Monday, April 15, 2013

தலை எழுத்து !! (ஊழ்) இதனை விட வலிமை உள்ளது எது ?



 தினம் ஒரு திருக்குறள் .


அதிகாரம்   :-   ஊழ். (விதி)


குறள் எண் :-   380.



"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று 

சூழினுந் தான்முந் துறும்" ... ... ... ... ... ....


விளக்கம் :-  ஊழ் என்னும் இந்தவிதியைவிடமிகவும்

வலிமைஉடையதுஎன்றுவேறுஏதாவது உள்ளனவா

என்று இந்த ஊழை/விதியை விலக்கிடும் பொருட்டு  

மற்றொரு வழியை நாம் ஆராய்ந்தாலும் அங்கும் 

தானேமுன்வந்துநிற்குமாம் இந்தஊழ்என்னும் விதி.

இது வள்ளுவர் நமக்கு தந்த குறளும் அதன் மேல் 

அவர் தரும் விளக்கமும் ஆகும். 


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  அது 1967ம் ஆண்டு.

தமிழ்நாடு பல்வேறு வகையான போராட்டங்களை 

சந்தித்ததன் விளைவு அதற்குப் பிறகு நடைபெறும் 

சட்டமன்ற தேர்தல்.  1965 திராவிட கட்சிகளால் இந்த 

நாட்டினில் அரங்கேற்றப்பட்ட/அறிவிக்கப்பட்ட ஒரு 

மாபெரும் போராடங்களுள் ஒன்று ஆதிக்க இந்தி 

திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.ஆனால் இந்த இந்தி 

மொழி திணிப்பு உணர்வு என்பது பாவம்  இவர்களை 

நம்பி இவர்களது மாயவலைதனில் வீழ்ந்திட்ட 

குப்பனுக்கும் சுப்பனுக்கும் கோடானு கோடி 

கட்சியின் தொண்டர்களுக்கு மட்டுமே இந்த இந்தி 

படிக்காதே இந்தி பேசாதே என்ற அறிவுரைகள். 

அப்படி படிக்காமல் இருந்தால்தானே இவர்கள் இந்த 

தமிழ்நாட்டை விட்டு பிழைப்புக்கு வடக்கு பக்கம் 

செல்லமுடியாமல் சாகத்துணை புரியும். மற்றபடி 

இது தனக்கோ அல்லது தங்கள் குடும்பத்தின் 

வாரிசுகளுக்கு என்றுமே கிடையாதே. அவர்கள் 

உயர்கல்வி படித்திட்டு இந்தி மொழி உள்பட எல்லா 

மொழிகளும் கற்று உணர்ந்த வாரிசுகள் அனைரும் 

என்பது யார் அறிந்தார்கர்கள். வான்பொய்த்ததினால்

கடும் பஞ்சம். அரிசி என்பது அறவே கிடையாது.

