Saturday, April 20, 2013

பூவுலக வாழ்க்கை யாருக்கு நிரந்தரம் ?



தமிழர்களாக வாழ்ந்திடுக !!

தமிழில் மட்டுமே பேசிடுக !!

          (தமிழர்களிடமாவது )




தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  நிலையாமை.

குறள் எண்:-  336.


"  நெருநல்உளனொருவன் இன்றில்லை என்னும் 

    பெருமை உடைத்துஇவ் வுலகு... ... ... ... ... ... ... ... ...



விளக்கம் :- நேற்றுவரை (உயிருடன்)

இருந்தவன்ஒருவன்,இன்றுஇல்லாமல்

இறந்துபோனான்என்று சொல்லப்படும்

நிலையாமை என்னும் பெருமைதனை 

உடையது இவ்வுலகம். திருவள்ளுவர் 

நமக்கு அளித்திட்ட குறளும் அதன் 

விளக்கமும் ஆகும் மேலே சொன்னது.


நாட்டு நடப்பு விளக்கம்:-  அன்பு மிகு 

தமிழ்நெஞ்சங்களே.உங்கள்அனைவ-

-ருக்கும் எனது உளமார்ந்த வணக்கம்.

இன்றைய தினம் நிலையாமை என்ற 

தலைப்பினை நான் ஏன் தேர்ந்து எடுத்-

-தேன் என்று சொன்னால்,இந்த வாரம் 

ஆரம்பத்தில் P.B.ஸ்ரீனிவாஸ், இரு நாள்

கழித்துமெல்லிசைமன்னர்கள்இருவர்

அவர்களுள் ஒருவர் இராமமூர்த்தி,பின்

நேற்றைய தினம் தொ.மு.ச. பேரவை 

பொதுச்செயலாளர் பதவிதனை பன்- 

நெடுங்காலமாக நிர்வகித்து வந்த 

முன்னாள் இராச்சிய சபை பாராளு-

-மன்ற உறுப்பினருமாகிய மறைந்த 

செ.குப்புசாமி, அதன் பின் தினத்தந்தி 

பத்திரிகையின் உரிமையாளர் சிவந்தி

ஆதித்தன் இதுபோல ஒவ்வொருவரும்

தங்களது பூவுலக வாழ்க்கைதனை

விடுத்துமரணம்அடைந்ததால்தான் 

திருக்குறள் விளக்கத்தில் இங்கே நான்

"நிலையாமை" என்ற அதிகாரத்தில் 

இருந்து ஒரு குறள் எடுத்து உங்கள் 

அனைவரது கவனத்திற்கும்  அந்த 

பாடலின் உட்பொருளை விளக்கி இந்த 

இன்றைய "குறள் விளக்கம்" என்னும் 

கட்டுரைதனை நான் நிறைவு செய்திட 

எண்ணலானேன்.


பொதுவாகஇந்தஉலக வாழ்க்கையில்

நாம்மிகமுக்கியமாகதெரிந்துகொள்ள

வேண்டிய விஷயம் என்னவென்றால் 

யாருக்கும் எதுவும் சொந்தம்என்பதும் 

இல்லை நிரந்தரம்என்பதும் கிடையாது 

இந்த முக்கியமான கூற்றினை மட்டும் 

நாம் தெரிந்துகொண்டோமேயானால் 

அது மட்டுமே போதுமானது நம்மை 

விட்டு நான் என்ற அகந்தை உணர்வும் 

எனது என்ற ஆணவத்தின் தன்மையும் 

விடை பெற்றுச்சென்று விடுவது நிஜம்.


ஆம் அன்பர்களே! இன்றைய தினம் 

மனிதமூளையில்இந்தஅகந்தை,ஆண-

வம்,எவரையும் வணங்கிடாத திமிர்,

தனக்கு இங்கே  மிகப்பெரும்பான்மை 

பலம் உள்ளது அதனால் எந்த முதுமை 

பெற்ற முழுமை அடைந்த எத்தனை 

பெரியவர்களையும் நான் மதித்திடத் 

தேவை இல்லை என்ற வெறி பிடித்த 

வேங்கையின் உணர்வுகளோடு வலம் 

வந்துகொண்டு இருக்கும் உயிருள்ள 

பிணங்களே !! நீங்கள் கிறித்துவக் 

கல்லறைத் தோட்டங்களுக்குச் சென்று 

பாருங்கள்அங்கேஎன்ன எழுதிவைக்கப் 

பட்டுள்ளது என்று :-


"இறந்தாரைஎன்றும் மறந்தார்இல்லை"

