Sunday, April 21, 2013

குடித்து விட்டு மயங்கியவன் நிலை கண்டும் குடிப்பதேன் ?




தமிழர்களாக வாழ்ந்திடுக !!

தமிழில் மட்டுமே பேசிடுக !!

            ( தமிழர்களிடமாவது )


தினம் ஒரு திருக்குறள் .

அதிகாரம்   :-   கள்ளுண்ணாமை.

குறள் எண் :-    93௦.



கள்ளுண்ணாப்போழ்தில்களித்தானைக்காணுங்-
                                                                                              -கால்
உள்ளான்கொள் உண்டதன் சோர்வு ... ... ... ... ... .... ... ... 


விளக்கம் :-  எவன் ஒருவன்.தான் கள் 

உண்ணாத போது கள் உண்டுவிட்டு 

மயங்கிக் கிடக்கும் நிலைதனைக் 

காணும் இடத்தில் அந்தக் கள்ளினை 

உண்டுமயங்குவதால்வரும்சோர்வு 

தனை நினைத்திட மாட்டானோ ?

இது திருவள்ளுவர் நமக்கு தந்த 

குறளும் அதன் விளக்கமும்.


நாட்டுநடப்புவிளக்கம்:-இரு நண்பர்கள்

ஒருவர் மற்றொருவரோடு உரை 

நிகழ்த்துவதாக ஓர் கற்பனை !!

புஷ்பவனம்:- ஏன்டா நந்தவனம்?எங்கே 

மாப்ளே  பூங்காவனத்தை நேத்தேலே 

இருந்துகாணோமடா!உம்!எங்கேபோய்

தொலைஞ்சாண்டா?

நந்தவனம் :-  டேய் ! உனக்கு அந்த 

கஸ்மாலம் பூங்காவனத்தைப் பத்தி 

ஏன்னா அக்கறை. உம் தெரியாமத்தான் 

கேக்கிறேன் உனக்கு விஷயம் 

தெரியுமா இல்லை தெரியாதா ?

புஷ்ப:-  டேய் ! மச்சான் !! இன்னாடா 

எதுமே தெரியாதமாதிரி கேக்றே 

ஆயிரம் தான் இருந்தாலும் அவன் என்

தங்கச்சி மாப்ளடா அக்கரை 

இல்லாமேயாட போவும்.சத்தியமா 

எனக்கு எதுமே தெரியாதுடா என்னாட 

ஆச்சுஅவனுக்கு ? சொல்றா விவரமா !!

நந்த:-  டேய்! மாமு ! நானும் 

அவனுந்தான் நேத்து நம்மை பேட்டை 

ஜில்ஜில்ஒயின்ஸ் போனோன்டா!

புஷ்ப:- சரி.சொல்றா. சொல்றா.

நந்த:- மாமு! சொல்றேண்டா ஏண்டா

இப்டி பறக்கிற!  நான் வயக்கம் போல 

ஒருகுவாட்டர்ஒருபொட்லம் ஊருகாய் 

அதோட ரெண்டு பாக்கெட் தண்ணி 

முடிஞ்சுச்டாநம்ம அக்கவுன்ட்டு

ஆனா !!

புஷ்ப :- டேய்.என்னாட ஆனா 

ஆவன்னான்னு சொல்லிட்டு இருக்கே 

என்க்குஎனக்கு ஒரே பயமா கீதுடா 

மச்சி

நந்த:-  நம்ம பூங்காவனம் இருக்கானே

அவன்என்னசெஞ்சாண்டாஒருபுல்லை 

எட்துக்கினு உக்காந்து ஊத்றான் 

ஊதறான் ஊத்திட்டே இருக்காண்டா 

மாமு. எனக்கு ஒரு கட்டிங் தாடான்னு 

கேட்டதுக்கு கூட போடா புறம்போக்கு 

அப்டின்னுசொல்லிட்டு அம்புட்டையும் 

குடிச்சுட்டுகடைஓரம்நேத்துஅநேகமா

சாயங்காலம் மட்டை ஆகி விழுந்த 

வந்தாண்டா மாமு.இன்னும் 

எந்திரிச்சானா இல்லையா ஒன்னும் 

தெரில்லாடா எனக்கு என்னை இன்னா 

பண்ண சொல்ற !உக்கும் !!

