Thursday, April 11, 2013

" மேலிடம் " பழக்கம் உள்ளவரா நீங்கள்? எப்படி இருப்பது அவர்களுடன் !!


தமிழனாக இருங்கள் !!

தமிழர்களிடம் தமிழிலேயே பேசுங்கள் !!


தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  மன்னரைச் சேர்ந்தொழுகல்.

குறள்  எண் :- 691.


அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க 

இகல்வேந்தர் சேர்ந்தொழுகு வார். .. .. .. .. ..


வள்ளுவர் விளக்கம்:-  அரசரை/ஆட்சியாளர்களை 

சார்ந்து வாழ்கின்றவர்கள் அவரை விட்டு நீண்ட 

நாட்கள் பிரிந்தோ, அவர்களை விட்டு விலகியோ 

அல்லது அவரைமிகவும்நெருங்கி நெருக்கமாகவோ 

இல்லாமல் குளிர்காலத்தில் தீக் காய்வார்கள் போல 

இருந்திடல் வேண்டும்.  இது வள்ளுவர் வாக்கு.


நமது நாட்டு நடப்பு விளக்கம்:-  அவர் மக்களால் 

தேர்ந்துஎடுக்கப்பட்டசட்டமன்ற உறுப்பினர்.மந்திரி.

அதோடுகூட அவர் அந்த மாவட்டத்தின் செயலா-

ரும்கூட.  ஆளும் கட்சியை சேர்ந்தவர். இத்தனை 

இருந்தும் பாருங்க அவர் நான் அவரது பெயரைச் 

சொல்லவிரும்பவில்லை.கட்சியின் "மேலிடத்தை"

மிகநீண்ட நாட்களாக சந்திக்கவும்இல்லை.தொலை

பேசியில்கூடபேசாமல்இருந்துவிட்டார் தெரியாமல்

தானே ஒழிய வேண்டும் என்றே அல்ல.  பாருங்க 

அவர் வள்ளுவர் சொன்னபடி இல்லாததினால் 

உடனடியாக அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது,  

மந்திரிபதவிகாலி.இரவோடுஇரவாகஅதிலும்.

யாரும் அவரை தொடர்பு கொள்ளகூடாது என்று 

உத்தரவு  வேறு.  பாவம் மனுஷன் நிலைமை 

இப்படியா ஆகணும். எல்லாம் தலை எழுத்து.

ஒழுங்கா வள்ளுவன் சொன்னபடி இருந்து இருந்தார் 

என்றால் அப்பப்ப சந்தித்து மேலிடத்தை விட்டு 

விலகாமலும் ரொம்ப நெருங்காமலும் தீக்காய்வார் 

போல இருந்திருந்தால் இந்த நிலைமை வந்து 

இருக்குமா அவருக்கு.  என்ன நான் சொல்றது. 

தாயில் சிறந்த கோயில் இல்லை.  அன்னையே 

நம் முன்னறி தெய்வம். வாழ்க வளர்க.




No comments:

Post a Comment