Thursday, April 4, 2013

செய்த நன்றியினை மறவாதே !!

தினம் ஒரு திருக்குறள் !!  


            அதிகாரம்  :-  செய்ந்நன்றி அறிதல்.

         குறள் எண்   :-   1௦2.



       "  காலத்தி னார்செய்த நன்றி சிறிதெனினும் 

            ஞாலத்தின் மாணப் பெரிது "


விளக்கம் :-    உற்ற காலத்தில் ஒருவர் நமக்கு செய்த 

உதவி அளவில் சிரியதாக இருந்தாலும் அதன் 

தன்மையை ஆராய்ந்தால் அது இந்த 

உலகத்தைவிட மிகப்  பெரியதாகும். இது வள்ளுவர் 

வாக்கு.


நாம் தரும் நாட்டு நடப்பு விளக்கம் :- 

வீட்டை விட்டு காலையில் அலுவலகம் செல்ல மிக   

அவசரமாக கிளம்பியதில் பணம் உள்ள பை தனை 

(MONEY PURSE) எடுத்துவைக்க மறந்தாச்சு. பசி கப 

கபன்னு எடுத்ததாலே மாடர்ன் ரெஸ்டாரென்ட் 

போய் இட்லி,வடை,தோசை,காபி சாபிட்டாச்சு. பில் 

சப்ளையர் கொடுத்தாச்சு.  பணம் ரூபாய் என்பது என

கால் சட்டைக்குள் கைவிட்டால் கைக்குட்டை தவிர 

வேறு ஏதுமில்லை. கைபிசைந்த நேரம். அப்போது 

அங்கே வந்தான் பால்ய சிநேகிதன் பாலகிருஷ்ணன்  

என்னடா மாப்பிளை ஆளையே பார்க்க முடியலே 

என நண்பன் நடராஜனிடம் கேட்க உடனே நண்பா 

பர்சை வீட்டிலே மறந்து வச்சுட்டேண்டா.ப்ளீஸ். 

என கேட்டவுடன் அடக் கடவுளே.என்னடா இந்தக் 

காலத்திலே இப்படி இருக்கே என்று கேட்டு ஒரு 

நூறு ருபாயை தந்தான் பாருங்க  அது மட்டும் 

இல்ல.வேற ஏதாவது ரூபாய் வேண்டுமான்னு 

கேட்டாம்பாருங்க அது.  ஒரு கோடி ரூபாய்க்கு சமம்.



வீட்லே பர்சிலே ஆயிரம் ரூபா இருக்கலாம்  

அது அல்ல பிரச்சினை இப்ப. அந்த நேரத்திற்கு 

அவன் வந்து செய்த உதவியை நாம எப்பவும் மறக்க 

கூடாதுங்க. என்ன நான் சொல்றது? சரியா? மறுபடி 

நாளைக்கு பாப்போம். போயிட்டு வாறேங்க !!   

அன்புடன் மதுரை TR. பாலு.



தமிழனாக இருங்கள் !!       தமிழிலேயே பேசுங்கள் !!

                     இது இப்போது மிகவும் அவசியம் !!

No comments:

Post a Comment