புஷ்ப:-  அடப் பாவிகளா.ஏண்டா 

உன்கிட்ட என் தங்கச்சி மாப்ளையை 

ஒப்படைச்சதுக்கு அவனை குடிக்க 

வச்சே கொன்னு போட்றுடா.இதுதான் 

நீ உன் மச்சானுக்கு செய்ற 

கைமாறாடா,சொல்றா.உன் நெஞ்சைத் 

தொட்டு.

நந்த:-  டேய் மாமு ஒரேடியா கூவாதே

இப்ப இன்னா செயனுன்னு சொல்றே.

வா.இப்பவே விழு ந்துகிடக்ற 

உன்னோட மாப்லையை போய்தூக்கி 

யாந்துருவோம். ஆனா...ஆனா..எனக்கு 

நீ இப்ப ஒரு குவாட்டர் 

வாங்கித்தரவியாடா.சொல்றா மாமு.

எனக்கு இப்ப வேணும் அது.

புஷ்ப:- டேய் நீ ல்லாம் ஒரு 

மன்ஷனாடா. அம்புட்டு தூரம் 

ஒருத்தன் குட்சுட்டு மயங்கிகிடக்கான்.

அத்த பாத்தும் அப்புறம் அப்டிதா நீ 

இன்னும் குடிக்கனுன்றயே யப்பா!!

உன்னை எல்லாம் அந்தத் 

திருவள்ளுவரே வந்தாலும் திருத்த 

முடியாதுடா  சாமி. ஆளை விடுறா. 

நானே போய் என் மாப்பிளையை 

கூட்டியாந்துக்குறேன். போடா.போடா.

விளக்கெண்ணை....

குறிப்பு -இப்படிப்பட்ட நந்தவனங்களும்

பூங்காவனங்களும் இவர்கள் மட்டும் 

அல்ல. நமது தமிழ்நாட்டின் டாஸ்மாக்

துணையோடு அங்கிங்கு எனாதபடி 

ஒவ்வொரு சந்து பொந்துகளிலும் 

இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் 

இருக்கிறார்கள் அன்பர்களே. 

அவர்களை எல்லாம் பார்த்த பின்னும் 

நாம் இனிமேலும் டாஸ்மாக் பாருக்கு 

போனா நாம எல்லாம் மனிதர்களா 

சிந்திப்பீர் செயல்படுவீர். 


"சிந்தித்துப்பாத்துசெய்கையை மாத்து !

சிறுசா இருக்கையில் திருத்திக்கோ !!

தவறுசிறுசாஇருக்கையில்   

திருத்திக்கோ ! தெரிஞ்சும் தெரியாம 

நடந்திருந்தா அது திரும்பவும் வராம 

பாத்துக்கோ." என்ற " திருடாதே "

திரைப் படத்தில் வரும் கவியரசு 

கண்ணதாசனின் பாடல் வரிகளை 

உங்கள் நெஞ்சில் உரமாக ஏற்றிக் 

கொண்டு செயல் பட வேணுமாய்க் 

கேட்டு விடை பெறுகிறேன். 


கவியரசர் என்ன சரக்கு சாப்டலையா 

என்று நீங்கள் உங்களது உள்மனதில் 

கேட்பது எனது காதுகளில் விழாமல் 

இல்லை அன்பர்களே.  திருவள்ளுவர் 

அதற்கும் ஒருகுறள் தந்துதான் சென்று 

உள்ளார்.

எப்பொருள்யார்யார்வாய்க்கேட்பினும் 

அப்பொருள் மெய்பொருள் காண்பது 

அறிவு.

யார் சொல்லுகிறார்கள் என்பது நமக்கு 

முக்கியம் அல்ல அன்பர்களே! என்ன 

கருத்து சொல்கிறார்கள் என்பதை நாம் 

உணர்ந்தால் நமக்கு நல்லது !! நமது 

வீட்டுக்கு நல்லது !!இந்த நாட்டுக்கு 

நல்லது!!


ஜெய்ஹிந்த் !!வந்தே மாதரம்!!

மகாத்மா காந்தி வாழ்க !!

அவரது மதுமறுப்புக்கொள்கைவாழ்க!!

மதுவை ஒழிப்போம் !!

மதியை வளர்ப்போம் !!

வணக்கம்.வந்தனம். வாழ்வோம் 

வளமுடன். மது அருந்திட மனதாலும் 

நினைத்திடாத மனமுடன் வாழ்வோம்.

அன்புடன். மதுரை. T.R. பாலு.








No comments:

Post a Comment