Thursday, March 14, 2013

மழையின் சிறப்பு !!

தினம் ஒரு திருக்குறள் !! 


அனைவருக்கும் வணக்கம். இன்று நான் உங்கள் 

அனைவரின் சிந்தனைக்கு தரும் குறளும் அதன் 

விளக்கமும்  என்ன என்றால் வான் சிறப்பு என்னும் 

அதிகாரத்தில் வரும் ஒரு குறள். பாடலை பார்க்கும் 

முன்னர் ஒரு விஷயத்தை நாம் இங்கே கேட்போமா 

நேயர்களே !

எங்கே நேர்மை அரசாளுகிறதோ எங்கே அந்த 

நாட்டின் அரசன்/அரசி முழுமனதுடன் மக்கள் 

வளமே தனது  சுகமே என்று நினைத்து தனது 

குடும்பத்தைக்கூடகவனிக்காமல்ஆட்சிசெய்கின்ற-

னரோ அந்த நாட்டில் மாதம் மும்மாரி மழைபெய்த 

வரலாறு  சேர,சோழ,பாண்டியர் காலங்களில் 

வேண்டுமானால் நடைபெற்றிருக்கலாம். ஆனால் 

இப்போது நடைபெறும் கலி காலத்தில் வானம் 

வசப்படாமல் வறண்டுபோய்விடுமாம். அந்த நிலை 

தான் இன்று நம் நாட்டில் காணப்படுகிறது. சரி நாம்  

இப்போது குறள் மற்றும் அதன் விளக்கத்தினை 

பார்ப்போமா நேயர்களே !

                           அதிகாரம் :-   வான் சிறப்பு !! 

                          குறள் எண்:-    15 


    கெடுப்பதூ உங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றங்கே 

    எடுப்பதூ உம் எல்லாம் மழை .... ... .. ...


பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்யாமல் (உழவர் 

பெருமக்களின்) வாழ்வினைக் கெடுக்க வல்லதும் 

இந்த மழைதான்.  அப்படி பருவத்தில் மழை ஏதும் 

இல்லாமல் வாழ்க்கை கெட்டு தங்கள் வளம் கெட்டு  

நொந்து போனவர்களுக்குத் துணையாக  அதற்கு 

அடுத்த பருவத்தில் நன்கு குளிர மழை பெய்து 

அவர்களுக்கு துணையாய் அவ்வாறே காக்க 

வல்லதும் இதே மழைதான் என்று தெய்வப் புலவர் 

திருவள்ளுவர் அருளிச் சென்ற குறளின் ஆழ்ந்த 

கருத்தினை படித்து உணர்ந்திடுவோமா நேயர்களே 


மீண்டும் நாளை அடுத்த குறள் விளக்கத்தில் உங்கள் 

அனைவரையும் சந்திக்கிறேன். நன்றி வணக்கம்.


அன்புடன் மதுரை T.R.பாலு.

            

No comments:

Post a Comment