Friday, April 19, 2013

நட்பினில் நமக்குத் துன்பம் தருவது யார் ?



தமிழர்களாக வாழ்ந்திடுக !!

தமிழிலேயே உரை நிகழ்த்திடுக !!

 (தமிழர்களிடமாவது)



தினம் ஒரு திருக்குறள் !!


அதிகாரம் :-   தீ நட்பு.

குறள் எண்:-  819.


"  கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு 

    சொல்வேறு பட்டார் தொடர்பு "... ... ... ... ... ... ...



விளக்கம் :-   செய்கின்ற செயல் வேறாகவும் 

சொல்கின்ற சொல்வேறாகவும் உள்ளவரின் 

நட்பு, அவரிடம் நட்புக் கொள்பவருக்கு அவர் 

காணும் கனவிலும்கூட அவருக்குத் துன்பம் 

தருவதாகவே அமையும்.  இது வான்புகழ் 

திருவள்ளுவர் நமக்கு அளித்திட்ட குறளும்

அதன் விளக்கமும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம்:-   ஒரு நாட்டில் ஒரு 

மாநிலம். அங்கே வந்தது சட்டமன்றத் தேர்தல்.

மிகப் பெரும் பலம் வாய்ந்த கட்சிகள் இரண்டு 

என்ற போதிலும் அந்த இரண்டில் எது ஆளும் 

கட்சி என்பதை தீர்மானிக்கும் அளவு  கணிசமான 

ஒட்டு வங்கியை தன்வசம் வைத்து இருந்தது 

ஓரு நடிகர் கட்சி.  நான் இங்கே எந்தப் பெயரையும் 

குறிப்பிட விரும்பவில்லை.  அதில் இந்த நடிகர் 

கட்சி என்ன செய்தது என்றால் அந்த தேர்தலில் 

அரசியலில் பழுத்த அனுபவம் பெற்ற கட்சித் 

தலைமையோடு நட்பு பாராட்டாமல் கூட்டு 

வைத்துக்கொண்டிருக்கும்எந்த கட்சியையும் 

குழிதோண்டி புதைத்திடத் தெரியாத  அந்தக் கட்சி 

கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்தபோது இந்த 

நடிகரது திருமண மண்டபத்தின் ஒரு சிறுபகுதியை 

மேல்பாலம் கட்டுவதற்காக கையகப்படுத்தி

அந்த நடிகருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்திய 

எண்ணத்தை நெஞ்சில் நிறுத்தியதன் விளைவு  

மற்றும் ஒரு சம பலம் உள்ள ஒரு நஞ்சு ஒன்றினை 

தனது நெஞ்சினில் வைத்துச் செயல்படும் அந்தக் 

கட்சித் தலைமையோடு தேர்தல் உடன்பாடு செய்து 

கொண்டது.  அரசியலில் பழுத்த அனுபவம் உள்ள 

கட்சி,தன்னை நம்பியவர்களை மோசம் செய்யாமல் 

தன்னுடன் கூட்டு வைத்துகொண்டவர்களை எந்த 

காலத்தும்கெடுக்காமலும்மட்டுமேகடந்த 6௦ ஆண்டு 

களுக்கும் மேலாக அந்த மாநிலத்தில் அரசியல் 

செய்து வந்துள்ளது. இனிக்க இனிக்க பேசத்தெரியா

கட்சி.அதுபோலநம்பிக்கைத்துரோகம்செய்யவும் 

தெரியாத கட்சி.  ஆனால் இந்த நடிகர் கட்சிக்கு 

என்ன கேட்ட நேரமோ தெரியவில்லை. மற்றும் 

உள்ள இவர் தேர்தலில் கூட்டு ஏற்படுத்திக்கொண்ட 

ஒருகட்சியோ பார்க்க தேன்போல இருந்து சிரித்து 

சிரித்துப்பேசிநல்லவர்போல்வெளிக்காட்டிகொண்டு 

மகிழ்ந்து உள்ளத்தில் நஞ்சும் உதட்டில் தேனும்

வைத்துப் பேசி நடிகரின் மனைவியை மதிதனை 

மயக்கி தேர்தல் கூட்டணி வைத்து போட்டி இட்டு 

வென்று ஆட்சியையும் கைப்பிடித்து விட்டது.  


அதன் பிறகு ஆறு/ஏழு மாதங்கள் சென்று விட்ட 

பிறகு இந்தமுறை தேர்தல் நடைபெற்ற நேரம் 

கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றினில் 

பறக்க விடப் பட்டது கண்டு கொதித்து எழுந்த 

அந்த வெற்றியையும் காந்தத்தினைபோல 

எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் பேச்சு ஆற்றல் 

கொண்ட அந்த நடிகர்,  ஆளும் கட்சியையும் அந்த 

மாநிலத்தை நிர்வாகம் செய்யும் தலைமையையும்

எதிர்த்து, சொல்வேறு செயல்வேறாகவும்  உள்ள 

நிலைமைதனை விளக்கி பல்வேறு இடங்களிலும் 

பொதுக்கூட்டங்களில்உரைநிகழ்த்தியதன் விளைவு 

அந்த நடிகர் மேல் இருபதுக்கும் மேலான கட்சித் 

தலைமையை (ஆளும்) அவமதிப்பு வழக்குகள். 

இதன் காரணமாக அலைக்களிக்கப்படும் நிலை.

இவருடைய  மாமன்ற உறுப்பினர்கள் பலருக்கு 

எலும்புகளைப்போட்டதால் வாலாட்டத்துவங்கி 

கட்சி தாவி கட்சி மாறிய விசுவாசம்.


இது போதாது என்று இவரது கட்சி மாமன்ற 

உறுப்பினர்கள் பலர் மீது மாமன்றத்தின் உள்ளே 

நுழைய மறுத்து ஏழு,எட்டு மாதங்களுக்கும் மேலாக 

தடை உத்தரவு இது போல இன்னும் எத்தனை 

எத்தனயோ துன்பங்கள் துயரங்கள் எல்லாம் 

அந்த நடிகருக்கு இப்போது. இது தேவையா?

நட்பு செய்திடும்போது ஆராய்ந்திடாமல்செய்திட்ட 

நட்பு தந்த துன்பங்களையும் துயரங்களையும் 

பார்த்தீர்களா அன்பர்களே!!


இந்த துன்பங்கள் நடிகரது கனவிலும் தொடர்கிறது 

பாவம் அவர் நன்கு தூங்கியே மாதங்கள் பல ஆகி 

விட்டது நண்பர்களே. இந்த நிலை இந்த நடிகருக்குத்

தேவையா? நீங்களும் உங்கள் வாழ்வில் இதுபோல 

மாட்டிக் கொள்ளாமல் நல்லவர்கள் யார் நய 

வஞ்சகர்கள் யார்  என்று சிந்தித்து சீர்தூக்கி 

திருவள்ளுவர் தமது மேலேசொன்ன குறளில் 

கண்டது போல தீயவருடன் தீநட்பு சேராமல் 

நல்லவருடன் மட்டுமே கூட்டு சேர்ந்து செயல்பட 

வேண்டுமாய் கேட்டு விடை பெறுகிறேன்.  நன்றி!!

வணக்கம் !!

No comments:

Post a Comment