Friday, April 12, 2013

காமராஜரின் அடக்கமும் பெருமையும் !!




தமிழர்களாக இருங்கள் !!

தமிழிலேயே  பேசுங்கள் !!


தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  பெருமை.

குறள் எண் :-  978.



பணியுமாம் என்றும் பெருமை  சிறுமை 

அணியுமாம் தன்னை வியந்து.. .. .. .. .. .. .. 


விளக்கம் :-  உயர்ந்த பண்பு உடைய பெரியவர்கள் 

என்றும் எப்போதும் பணிவுடன் மட்டுமே வாழ்ந்து 

வருவார்கள்.  ஆனால் சிறுமையை மட்டுமே தனது 

பண்பாகக் கொண்டவர்களோ தன்னைப்பற்றியும் 

தான் செய்த செயல்களைப்பற்றியும் தானே தன்னை 

வியந்து பாராட்டிக்கொள்ளுமாம்.  இது வள்ளுவர்

நமக்கு தந்த குறளும் விளக்கமும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  நமக்கு சுதந்திரம் 

பெற்றுத் தந்த " அந்தக் கால " காங்கிரஸ் கட்சி  அது 

தான் ஆட்சி செய்திட்ட மாநிலங்கள் அனைத்திலும் 

மக்கள் நன்மைக்கு என்று எத்தனை எத்தனையோ 

நல்ல காரியங்கள் செய்து வந்திருந்தது.  ஆனால் 

அவைகளைப் பற்றி அது மக்களின் நலம் பெரும் 

எந்தத்திட்டமாகஇருக்கட்டும்அல்லதுஅணைக் 

கட்டுகள் கட்டியதாக இருக்கட்டும் அல்லது இலவச

கல்வி திட்டமாக இருக்கட்டும் அல்லது பெருந் -

தலைவர் காமராஜரிடம் மாடு மேய்க்கும் ஒரு 

சின்னஞ்சிருவன் ஏனப்பா படிக்கும் வயதில் இப்படி 

மாடு மேய்கின்றாய் என்று பெருந்தலைவர் 

கேட்டவுடன் அப்ப சோறு நீ போடுவியா என்று 

கேட்க அதற்கு தலைவர் சோறு போட்டால் படிக்க 

பள்ளிகூடம் வருகிறாயா என்றவுடன் அந்த மாடு 

மேய்க்கும் சிறுவன் சரி சொன்ன ஒரே காரணத்திற்-

காகவே மதிய உணவு திட்டத்தை நடைமுறை 

படுத்திய போதும் சரி காமராஜர் அவர்கள் பணிந்து 

நடந்து எந்த விளம்பரமும் இன்றி அரசியல் செய்து 

நாடும் நாட்டு மக்களும் நலமாகஇருக்க எங்கே தான் 

திருமணம்செய்துகொண்டு பிள்ளைகுட்டி பெற்றால்

நாட்டைப்பற்றிய சிந்தனை மாறிப்போய் மறந்து 

போய் வீட்டு நினைவு வந்துவிடக்கூடாது  என்பதற்-

காகவே இறுதிவரை கல்யாணம் செய்திடாமல் 

காலம்சென்ற அந்தப் பெருந்தலைவரின் பணிவு 

எங்கே?  ஆனால் இவைகளுக்கு எல்லாம் நேர் 

மாறாக இன்றைய தினம் ஆளும் அனைத்து ஆண்ட 

கட்சிகளாகட்டும் ஆளும் கட்சிகளாகட்டும் அவர்கள் 

செய்யும் விளம்பரங்கள், மக்கள் வரிப்பணத்தில் 

இருந்து பணம் பெற்று அவர்களுக்கே இலவசம் 

என்ற பெயரில் இந்த நாட்டின் ஒவ்வொரு மக்களை -

-யும் கையேந்தி பிச்சைக்காரன் ஆக்கி மகிழ்ந்து 

அதனை பத்திரிகையில் புகைப்படத்துடன் கூடிய 

விளம்பரத்துடன் பெருமைப் படுத்தி அடுத்த 

தேர்தலுக்கு ஒட்டு பிச்சை எடுக்கும் இந்தக்கால 

அரசியல் பிரமுகர்களின் சிறுமைத்தனம் ஈராயிரம் 

ஆண்டுகளுக்கு முன்பே கணித்து செய்யுள் எழுதிய 

திருவள்ளுவரின் தொலைநோக்கு சிந்தனைதனைப்

பார்வைநான் நினைத்து நினைத்து பெருமைபடாத 

நாளே இல்லை.பெருந்தலைவர்புகழ்என்றும்வாழ்க.





No comments:

Post a Comment