Tuesday, April 9, 2013

விலை மகளிரது குணங்கள் !!



 தினம் ஒரு திருக்குறள் !!


அதிகாரம்  :  வரைவின் மகளிர்.


குறள் எண் ; 913.

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

 ஏதில் பிணந்தழீ இ யற்று.


 வள்ளுவர் விளக்கம்:-  

நம்மிடம் உள்ள பொருளை (பணத்தை) மட்டுமே 

விரும்பிடும் பொது மகளிரின் (விலை மாதர்களின்)

பொய்மைத்தனமான தழுவுதல்(நம்மைஅணைத்துக் 

கொள்ளுதல்,)எதற்கு ஒப்பாக இருக்கும் என்றால் 

ஒருஇருட்டுஅறையில்தொடர்பேஇல்லாதமுன்பின்

அறிந்திடாத ஒரு செத்த பிணத்தைத் தழுவுதல் 

போன்றது. இது வள்ளுவர் நமக்கு அளித்திட்ட 

குறளும் விளக்கமும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  அதுஒருமிகப் பெரிய 

நவநாகரீக மங்கையர்களும் பெரிய பணம் மிகுந்த

செல்வந்தர்களும் ஒருசேர வாழ்ந்து வரும் மிகப் 

பெரும் நகரம்.  மாலைநேரம்வந்துவிட்டால்போதும்

எங்கே பார்த்தாலும் கூத்தும் கும்மாளங்களும் ஒரு 

சேர ஆட்டமும் பாட்டமும்தான்.  இப்படிப்பட்ட 

இடங்களுக்கு யார் வருவார்கள் ?  நான் பொதுவாக 

சொல்வேன்.உலகத்தில் இருப்பது இரண்டே ஜாதி 

என்று. இது எங்களுக்கு தெரியாதா. ஆண்,பெண் என 

நினைப்பீர்கள். அதுதான் இல்லை.  தம்மிடம் உள்ள

நிரம்பிவழியும் பணத்தை எப்படி செலவழிப்பது என

திணறுபவர்கள் ஒன்று.  அன்றாடம் உயிர் வாழ 

எப்படி பணத்தை சம்பாதிப்பது என்று திகைப்பது 

மற்றொன்று.  ஆக இதில் முதல் ஜாதி மனிதர்கள் 

தங்களிடம் உள்ள பணத்தை திரவியத்தை நல்ல 

விஷயங்களுக்கு செலவு செய்திட இவர்களுக்கு 

மனம் வருவது கிடையாது. ஆனால் இதுபோன்ற 

குடியும் கூத்தும் ஆட்டம் பாட்டம் இவைகளுக்கு 

தாரளமாக செலவு செய்திடுவார்கள்.  இதைத்தான்

சங்ககால பாடல் ஒன்று எப்படி குறிப்பிடுகிறது 

என்றால் :-


இம்மையில்அறம்செய்யாதோர்திரவியம்சிதற
                                                                                      வேண்டி 
நம்மையும்கள்ளும்சூதும்நான்முகன்படைக்கலானா
                                                                                                      ன்.

விளக்கம்:- இந்த உலகத்தில் நல்ல விஷயங்களுக்கு 

செலவு செய்து அறத்தை தேடாதோர்களது செல்வம் 

சிதருவதர்காகவே நம்மையும் (விலை மகளிர்கள்)

கள்ளும் (விஸ்கி,பிராந்தி)சூதும் (குதிரை ரேஸ்,

லாட்டரி சீட்டு) நான்முகன் எனப்படும் பிரம்மா 

படைத்திட்டான் என்று ஒரு விலை மாதரின் தாய்க் 

கிழவி பாடுவதாக அந்தப் பாடல் அமையப்பெற்றது.


நான்எதற்காகஇன்றுஇந்தக்குறளை தெரிந்து எடுத்து 

அதனை குறள் விளக்கம் வலைபதிவில் சேர்த்து 

உள்ளேன் என்றால் அதற்கு காரணம் உள்ளது. நம் 

சென்னை போன்ற பெருநகரங்களில் நான் மேலே 

சொன்ன விலை மகளிர்கள் அங்கொன்றும் 

இங்கொன்றுமாக இருந்த நிலை போய் எங்கெங்கு 

காணினும் அவர்களடா என்ற நிலைக்கு இந்த 

நகரம் தள்ளப்பட்டு ஆண்டுகள் பத்துக்கு மேல் 

ஆயிற்று. அவர்களது மயக்குகின்ற பார்வையில் 

இந்தக் கால இளைய சமுதாயத்தினர் இவர்களிடம்  

வீழ்ந்துவிடல் கூடாது என்ற சீரிய முயற்சியினால் 

எழுந்த ஒரு உத்வேகம் இப்படி ஒரு விளக்கம் தர 

என்னை எழுதிடத் தூண்டியது.ஒரு மனிதன் தனது 

பணத்தை இழந்தான் என்றால் எதையும் அவன் 

இழக்கவில்லை. அதனை அவனால் மீண்டும் 

சம்பாதிக்க முடியும்.  ஒரு மனிதன்  அவனது உடல் 

ஆரோக்கியம் இழந்து விட்டான் என்றால் அவன் 

சிறிதளவுஇழந்துவிட்டான் என்று பொருள்.  ஆனால் 

ஒரு மனிதன் அவனது நற்குணங்களை நல்ல 

செயல்களை இழந்துவிட்டான் என்றால் அவன் 

வாழ்வில் எல்லாவற்றையும் இழந்துவிட்டான் 

என்றே பொருள் செய்யப்படுகிறது அன்பர்களே.


WHEN ONE MAN LOST HIS WEALTH 
NOTHING IS LOST IN HIS LIFE. BECAUSE HE CAN EARN
THE LOST MONEY AT ANY MOMENT.

WHEN ONE MAN LOST HIS HEALTH 
SOMETHING IS LOST IN HIS LIFE. BECAUSE HE CAN BE 
ABLE TO MAINTAIN HIS HEALTH CONDITION UP TO A 
PROPER LEVEL.

BUT WHEN ONE MAN LOST HIS CHARACTER 
EVERYTHING IS LOST IN HIS LIFE.  BECAUSE THE NAME 
AND THE REPUTATION LOST  WHAT HE EARNED SO FAR 
WHICH CANNOT BE REIMBURSED AT ANY SITUATION.


எனவே அன்பிற்குரிய இந்தக் கால இளைய தலை 

முறையினரை நான் வேண்டி விரும்பிக் கேட்டுக் 

கொள்வதெல்லாம் இதுதான்.  இளம்வயது மனம் 

அப்படி இப்படி அலைபாய்ந்திடத்தான் செய்யும்.

தேவை மனக்கட்டுப்பாடு. விரைவில் உங்களுக்கு 

உங்கள் பெற்றோர்கள் நல்லதொரு துணை தேடி 

சேர்க்கத்தான் போகிறார்கள்.  அதற்குள் கெட்டுச்

சீரழிந்துவிடாதீர்கள்.  அறிவுரையை கேட்டு ஏற்றுக் 

கொண்ட உங்கள் நல்ல மனதிற்கு எனது பணிவான 

நன்றியும் வணக்கமும் .  வாழ்வோம் வளமுடன்.


அன்புடன் மதுரை TR.பாலு.


தமிழர்களாக இருங்கள் !!

தமிழர்களிடம் தமிழிலேயே பேசுங்கள் !!

இது இன்று மிகவும் அவசியம் !!








No comments:

Post a Comment