Sunday, April 14, 2013

ஆண்மை என்பது பெருமை உடைத்ததா ? அல்லது பெண்மையா ?




தமிழர்களாக வாழுங்கள் !!


தமிழிலேயே பேசுங்கள் !!

(தமிழர்களிடமாவது)



தினம் ஒரு திருக்குறள் !!

அதிகாரம்   :-   பெண் வழிச் சேறல்.

குறள் எண் :-    9௦7.



பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின்-
                                                                       -நாணுடைப் 
பெண்ணே பெருமை உடைத்து... ... ... ... ... ... ... ...


விளக்கம் :-   மனைவி என்பவள் ஆணைஇடும் ஏவல் 

அதனைச் செய்து நடந்து வருபவரது ஆண்மையை 

விட நாணத்தை மட்டுமே தனதுஇயல்பாக கொண்டு 

உள்ள பெண்மையே பெருமை உடையது.  இதுவான்

புகழ் வள்ளுவர் நமக்கு அளித்திட்ட குறளும் அதன் 

விளக்கமாகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-   

                                       காட்சி எண்:-  1.

படுத்துக்கொண்டு ஒய்யாரமாக தொலைக்காட்சி 

பார்த்துகொண்டு இரசித்துகொண்டு இருக்கும் 

பெண்குலப் பெருமகள் அனிதா ராமசாமி :-  (தனது 

கணவன் இராமசாமியை பார்த்து)  யோவ். என்ன 

இன்னும் நோக்கு அலுப்பு தீரலையா.கிளிஞ்சது 

போம்.  ராத்திரி சீக்கிரமா 12 மணிக்குமேலேதானே 

தூங்கப் போனேள். நான்தான்தாமதமாஇரவு 1௦ மணி 

இருக்கும் படுத்துட்டேன். நீர் ஏங்காணும் இன்னும் 

எந்திரிக்காமல் கிடக்கீரு. அடச் சீ. எந்திரியும் ஒய்.

உம்.உம். எந்திரிச்சு போய் முதல்லே பால்பை

வாங்கிட்டு வந்து காபியை காய்ச்சி என்ட்ட தந்து 

அழும். நீர் பிறவு குடிச்சுத் தொலையும் . நான் குடிச்சு 

முடிச்சுத் தொலையிரதுக்குள்ளாக கடைக்குப்போய்

நீர் தேங்காய் வங்கியாந்து சட்டினி அரைச்சு இட்லி  

ஊத்தித் தொலையும். பிறவு எனக்கு குளிக்க 

வென்னிய வச்சுட்டுவேலையைப்பாருங்கஒழுங்கா.

உம். ஒரு மனுஷி எம்புட்டுத்தான் வேலையைப் 

பார்கமுடியும்ன்னேன்.  போங்க. போங்க அய்யா.

சும்மா மசமசன்னு நிக்காதேரும். னேக்கு பத்திண்டு 

எரியறது.  எங்க தோப்பனார் நேக்கு நல்ல மாப்ளே 

பார்த்தார். எல்லாம் என் தலை எழுத்து. 

என்று கணவர் ராமசாமி கையால்  தாலி கட்டப்பட்ட 

பேங்க் மேனேஜர் மனைவிஅனிதாவின்நடை,உடை,

பாவனை பார்த்தேளா. எல்லாம் அவா சம்பாதிறாள்.

அந்த திமிர் இப்படில்லாம் பேச வைக்கிறது.

                                     காட்சி எண்: 2.

ராமசாமி :-  (தனதுஉயிர் தோழன் சுப்பிரமணியசாமி

-யிடம் சொல்லி அழுகிறார்)  என்னடா அம்பி சுப்பு 

நடக்றதை எல்லாம் அந்த பகவான் பாத்துண்டு 

தானே இருக்கார்.  நேக்கு வேற வேலை 

இல்லன்றதால்தானே என் பொம்பளையாள்இப்படி 

என்னை கேவலப் படுத்திண்டு இருக்கா. இன்னும் 

எத்தனை நாள் இப்படி நான் பேச்சு வாங்கணுன்னு 

பெருமாள்எண்ணின்டுஇருக்காரோநேக்குதெரியல.

என்றான் நண்பனிடம். அதற்கு நண்பன் சுப்பு 

என்ன சொல்றான்:-

டேய்.ராமசாமிஎல்லாம்தலைஎழுத்து இத்துநூண்டு

இடத்லே எம்புட்டு எழுதியிருக்கான். நான் ஒன்னு 

சொல்லட்டாடா.  அம்பி. உன்னாட்டம்  இப்படி மாமி 

காலாலே சொல்ற வேலையெல்லாம் நீ தலையால் 

செய்றதுக்கு மாமி எவ்வளவோ பெட்டர். ஆமாடா

அம்பி உன்னையை ஆம்பளை என்று சொல்றதுக்கே 

நேக்கு வெட்கமா இருக்குடா. என்று சொல்லிட்டு 

சு.சாமி போய்ட்டார்.  திருவள்ளுவர் இந்த காட்சி 

பார்த்துட்டு எழுதிய குறள்தான் மேலே நான் 

சொன்னது.  ஆனால் நம்ம அனிதா மாமி போல 

இன்னும் எத்தனை எத்தனயோ மாமிகள் இப்படி 

புருஷாளை கேவலப் படுத்திண்டு அங்கிங்கு 

எனாதபடி இந்த நாட்டின் ஒவ்வொரு சந்து பொந்து

களிலும் இன்றும் என்றும் வாழ்ந்துண்டுதான் 

இருக்கா.  தெய்வம்தான் அவாள் செய்ற எல்லா 

தவருகளையும் மன்னிக்கனும். என்ன ஒய்.நான் 

சொல்றது சரியா. நேக்கு நாழி ஆயிட்டது.

No comments:

Post a Comment