Wednesday, April 10, 2013

குடித்துவிட்டு மயங்கியவனின் பரிதாப நிலை பாரீர் !!



தமிழர்களாக இருங்கள் !!

தமிழில் மட்டுமே பேசுங்கள் !!

  
தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்    :-  கள்ளுண்ணாமை.

குறள் எண்  :-  925.



கையறியாமை யுடைத்தே பொருள் கொடுத்து 

மெய்யறி யாமை கொளல். ... ... ... ... ... ... .. ... ... ....


விளக்கம் :-  விலைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு 

தனது உடம்பைத் தானே அறிந்திடாத நிலைதனை 

மேற்கொள்ளுதல் செய்வது என்பது அறியாததோர் 

அறியாமை உடையதாகும். இது வள்ளுவர்  நமக்குத்

தந்த குறளும் அதன் விளக்கமும்.


நமது நாட்டு அடைப்பு விளக்கம் :-

அன்று விடுமுறை நாள்.  ராமு தனது நண்பன் பாலு 

அறைக்கு வந்து, என்னடா மாப்ளே இன்னைக்கு லீவு 

" சரக்கு " போட்டு நாளாச்சுடா. ஏன்னா. என்கிட்டே 

மணிப்பர்ஸ் காலி. அதான் வந்தேன்.

பாலு :- டேய்  விடுறா. என்னைக்கு உன்ட்ட பர்ஸ் 

ரொம்பிஇருந்துச்சு. வாடா போவோம்.என சொன்ன-

வுடன் அவர்கள் தங்கி இருந்த அறைக்கு மிக அருகே 

இருந்த"டாஸ்மாக்" கடைக்குப்போய்ரெண்டு பேரும் 

ஒரு half வாங்கி ஊற்றினார்கள். பிறகு என்னாட 

மாப்ளே ஒன்னும் ஏறவே இல்ல.ஒருவேளை சரக்கு 

டூப்ளிகேட்டோ. உம்.ஒன்னும் புரியல்லையே. சரிடா

நீ இன்னா செய்ற இன்னொரு half அப்புறம் ஒரு beer

அது போதுண்டா மாப்ளே.இன்னைக்கு. என்று ராமு 

சொல்லசரிஎன்று அவன் நண்பனும்தான் பாடுபட்டு 

சம்பாதித்த பணம் ஏற்கனவே ஒரு 2௦௦ காலி இப்ப 

மேலும் ஒரு 3௦௦ தரும் போதே சொல்லரான். டேய் 

ஏண்டா எனக்கு  இப்படி செலவு இழுத்துவிடுரே என 

கேட்க ராமுவும் ஏண்டா போதைன்னா ஏன்னா 

சும்மாவாடா வரும் கொடுர்ரா ரொம்பத்தான் பிகு 

பண்ணாதே என்று சொல்லிட்டு சரக்கு ரெண்டையும் 

வாங்கி கலந்து அடிச்சானுங்க இருவரும். அப்புறம் 

டாஸ்மாக் கடையை விட்டு வெளியே வந்து அந்த 

கடையை பார்த்துஒரு கும்பிடு போட்டு போதையில்  

டேய் நம்ம அரசாங்கம்ரொம்பரொம்ப நல்ல அரசுடா 

என ராமு  சொல்ல ஏண்டா அப்டி சொல்றேன்னு 

பாலுவும் கேட்க இந்த வசதியை இந்த நாட்டுலே 

எந்த மாநில சர்க்கார்டா செஞ்சு தந்துருக்கு. நல்லா 

இருக்கணும் இந்த அரசு என வாழ்த்திட்டு இதற்கு 

மேலே போதை தலைக்கு மேலா ஏறவே இரண்டு 

பெரும் தமது சுய நினைவு இழந்து சாலை ஓரமா 

கீழே படுத்து FLAT-OUT ஆனதாலே பாலு பர்ஸ்லே 

இருந்த அவன் சம்பளப் பணம் மீதி ரூபாய் 5௦௦௦

காணாமல் போய் விட்டது. தெருஓரம் விழுந்து 

கிடந்ததாலே அசிங்கம் வேறு. இந்த மதுப்பழக்கம் 

தந்த பரிசுகளை பார்த்தீர்களா இளைஞர்களே. மது 

எப்படிமயக்கிதமதுநினைவை இழக்க வைத்ததாலே 

என்னென்ன நிகழ்வுகள் இது நமக்கு தேவையா.

சிந்திப்பீர் இளைஞர்களே செயல்படுவீர். திருந்திட 

முயலுங்கள். கவியரசர் கண்ணதாசன் அவரது 

சொந்த தனிப் பட்ட வாழ்க்கை அது எப்படியோ 

இருக்கட்டும். திருடாதே என்ற படத்தில் ஒரு பாடல் 

எழுதியுள்ளார்.

" சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து 

  சிறிசா இருக்கையில் திருத்திக்கோ-தவறு 

  சிறிசா இருக்கையில் திருத்திக்கோ 

 தெரிஞ்சும் தெரியாமல் நடந்திருந்தா அது

 திரும்பவும் வராமல் பார்த்துக்கோ ....

என்று அந்த பாடல் வரிகள் வரும்.  பிறக்கும் போதே  

யாரும் ஞானிகளாக பிறப்பது இல்லை. கெட்டுத்

திருந்த வேண்டும். அதையே இன்னோரு பாடலில் 

பட்டினிக்கு தீனி கெட்ட பின்பு ஞானி என்று சொன்ன 

வரும் கண்ணதாசனே. முயன்றால் முடியாதது 

எதுவும் இல்லை நேயர்களே. முயன்று திருந்தி 

வென்றீர்கள் என்றால் அதைவிட எனக்கு வேறு 

மகிழ்வு தருவது எதுவும் இல்லை. நன்றி வணக்கம்.

இப்படிக்கு உங்கள் 

மதுரை TR.பாலு.


பின் குறிப்பு :-  டாஸ்மாக் கடையில் நடந்த நிகழ்வு 

-களை அப்படியே அட்சரம்பிசகாமல்எப்படி இவரால் 

சொல்ல முடிந்தது. ஒருவேளை இவரும் அந்தக் 

காலத்தில் ..............அப்படி இருந்திருப்பாரோ என்று 

நினைக்கிறீர்களா. இந்த இடத்திலஒருகருத்து அதை

நான் பதிவு செய்து எனது கட்டுரையை நிறைவு 

செய்கிறேன்.

 " பாம்பு கடித்தால் மரணம் என்பதை யாரும் தான் 

  பாம்பு கடி வாங்கி சொல்வது இல்லை சொல்லவும்  

 முடியாது. என்ன உயிர்இருக்காது.அதுபோலத்தான் 

இதுவும்எல்லாம்ஓர் அனுமானம் தான் அன்பர்களே"


No comments:

Post a Comment