எலிக்கறியை உண்ணுங்கள் என்று காங்கிரஸ் 

மந்திரிகளுள் எவரோ சொன்னார்என புரளி. போதாக் 

குறைக்கு புரட்சிநடிகர் M.G.R.அவர்கள், நடிகவேள் 

M.R.ராதா அவர்களால்துப்பாக்கியால் சுடப்பட்டு MGR

கழுத்தினில் மாபெரும்கட்டு போடப்பட்டு கையை 

வணங்கி உதயசூரியனுக்கே வாக்களியுங்கள் என்ற 

வாசகங்கள் அடங்கிய பதாதைகள் தமிழகம் எங்கும் 

அங்கிங்கு எனாதபடி முக்கு,மூலைஆக அனைத்து 

நகர, கிராமங்கள் எல்லா இடத்திலும் மக்கள் 

பார்வைக்கு வைத்திட்ட திராவிட இயக்கத்தினர் 

செய்திட்ட பிரச்சார தந்திரம்,சக்கரவர்த்தி மறைந்த 

C. இராஜகோபால ஆச்சார்யார் அவர்களது 

மதிப்புமிகுந்த மற்றும் அந்த சக்தி வாய்ந்த  

மூளையில்உருவான அதி அற்புத அரசியல் வானில் 

இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முதலாக ஒரு 

வலிமையான கூட்டணி அமைத்து அனைத்து 

எதிர்க்கட்சி களையும் ஒன்று சேர்த்து அதன் 

பயனாகஇந்தகாங்கிரஸ்பேரியக்கத்திற்கு

எதிராகஅதை முற்றிலுமாக  ஒழித்துவிடவேண்டும் 

என்ற  C. இராஜாஜி அவர்களின்  மனதினில் ஏற்பட்ட 

காங்கிரஸ் கட்சியை ஒழிக்கும் வெறி உணர்வு,

இவைகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போன்ற 

திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் தேர்தல் 

பிரச்சார உத்தியின் உச்சக்கட்டநிகழ்வான ஆட்சிக்கு 

வந்தவுடன் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசித்திட்டம் 

அதன்பிறகு நிலைமைகள் சரி செய்யப்பட்டவுடன் 

ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி அரிசித்திட்டம் என்று 

அறிவித்து செயல்படுத்திய அவர்களது விளம்பர 

(இந்த இடத்தில ஒருசிறுவிளம்பரஇடைவெளி.

இரண்டு படி அரிசி என்று சொல்லி இருக்கலாம் 

அல்லது நான்கு படி அரிசி என்று கூட சொல்லி 

இருக்கலாம். அவர்கள் ஏன் மூன்றுபடி அரிசி என்று 

சொன்னார்கள் என்பது அந்த" கோவிந்தா " என்று 

அழைக்கப்பட்ட பெருமாளுக்கே வெளிச்சம்.)யுத்தி 

என்று விதி பல்வேறு கோணங்களில் அலசி அங்கே

ஆராய்ந்து இருந்தாலும் எப்படி விதி என்பது தான் 

அங்கே முந்தி நிற்கும் என்ற முதுமொழிக்கு ஏற்ப 

1967 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி, 

உண்மைத்தொண்டன் பொதுமக்கள் வரிப்பணத்தில் 

பத்துபைசாவிற்கு கூட ஆசைப் படாத ஒரு உண்மை

பிரம்மச்சாரி, நேர்மை ஒன்றே தனது வாழ்வின் 

இலட்சியம்என்று பொதுத்தொண்டு ஆற்றிய காந்தி, 

சத்திய மூர்த்தி ஆகியோரது ஒரே அரசியல்வாரிசு 

அதனாலேயே இவர் காந்தி பிறந்த நாளில் மறைவு.

(தனக்கு என்று வங்கிகணக்கு கூட வைத்திடாத 

அப்பாவி, இந்த உலகத்தைவிட்டு விடைபெற்று 

அவர் தனது கண்களை மூடிய போது அவரிடம் 

இருந்த பணம், அவர் சேர்த்துவைத்த சொத்து என்ன 

தெரியுமா அன்பர்களே தலையணைக்கு அடியில் 

வைத்திருந்த வெறும் 17௦ ரூபாய்க்கு பணமும் 

கொஞ்சம் சில்லறைக்காசுகளும் மட்டுமே இது 

தவிர அலமாரியில் இருந்த இரண்டு செட் கதர் 

வெள்ளை வேட்டியும் சட்டையும் தான். வேறு எந்த 

மூலதன முதலீடுகளோ, மனைவி,துணைவி ,

அவரவர்களுக்கான வாரிசுகளுக்கு சொத்து சுகம் 

கார் பங்களா தொலைகாட்சி நிறுவனம் நடத்தி 

கோடி கோடிகள் என சொத்து மதிப்பு இவை எதுவும்

சேர்த்திட தெரியாத பிழைக்கத் தெரிந்திடாத ஒரு 

சாதாரண அந்தக் கால அரசியல்வாதி) கர்மவீரர் 

காமரஜர் உட்பட அனைவரும் தோல்வியைத் 

தழுவிட வைத்ததன் விளைவு இன்று அந்தத் 

தோல்வியைகாமராஜருக்குதந்த மக்களும் அவர்தம் 

வாரிசுகளும் சொல்லொன்னாததுயரும்கவலையும்  

அடைந்திடும் நிலைமை என பல்வேறு வகையிலும் 

விதி முந்தி வந்து நிற்கும் நிலை பார்த்தீர்களா 

அன்பர்களே. எழுதிய விதியின் கை எழுதி எழுதி 

மேற் செல்லும் அழுதாலும் தொழுதாலும் அதில் 

ஒரு எழுதும் மாறாது. வருந்தாதே மனமே.


கண்ணீருடன் விடை பெறுகிறேன். 

மீண்டும் எனது அடுத்த திருக்குறள் விளக்கத்தில் 

உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். நன்றி 

வணக்கம்.





No comments:

Post a Comment