"இன்று உனக்கு! நாளை எனக்கு "


என்ற தங்கத் தகட்டினிலே வைர ஊசி 

கொண்டுஎழுதப்பட வேண்டிய வாசகம் 

ஒன்று வைக்கப் பட்டிருப்பது கண்டுமா

மனிதப் பதரே!உனது ஆணவம்,திமிர்,

இகழ்ச்சி நிறைந்த பார்வை,என்னவோ  

நீ மட்டுமே உயர்ந்தகுடியில் பிறந்தவர்

போலவும் உன்னைத் தவிர ஏனைய 

அனைத்து பிறவிகளும் மிகமிகத் 

தாழ்ந்தவர்க்கம் அதைச்சேர்ந்த உயிர்-

-களே என்று முடிவெடுத்ததை பறை

சாற்றிடும் உனது பார்வையின் மிடுக்கு 

அப்பப்பாஎன்னால்சொல்லி முடியாது.

மாற்றிக் கொள்ள வேண்டும் மானிடா.

உனது இந்தக் கேடு கேட்ட குணத்தை.

பட்டினத்தார் என்ன பாடிச் சென்று 

உள்ளார் என்பதனையும் நீ ஒவ்வொரு 

நாளும் நெஞ்சமதில் நிலைநிறுத்திக் 

கொண்டாயே ஆனால் போதுமானது 

அன்பர்களே.அதுதான் :-


"இன்றுஇறந்த பிணத்தைச் சுற்றிஇனிச் 

சாகும்  பிணங்கள்அழுகின்றதே"என்ற

சொற்றொடர்வழங்கியதன்மூலமாகக்

கூட நீ உணர மறுத்தாயேஆனால் நான்

நிச்சயமாகக்கூறுவதுஎன்னவென்றால் 

உனக்குநரகத்தினில்கூடஇடம் கிடைத்

திடாது.இதுவே உண்மை!!உண்மை !!

இந்த நிலை இன்னும் நீடிப்பது நிஜமாக

மடமை !! மடமையிலும்மடமை !!



மானிடா நீ இந்த உலகின் நிலையாமை 

பற்றிய உண்மைகளை உணரமறுப்பின் 

நீ உயிருடன்உள்ளஒருசெத்த பிணமே.


உன்னையே நீ எண்ணிப்பார். அவர் 

சொன்னார்.இவர் சொன்னார் என்று 

அறிவிழந்துதடுமாற்றம்அடைந்திடா

-மல் எவர் சொன்ன சொல் ஆனாலும் 

அதனை உனக்கே இயல்பான பகுத்து 

அறிவினால் நீ சிந்தித்துப்பார் என்று 

ஒரு அருமையான திரை ஓரங்க நாடக

வசனம் எழுதிய மறைந்த முரசொலி 

மாறன்அடைந்திட்டதுன்பத்தினைவிட 

இன்னும்வேறுஒருவர்அடையஉள்ள 


துயரம் எதுவும் இல்லை அன்பர்களே.


எனவே நான் இறுதியாக இந்தக் "குறள் 

விளக்கத்தின் " வாயிலாக உங்களில் 

அனைவருக்கும் வேண்டிவிரும்பிநான்

கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான்.

இன்றிருப்போர் நாளைஇங்கே இருப்ப-

-தென்ன உண்மை.இதை எண்ணாமல்

சேர்த்து பணம் காத்து என்ன நன்மை?

இருக்கும் வரை இன்பங்களை அனுப-

-விக்கும் தன்மை இல்லை என்றால் 

வாழ்வினிலே உனக்கு எது இனிமை "

என்ற நன்மை தரும் நல்லதொரு 

உண்மைக் கருத்தை உங்கள் நெஞ்சில் 

பதியம் வைத்தேன் என்ற ஆத்மார்த்த

திருப்தியோடு உங்கள் அனைவரின் 

பொற்கமல பாதங்களில் எனது பணிவு 

நிறைந்தவணக்கங்களைக் காணிக்கை 

செலுத்தி விடை பெறுகிறேன்.நன்றி!

வணக்கம்!!அன்பன் மதுரை T.R.பாலு.


No comments:

Post a Comment