Saturday, April 6, 2013

உண்மையான நட்பு செலுத்துபவர் யார் ?



தமிழனாக இரு!!         தமிழர்களிடம் தமிழில் பேசுக!!

                இது இன்று மிகவும் அவசியம்!!   


தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-    நட்பு.

குறள் எண் :-   786.


முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 

அகநக நட்பது நட்பு.. .. .. .. .. .. .. .... .... ...


வள்ளுவர் விளக்கம்:-  முகம் மட்டுமே மலரும்படி 

ஒருவர் ஒருவரிடம் கொள்ளும் நட்பு அது உண்மை 

நட்பு ஆகாது.   அவரது நெஞ்சம் மகிழும் வண்ணம் 

ஏற்படும் நட்பு மட்டுமே ஆத்மார்த்த நட்பு எனப்படும். 

இது வள்ளுவர் தரும் விளக்கம்.


நமது நாட்டு நடப்பு விளக்கம்:-  போன மாசம் எனக்கு 

நிறைய பண நெருக்கடி.  கொடுத்த காசோலைகள்  

எங்கே திரும்பிவிடுமோ என்ற பயத்தில் மாலை 

நண்பர்கள் மத்தியில் கவலைதோய்ந்த முகத்துடன் 

நான் இருப்பதைப் பார்த்து நண்பர்கள் கேட்க நானும் 

விஷயத்தை சொன்னேன்.  அப்போது ஒரு பணம் 

மிகுந்த நண்பர் ஒருவர் (அவருக்கு நான் அவர் இது 

போன்ற நிலையில்நிறைய உதவிகள் செய்திருந்தா-

லும் அதை நினையாமல் அவர் ) என்னப்பா ரிசர்வ் 

வங்கிக்கே தட்டுப்பாடா?

அப்படி இப்படின்னு சொன்னாரே ஒழிய உருப்படியா 

எல்லாம் செய்ய அவருக்கு வழி இருந்தும் ஒன்றும் 

செய்யவில்லை. சே! உனைப் பார்த்தாலே ரொம்ப 

மனக் கஷ்டமா இருக்குப்பா என சொல்லிவிட்டு 

எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு நான் அப்புறம் 

பார்க்கிறேன்என சொல்லி போய்ட்டாருங்க. ஆனால் 

அதே சமயம் எனது இன்னொரு உயிர் நண்பர் அவர் 

விஷயம் கேட்டு உனக்கு இப்ப எவ்வளவு உடனடியா 

வேண்டும் என கேட்டதோடு என்னை அவரது மிக 

நெருங்கிய உறவினரிடம் கூட்டிச் சென்று ஆவன 

அனைத்தும் செய்ததுடன் எனது மானத்தையும் 

அவர் காப்பாற்றி காசோலைகள் திரும்பிடாத 

வண்ணம் கூடவே இருந்து அனைத்து உதவியும் 

செய்த அவரது செயலால் எனது நெஞ்சம் மகிழ்வு 

அடைந்தது..இதுதான் வள்ளுவன் சொன்ன அக நக 

நட்பது நட்பு என்பது.  மீண்டும் நாளைசந்திப்போமா ?

நன்றி வணக்கம் .

அன்புடன் மதுரை TR. பாலு.

No comments:

Post a Comment