Saturday, April 13, 2013

புலிதான் அஞ்சிடுமோ !! பூனைதனைப் பார்த்திடுங்கால் ?



தமிழர்களாக வாழுங்கள் !!

தமிழிலேயே பேசிடுங்கள் !!

(தமிழர்களிடமாவது)



தினம் ஒரு திருக்குறள் .

அதிகாரம்    :  ஊக்கம்உடைமை.

குறள் எண்  :-  599.


பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை 

வெரூஉம் புலிதாக் குறின்... ... ... ... ... ... ... ....


குறள் விளக்கம் :- உருவத்தில்மிகவும்பருத்ததுதான் 

யானைமற்றும்மிகவும்கூர்மையான கொம்புகளைத்

தன்னகத்தே கொண்டது என்றிருந்தாலும் கூட 

ஊக்கமுள்ளதாகியபுலிதாக்கஅதன்எதிரில்வந்திடின் 

யானைஅதற்குஅஞ்சித்தான்நிற்கும்.  இது வான்புகழ்

வள்ளுவர்நமக்குஅளித்தகுறளும்அதன்விளக்கமும். 


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  இன்றைய தினம் 

இந்த உலகினில் ஒரு நாடு உள்ளது. அதன் 

தென்கடைக்கோடியில் ஒரு மாநிலம் உள்ளது.

நான்அந்தமாநிலத்தின்பெயரைச்சொல்லமாட்டேன்.

நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.  விதி வசமோ 

அல்லது சதிகாரர்கள் செய்த சதி வசமோ யார் 

அறிந்தார்கள்.  மக்களுக்கு தேவையான நல்ல பல 

திட்டங்களை செயல்படுத்துவதில் அந்தகட்சியின் 

முதுபெரும் தலைவர் மிக திறமைமிக்கவர் மட்டும் 

அல்ல நல்ல நிர்வாகத்திறன் பெற்றவரும் கூட.

இருந்தபோதிலும் கடந்த தேர்தலில் அவர்வைத்த

கூட்டணி பட்டாணியாக ஆனதினாலே அவர் 

வெற்றிபெற்றிருந்தாலும் கூட அவரது கட்சி எதிர் 

கட்சி என்ற அந்தஸ்தைக்கூட இழந்து நின்றது 

எனில்விதியின்கொடுமைபார்த்தீர்களா அன்பர்களே.

இருப்பினும்கூடநிர்வாகத்திறமையில்அவர்ஒர்புலி.

மக்களுக்கு நல்ல பல திட்டங்களை செயல் படுத்து-

வதில் "அவர்கள்"வசதி அடைவதும் உண்டு. அவர் 

ஒரு மிகச் சிறந்த திரைக் கதை வசனகர்த்தாவும் 

கூட. அவர் எழுதிய பல படங்களின் வசங்களின்படி 

அவர் வாழ்ந்தும் வந்திருந்தார்.  ஒரு படத்தில்,

கொள்ளை அடிப்பது ஒரு கலையப்பா என்றும் 

எழுதியதும் அவரே.  இன்னொரு படத்தினில் அவர் 

எழுதிய வசனம் எவராராலும் மறக்க முடியாதது 

ஆகாரத்திற்காக தடாகத்தில் இருக்கும் அழுக்கை 

சாப்பிடுகிறதேமீன்அதன்பொதுநலத்திலும் சுயநலம் 

கலந்து இருக்கிறது என்று வசனம் எழுதி உலகப் 

புகழ் பெற்றவரும் அவரே.  அப்படிப்பட்ட அந்த முது 

பெரும்தலைவர் இன்று எந்த பதவியிலும்இல்லை 

என்றாலும் இன்றைய அந்த மாநிலத்தினை ஆளும் 

கட்சியின் தலைமை அவரை கண்டு நான் மேலே 

சுட்டிக்காட்டிய குறளில் வரும் யானை எப்படி புலி 

தனிக் கண்டால் அஞ்சுகிறதோ அதுபோலத் தான் 

இன்றும் என்றும்அஞ்சுகிறது.அதற்குஎன்ன காரணம் 

என்றால் அங்கே தான் தமிழ் அன்னை நிற்கிறாள். 

அவரிடம் உள்ள தமிழ்நடை,வீரம் மிகுந்த தமிழ் 

பேச்சு, எதிரியையும் அணைத்துக்கொள்ளும் ஒரு 

அரசியல் சாதுரியம், சாணக்கியத்தனம் இவைகள் 

தற்போது ஆளும் அந்த கட்சியின் தலைமைக்கு 

இல்லாததுதான்.  ஏதோ எனக்கு தெரிந்த ஒரு திருக்-

குறளையும் அதற்கு உண்டான நாட்டு நடப்பு விளக்-

கமும் தந்து மகிழ்ந்து இருந்தேன்.  தவறுகள் ஏதும் 

இருப்பின் தமிழ் சமுதாயமே என்னை மன்னிக்க 

வேண்டுகிறேன்.  நன்றி.வணக்கம்.









No comments:

Post a Comment