Monday, March 25, 2013

செல்வத்தினை இழந்தவனின் நிலைமை !!


தினம் ஒரு திருக்குறள்



.
அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம்.

இன்று நான் உங்கள் சிந்தனைக்கு தரும் குறளும் 

விளக்கமும்:-


        அதிகாரம் :- மானம் 

       குறள் எண் :- 964,

  தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

  நிலையின் இழிந்தக் கடை..

 .. .. .. .. .. ..
சமுதாயத்தில் மனிதன் செல்வம் செல்வாக்கோடு கூடிய நிலையில் வாழ்ந்திடும் போது அவன் உயர்வாக மதிக்கப் படுகிறான்.

ஆனால் அதே மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் விதிவசத்தால் தசா புத்தி மாற்றங்களினால் செல்வம் இழந்து செல்வாக்கு சரிந்து ஏழ்மை நிலைக்கு தள்ளப்படும் போது  இதே சமுதாயம் அவனை மதிக்காதது மட்டுமின்றி கேவலமாக பார்த்து தூற்றும் நிலைதனை அடைகிறான்.

இந்த நிலைக்கு வள்ளுவன் காட்டும் உதாரணம் மிக அருமையிலும் அருமை. தலையில் முடி உள்ளவரை அதை மதித்து வளர்த்து அழகு பார்க்கும் அதே மனிதன் அந்த முடி உதிர்ந்து கீழே விழுந்துவிட்டால் எப்படி மதிக்காமல் அதை கேவலமாக பார்கிறான் என காட்டும் உதாரணம் மிகச் சிறந்தது. நாமும் அதை கண்டு நம் செல்வ நிலை சரியாமல் இருக்க மது,மாது சூது இவைகளில் மனம் நாடாமல் இருக்க பழகிக் கொள்ளவேண்டும்

.நன்றி வணக்கம்.மதுரை T.R.பாலு.மீண்டும் நாளை சந்திப்போம்!

No comments:

Post a Comment