 

மாநில அரசனது நற்குணங்கள்.  

எப்படிப்பட்ட அரசன் அந்த நாட்டுக்கு 

வாய்த்திருக்கு பாருங்கள். மாநிலம் 

முழுவதும் கடுமையான மின்சக்தி 

பற்றாக்குறை. இதை எவ்வாறு தான் 

சீர்செய்து மக்களை இத்துயரில் 

இருந்துகாப்பாற்றுவதுஎன்று ஏதும் 

அறியாமல் இப்போது பெரிய 

மலையில் அணைகட்டி அதில் நீர் 

நிரப்பி அதன் பிறகு அதில் மின்சக்தி 

உற்பத்திபண்ணப் போவதாகவும் 

அந்த வகையில்தமக்குஆலோசனை 

கூற படித்த மிகவும் அறிவுள்ள  

பொறியாளர்கள் உள்ளதாகவும் 

என்ன என்னமோ அந்த அரசர் பேசு-

வது அனைத்தும் நடைமுறைக்கு 

ஒத்துவராத பேச்சுக்களாகவே 

உள்ளது. அதாவது கொக்கு அமர்ந்து 

உள்ள போது அதன் பின்புறம் சென்று 

அதன் தலையில் வெண்ணைதனை 

வைத்ததனால் உருகி  கொக்கு கண் 

தெரியாமல் உள்ளபோது கொக்கு 

பிடித்த கதையாக உள்ளதே. இதற்கு  

முன் ஆட்சி செய்த முன்னாள் அரசன் 

எப்படியெல்லாம்மக்களுக்கு நன்மை

செய்திட்டு அவர் உலகநடப்பு அறிந்த 

வண்ணம் செயல் ஆற்றினார் 

என்பதை சற்றும் எண்ணாமல் ஏதோ 

காரியங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்த ஜென்மத்தில் இந்த அரசன்   

உலகின் நடப்புகள் அறிந்து அந்த 

மாநிலத்தினை ஆளப்போவதும்  

கிடையாது. அதனால் மக்கள் மாளப் 

போவது என்னவோ நிச்சயம்.அந்த 

அரசனது இந்த நிலை பார்த்தவுடன் 

எனக்கு மேலேசொன்ன குறள் 

நினைவு வந்ததில் தவறு எதும் 

இல்லை அல்லவா?

மீண்டும் நாளை சந்திப்போம்.  

நன்றி !!வணக்கம் !! 

அன்புடன் மதுரை T.R.பாலு.




No comments:

Post a Comment