Monday, April 8, 2013

நல்லது செஞ்சும் கெடுதல்தான் நடக்கிறது !!



தமிழர்களாக இருங்கள் !!

தமிழர்களிடமாவது தமிழிலேயே பேசுங்கள் !!

இது மிக அவசியம் !!
  


தினம் ஒரு திருக்குறள் !!


அதிகாரம்   :-  தெரிந்து செயல்வகை.

குறள் எண் :-   469.



நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்   

பண்பறிந் தாற்றாக் கடை ..... ....... ....... ....... 


அவரவர்களுடைய இயல்பான குணங்களை 

அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு/ஏற்றவாறு 

நாம் நடக்காவிட்டால் அப்படிப்பட்ட குணம் உள்ள 

அந்த அய்யா/அம்மா  இவங்களுக்கு நாம செய்திடும் 

நன்மை நமக்கே கெடுதி செய்திடுவதுடன் அது மிகப் 

பெரும்  தவறாகிவிடுமாம்.  இது வள்ளுவர் நமக்கு  

தந்திட்ட குறளும் அதன் விளக்கமும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-

அந்தமாநிலத்தில்(நான்மாநிலத்தின்பெயர்சொல்ல  

விரும்பவில்லை) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு

பொதுத் தேர்தல் நடைபெற்றது.  அப்போது அந்த 

நாட்டில் இரண்டு பெரிய கட்சிகள் அவை ஒவ்வொ-

ன்றும் சமபலம் கொண்டவை என்றாலும்கூட 

வெற்றியை தீர்மானிக்கும் பலம் அங்கு புதிதாக 

கட்சி ஆரம்பித்துள்ள ஒரு திரைப்பட நடிகர் அவர் 

பெயர் அஜைகாந்த். அவரது மா.தி.மு.க. என்னும் 

பெயர் உள்ள அந்த கட்சியின் கையில்தான்  இருந்-

ததால் அவரிடம் கூட்டணி வைத்த ஒருகட்சி 

மிகப்பெரும்பான்மையான அசுர பலத்துடன் வெற்றி 

பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இந்த நமது 

அஜைகாந்த் கட்சிக்கு எதிர் கட்சி அந்தஸ்தும் 

கிடைத்தது.  அப்புறம் என்ன. நாலு, ஐந்து மாதம் 

போனவுடன் ஆளும் கட்சி வாக்குறுதிப்படி ஏதும் 

நடக்கவில்லை என்று தெரிந்து அஜைகாந்த்தமது 

நியாயமான எதிர்ப்புகளை ஜனநாயக முறைப்படி 

அரசுக்கு தெரிவித்து வந்தார்.  அது அந்த ஆளும் 

கட்சிக்குப்பிடிக்காது என்பது இவர் முன்பே அறியாத 

காரணத்தால் இவரை சோதனைக்கு உள்ளாக்கிட 

அவுக முடிவு செய்து இவர் மேல் பல்வேறு நீதி  

மன்றங்களிலும் அவதூறு வழக்குகள் அது இது என 

அஜைகாந்தை அலையோ அலை என்று அலைய 

வைத்ததுடன் அவர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 

நான்குஅல்லதுஅஞ்சுபேரைஅவர்கள்...................க்காக

எதுவும் செய்திடும் குணம் கொண்டவர்கள் என 

அவர்கள் கட்சியினராலேயே குற்றம் சுமத்தப் 

பட்டவர்களை தன்பக்கம் இழுத்துக்கொண்டு 

இன்னும் நிறையப்பேர்களுக்கு வலை விரித்து 

உள்ளதாகவேறு பேச்சு அடிபடுது.  


இது எல்லாம் அந்த அஜைகாந்த் அவர்களுக்கு 

தேவையா ஐயா.  அவுகளைப் பற்றித்தான் ஊரே 

தெரிஞ்ச விஷயம் தானே. இந்த ஆளு மட்டும் 

அந்த அணியில் இலைன்ன அவுகளும் பவருக்கு 

வர முடியாது இவரும் வெற்றிபெற முடியாது.

அப்ப இவர் என்ன செஞ்சு இருக்கணும்  அவுக குணம்  

தெரிஞ்சு இல்லை சேர்ந்து இருக்கணும்.  இப்ப 

பாருங்க நல்லது செய்யப் போய் பாவம் இவரு இப்ப 

தவறு பண்ணிட்டு முழியாமுழிக்காறு.  என்ன 

செய்ய இப்ப.உப்பைத்திண்ண இல்ல.அப்ப தண்ணி

குடிச்சுதானே ஆவனும். என்ன நான் சொல்றது. 


போயிட்டு நாளைக்கு வேற ஒரு விளக்கத்தோடு

உங்களை எல்லாத்தையும் நான் பாக்கவாறேன். 

நன்றி.வணக்கம்.



No comments:

Post a Comment