Thursday, April 25, 2013

பிற்காலத்தே உதவிடும் அருள்நிதி சேமிப்பது எப்படி ??




தமிழர்களாக வாழ்ந்திடுங்கள் !!

தமிழில் மட்டுமே பேசிடுங்கள் !!

                    (தமிழர்களிடமாவது )




தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  ஈகை .

குறள் எண் :-   226.



அற்றார் அழிபசிதீர்த்தல்அக்தொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி... ... ... ... ... 


விளக்கம் :- வறியவன்  ஒருவரது கடும்

பசியைத் தீர்க்க வேண்டும்.  அதுவே 

பொருள் உடைய ஒருவன் அந்தப் 

பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் 

உதவுமாறு சேமித்து வைக்கும் இடமா-

-கும்.   இது திருவள்ளுவர் நமக்கு தந்த

குறளும் அதன் பொருளுமாகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம்:-  எல்லா

மக்களுக்கும் இனிய வணக்கம். இங்கே 

உரித்தாகுக.  இன்று வள்ளுவன் தந்த

மேலே சொன்ன குறளுக்கு நாம் தரும் 

நாட்டு நடப்பு விளக்கம் என்னவெனில் 

இன்னைக்கு பாத்தீங்கன்னா எங்கே 

பாத்தாலும் ஒரே "அம்மா உணவகம் "

தானுங்க. ஏனுங்கசாதாரண கடையில் 

கூட ஐந்து ரூபாய்க்கு குறைவு இன்றி 

இட்லி விற்கப்படும் இந்த நாளில் அரசு 

ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி கொடுத்து 

அஞ்சு ரூபாய்க்கு அருமையான நல்ல 

சாம்பார் சாதம்,அப்புறம் ஒரு மூன்று 

ரூபாய்க்கு தயிர் சாதம். எவ்வளவு ஒரு 

அருமையான மக்களுக்கு நலம் தரும்

ஏழை,எளிய மக்களின், வறுமைக் 

கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் பசியால் 

வாடிடும் பாமரமக்களின் கடும் பசியை 

தீர்க்கும் பெரு முயற்சி.  இந்த நல்ல 

செயல்செய்ததாலே அரசு அதன் பிற்கா

-லத்திற்கு(எதிர்வரும்தேர்தலில் பொது

மக்களால் வேறு பிரச்சனைகளால் 

இந்த அரசுமீது வெறுப்பு அடைந்து 

ஆளும்கட்சியைதோற்கடித்து விடும் 

போது அதற்கு அடுத்த ஐந்து ஆண்டு

காலத்திற்கு தோல்விதனைத் 

தழுவினால், எதிர்கட்சியாகவோ 

அல்லது எஞ்சிய கட்சியாகவோ 

இங்கிருக்க)  தேவையான நல்லதொரு 

"புண்ணியத்தை" சேமித்து வைத்திடும் 

இடமாகும் இந்த உணவகம் என்பதே 

இன்றைய "தினம் ஒரு திருக்குறள்" 

பகுதியில் வெளிவந்த குறளுக்கு நாம் 

தரும் "நாட்டுநடப்பு விளக்கமாகும்."




No comments:

Post a Comment