Sunday, March 17, 2013

செல்வத்தின் சிறப்பு !!


தினம் ஒரு திருக்குறள் !!

அனைவருக்கும் காலை வணக்கம். இன்று நான் உங்கள் சிந்தனைக்கு தரும் குறளும் அதன் விளக்கமும் கீழ் கண்டவாறு”-

        அதிகாரம் :-   பொருள் செயல்வகை.
   குறள் எண்:-   751

 பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
 பொருளல்லது இல்லை பொருள்.. .. .. .. . .
.
இந்த குறள் செல்வத்தையும் அதன் சிறப்பையும் விளக்குவதாக தெய்வ புலவர் திருவள்ளுவர் அமைத்து உள்ளார்.

அதாவது மனிதனுக்கு அடிப்படைத்  தேவையான மூளை சிறிதளவும் இல்லாத, சரியான சிந்திக்கும் ஆற்றல் பெறாத, பகுத்துஅறியும் திறன் அற்ற ஒருமனித உருவத்தை  பணத்தால்  மட்டுமே  அவனை இந்த சமுதாயத்தில்  ஒரு பொருளாக/ஒரு பெரிய மனிதராக நம்மிடையே காட்ட இயலும் ஆற்றல் கொண்டது இந்த பணம் மட்டும்தான்.
இந்த பணத்தை தவிர அந்த முட்டாள் பணக்காரனை வேறு எந்த பொருளாலும் பெரிய மனிதராக காட்ட முடியாது என்பதனை ஆணித்தரமாக கூறுகிறார் நமது தமிழ்த்தாய் பெற்றுஎடுத்த தலை மகன் தெய்வப்புலவர் திருவள்ளுவப் பெருந்தகை.

அவர் சொன்ன இந்தகருத்தை நாமும் மனதில் பதியவைத்து பணத்தின் முக்கியத்துவத்தை  அறிந்து வாழ்வில் நடந்துகொள்வோம்.

நன்றி! வணக்கம் !! மீண்டும் நாளை அடுத்த  குறள் விளக்கத்தில் சந்திப்போமா நேயர்களே என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே!  மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment