Thursday, March 14, 2013

அடுத்தவர் மனைவி மீது ஆசை பட்டவர் நிலைமை !!

தினம் ஒரு திருக்குறள் !! 


                       அதிகாரம் :-   பிறனில் விழையாமை.

                      குறள் எண் :-   143.


  
    விளிந்தாரின் வேறல்லர் மற்ற தெளிந்தாரில் 

     தீமை புரிந்து ஒழுகுவார்.. .. .. .. .  ..  .  .  . .. .. .. .. .. 


அன்புமிகு நேயர்களே !


வான்புகழ் வள்ளுவனுக்கு ஏனைய புலவர்களைப்
  
போலன்றி தெய்வப் புலவர் என்னும் சிறப்பு பட்டம் 

எதனால்வழங்கப்பட்டிருக்கக்கூடும் என்ற சிந்தனை 

எனது மனதில் பன் நெடுங்காலமாக ஓடிக்கொண்டு

இருந்தது.ஒரு நாள் அதற்கு விடையும் கிடைத்தது.

அதைப் பற்றி குறள் விளக்கத்தின் இறுதியில் நான் 

உங்களுக்கு சொல்கிறேன்.இப்போது விளக்கத்தை 

பாப்போம்:-

நம் மீது எவ்விதமான ஐயமுமில்லாமல் தெளிவாக 

நம்மை நம்பியவருடைய  மனைவி இடத்தே 

விருப்பம் கொண்டு அவளிடம் தீமையைச் செய்து 

நடப்பவர் உண்மையில் உயிருடன் இருப்பினும் 

செத்துப் போனவரை விட வேறுபட்டவர் அல்லர்.

இது வள்ளுவர் நமக்கு அருளித் தந்த குறளும் அதன் 

விளக்கமும்.


அதாவது அவர் நமக்கு தந்த 1330 குறள்களிலும் 

நமக்குச் சொன்ன விஷயங்களோ கருத்துக்களின் 

தொகுப்பினையோ அல்லது சம்பவங்களின் 

உண்மைகளை அவர் தனக்கு தான் நேரடியாக 

எந்த காலத்தேயும் சந்திக்காமல் இது இப்படித்தான் 

என தனது ஆழ்ந்த தெளிந்த அறிவின் முதிர்ச்சி 

காரணமாக நமக்கு மனிதகுலத்திற்கு எடுத்து 

தந்தாரே அந்த அவரது சிறந்த குணத்தின் வெளிப் 

பாடு பயனாகவே அன்னாருக்கு "தெய்வப் புலவர்"

என்ற பட்டம் வழங்கப் பட்டு இருக்கலாம் என்றே 

நான் கருதுகிறேன்.

மீண்டும் அடுத்த குறள் விளக்கத்தில் சந்திப்போமா!!

நன்றி வணக்கம்.

அன்புடன் மதுரை T.R.பாலு.



No comments:

Post a Comment