Monday, April 22, 2013

எப்போது நாம் நமது வேகத்தைக் காட்டலாம் ?





தினம் ஒரு திருக்குறள் !!


அதிகாரம் :-   காலம் அறிதல்.

குறள் எண்:-   490.



கொக்கொக்க கூம்பும் பருவத்து 
                                              மற்றதன் 
குத்தொக்க சீர்த்த இடத்து... ... ....


விளக்கம் :-   நாம் பொறுத்து இருக்க 

வேண்டியகாலத்தில்கொக்குபோலவே 

அமைதியாக இருக்க வேண்டும்.காலம் 

கிடைக்கும்போது கொக்கு அதன் குத்து 

போல சரியாக குறிதவறாமல் இருக்க 

வேண்டும்.  இது வான்புகழ் வள்ளுவர் 

நமக்கு அளித்திட்ட குறளும் அதனது 

விளக்கமும் ஆகும்.   


நமது விளக்கம்:-  அது ஒரு தீப கற்ப

நாடு.  கூட்டாட்சி தத்துவத்தின்படி 

பல மாநிலங்களில் பலம் உள்ள மாநில 

கட்சிகள்  சேர்ந்து  ஒரு  முற்போக்கு 

கூட்டணி அமைத்து மத்தியில் அரசு 

ஒன்று அமைத்து கடந்த நான்கு 

வருடங்களாக அந்த நாட்டினை 

ஆண்டு வந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு 

ஒருமுறை தேர்தல் வருவது அந்த 

நாட்டின் வழக்கம்.


அதன்படி நான்கு ஆண்டுகள் பொருத்து 

பொறுமை காத்த /நல்லபடியாக பதவி 

சுகத்தினை அனுபவித்த அந்த மாநிலக் 

கட்சி இன்னும் எஞ்சி இருப்பது ஒரு 

ஆண்டுதானே நாம் தற்போது இந்த 

மக்கள் விரோத மைய அரசில் இருந்து  

இப்போது கூட வெளியில் வர 

வில்லை என்றால் நமது கட்சிக்கும் 

சேர்த்து மக்கள் நல்ல பட்டை நாமம் 

போட்டு அனுப்பிடுவார்கள் என்பதால் 

இப்போது அந்த கூட்டணி மந்திரி சபை 

மற்றும் அந்த அணியில் இருந்தும் 

தற்போது வெளியில் வந்து விட்டது.

அது மட்டும் அல்ல தற்போது கொக்கு 


அதன் குத்து போல குறிதவறாமல் 

இருப்பது போன்ற செயல்களை அந்த 

மாநிலக் கட்சி இப்போது இருந்தே 

மற்ற கட்சிகளையும் ஒன்று சேர்த்து 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அந்த 

நாட்டின்பாராளுமன்றதேர்தலில்போட்

டிஇட முடிவு செய்து உள்ளது.விளைவு 

என்ன முடிவு கிடைக்குமோ. 

ஆண்டவன் ஒருவனே அறிவான்.


நன்றிவணக்கம் .

அன்புடன் மதுரை TR. பாலு,

No comments:

Post a Comment