Wednesday, March 27, 2013

மிகப் பெரும் செல்வம் எது ?

தினம் ஒரு திருக்குறள் !!


அனைவருக்கும் வணக்கம் !  இன்றைய தினம் நான் 

உங்களது சிந்தனைக்கு தரும் குறளும் அதன் 

விளக்கமும் என்ன என்றால் :-


அதிகாரம்  :-  கேள்வி 

குறள் எண் :-  411.



செல்வத்துள்செல்வஞ்செவிச்செல்வம்அச்செல்வம் 

செல்வத்து ளெல்லாந் தலை .



செவியால் கேட்டு அறியும் செல்வம்,

செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப் படும் 

செல்வமாகும்.அதேசமயம்அந்தசெல்வம்அனைத்து 

செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

இது வள்ளுவன் வாக்கு. 


 இதை நான் மற்றும் ஒரு கோணத்தில் பார்க்கிறேன். 

 எப்படி என்றால் புலன்கள் ஐந்து.


 அவை யாதெனின் கண்டு கேட்டு 

உண்டு நுகர்ந்து உயிர்த்தல் எனப் படுபவையே 

ஆகும். இவைகளில் கேட்கும் திறன் உடைய

செவியைத் தவிர ஏனைய நான்கு புலன்களையும் 


வேறு எந்த துணையும் இன்றி நாமாகவே  தடை

செய்திட இயலும். அடக்கிவைத்திட முடியும். 


எப்படி என்றால் பார்க்க வேண்டாம் என்று முடிவு 

செய்தோமேயானால் நாம் நமது கண்களை இறுக 

மூடிக் கொண்டால் போதுமானது.

அதேபோல நுகர வேண்டாம் என்றால் மூச்சினை 

இழுத்து பிடித்து அடக்கி கொள்ளலாம்.

அதேபோலஉண்ண/பேச  வேண்டாம் எனில் வாயை 

திறக்காமல் மூடிக் கொண்டால் போதுமானது.

அதேபோல உயிர்த்தல்/தொடுதல் உணர்ச்சி 

வேண்டாம் என்றால் கைகளை கட்டுப்பாட்டில் 

வைத்துகொண்டால் போதுமானது.

ஆனால் இந்த கேட்டல் புலன் இருக்கிறதே 

அப்பப்பா நான் என்ன சொல்ல! இந்த புலனை 

அடக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்தால் 

கைகளின் துணை இன்றி முடியாதய்யா !

முடியவே முடியாது!!  அதனால்தானோ என்னவோ 

திருவள்ளுவர் இந்த செல்வத்தினை தலையானது 

என்று ஒருவேளை சொல்லி இருப்பாரோ?


யான் அறிந்திலேன் பராபரமே!! நன்றி வணக்கம் !!

அன்புடன் மதுரை T.R.பாலு.


(பின் குறிப்பு:-  எனது இந்த எழுத்துப் பணிக்கு 

நேயர்களாகிய நீங்கள் ஒருவார காலம் எனக்கு 

விடுமுறை அளித்திட வேணுமாய் பணிவன்புடன் 

கேட்டுக் கொள்கிறேன்.  ஏன் என்றால் எனது இடது

கண் பிறை நீக்குதல் அறுவை சிகிச்சை இன்று 

வியாழக்கிழமை (28-03-2013) காலை எட்டு மணி 

அளவில் நடைபெற இருப்பதினால் அவசியம் 

தவறாது ஓய்வு எடுத்திடல் வேண்டும் என எனது 

மருத்துவ குழுவினர் பணித்திருப்பதினால் நான் 

இந்த வேண்டுகோளை உங்கள் முன்வைக்கிறேன்.

அருள்கூர்ந்து எனது வேண்டுகோளை ஏற்று எனக்கு

ஒருவார கால விடுமுறை அளிப்பீர்கள் என்று நம்பி 

எனது இந்த கடிதத்தினைநான்நிறைவு செய்கிறேன்)

No comments:

Post a Comment