Friday, April 5, 2013

துன்பம் வரும்போது என்ன செய்ய வேண்டும் !!

எதையும் தாங்கும் இதயம் எது ?  
  
  
அதிகாரம்:- இடுக்கண் அழியாமை.

குறள் எண் :- 621.



இடுக்கண் வருங்கால் நகுக அதனை 

அடுத்தூர்வது அக்தொப்பது இல்........



வள்ளுவர் தரும் விளக்கம்:-  துன்பம் நமக்கு வரும் 

போது அதற்காகக் கலங்காமல் நகுதல் (சிரித்த 

முகத்துடன் இருக்க) வேண்டும். ஏன் என்றால் அந்த 

துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெற்றி கொள்ளக் 

கூடியது அதைபோன்றது வேறு எதுவும் இல்லை. 

இது வள்ளுவன் வாக்கு.


நமது நாட்டு நடப்பு விளக்கம்:-  

ஒரு செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த ஒரு மிக 

நல்ல மனம் படைத்தவர் காலச் சூழ்நிலையின் 

காரணமாக ஒவ்வொன்றாக இழந்து மிகவும் துன்பம்  

அடைந்த நிலையில் இருக்கும் போது அன்று இரவு 

அவர் கண்டகனவில் ஒரு காட்சி தெரிந்தது. 


நாங்கள் அஷ்ட இலட்சுமிகள் இதுநாள்வரை 

உங்களுடன் இருந்து வந்தோம்.நாங்கள் யாரிடமும் 

நிரந்தரமாக இருந்திட முடியாது.இருந்திடக் கூடாது. 

அதனாலேயே எங்களுக்கு செல்வம்/செல்வோம் 

என்னும் பெயர் விளக்கம் கூட உண்டு.  


ஆகவே நாளை நாங்கள் எட்டு இலட்சுமிகளும் 

நேரில்ஒவ்வொருவராக உங்களிடம் வந்து 

விடைபெற்று செல்ல இருக்கிறோம் என கனவு 

கண்டார். கனவில் கண்டதுபோலவே நினைவிலும் 

காலைஒவ்வொருஇலட்சுமிகளாகநேரில்வந்து 

அவரிடம்விடைபெற்றுசெல்லத்துவங்கினர். 

முதலில் சுவர்ண இலட்சுமியில் துவங்கி 

ஒவ்வொருவராக விடை பெற்றுச் செல்ல அவரும் 

சிரித்த முகத்துடன் நன்றி பாராட்டி அவர்களை 

வழி அனுப்பிக் கொண்டே இருந்தார். ஏழு 

இலட்சுமிகளும் விடைபெற்று செல்ல ஆயத்தம் 

ஆன நிலையில் கடைசி இலட்சுமியான தைரிய 

இலட்சுமி விடைபெறும் நோக்குடன் வர இந்த 

மனிதரோ அவர்கள் ஏழு இலட்சுமிகளும்போய்  

விடட்டும். எனக்கு கவலை இல்லை.  ஆனால் நீ 

மட்டும் (தைரிய இலட்சுமி)என்னுடன் தான் இருக்க 

வேண்டும் உனக்கு செல்ல நான் அனுமதி தர இயல 

வில்லை என்று சிரித்த முகத்துடன் பதில் சொன்ன 

உடன் அதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஏனைய 

ஏழு இலட்சுமிகளும் மீண்டும் அந்த முன்னாள் 

செல்வந்தரிடம் வந்து சேர்ந்துகொண்டனர் என்று 

எனது தந்தையார் அவர்கள் நான் சிறுவனாக இருந்த 

போது கூறிய கதை இன்றும் எனது நினைவின்பால் 

இப்பொது வருகிறது நேயர்களே. நீங்களும் இந்த 

திருக்குறள் விளக்கத்தினில் வருவது போல எந்த 

துன்பம் வந்தாலும் கலங்காமல் சிரித்த முகத்துடன் 

அதனை அணுகி அந்த துன்பத்தை வென்று 

வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று 

வாழ்ந்திட நான் அனுதினமும் வணங்கி வரும் 

மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் மற்றும் திருச்செந்தூர் 

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியையும் வேண்டி விரும்பி 

கேட்டுக் கொண்டு வாழ்வோம் வளமுடன் என்று 

சொல்லி நன்றி பாராட்டி விடை பெறுகிறேன்.    


வணக்கம்.

அன்புடன் மதுரை TR.பாலு.  
                                                                                                             
                                                                தமிழர்களிடமாவது
தமிழனாக இருங்கள்.            தமிழிலேயே பேசுங்கள்.

                      இது இப்போது மிகவும் அவசியம்.

No comments:

Post a Comment