Wednesday, May 15, 2013

வஞ்சம் தீர்ப்பவனே ஆனாலும் அவனை நீ வஞ்சிக்காதே !!




தமிழனாக வாழ்ந்திடுங்கள் !! 

தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!

(ஆங்கிலமொழிகலப்பு ஏதும்இன்றி )
           

(தமிழர்களிடை உரையில்)                        


தினம் ஒரு திருக்குறள்.                           

அதிகாரம்   :-   இன்னா செய்யாமை.   

குறள் எண் :-    312.                                   



கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும்                                               _                                                              இன்னா 

செய்யாமை மாசற்றார் கோள்".. .. .. .. 


விளக்கம் :-   ஒருவன்/ஒருவள் மன-   


மதில் "கருவு"கொண்டு (வஞ்சம் 


கொண்டு)நமக்குதுன்பம்பலசெய்த


போதும் நாம் அவனுக்கு/அவளுக்கு 


திரும்பத் அத்துன்பம் செய்திடாமல் 


இருத்தலே  மாசற்றவரின் 


கொள்கையாம். இது வான்புகழ் 


வள்ளுவப்பெருந்தகை    நமக்கு 


அளித்திட்ட குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.                                 


( இந்தக் கட்டுரையில் வரும் உரையாடல்கள்,கருத்துக்கள்,சம்பவங்கள்,  இவை யாவும் கற்பனையே தவிர தனிப்பட்ட யாரையும் முன்னிறுத்தி புனையப்பட்டது அல்ல -செய்தி ஆசிரியர் )                                                           


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-அது 


ஒரு கல்தோன்றி மண் தோன்றாக் 


காலத்தே முன்தோன்றிய தேனின் 


சுவை போல இனித்திடும் தெள்ளு 


அமுதத்திற்கு இணையான அழகு 


மொழிபேசிடும் அருமைமாநிலம். 


அந்த தீபகற்ப நாட்டின் தென்கடைக்  


கோடியில் அமைந்திட்ட சிறப்பு பல 


நிறைந்த ஒரு மாநிலம்.  ஐந்து 


ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் 


நடைபெற்றுபெரும்பான்மை மக்கள்,  


அவர்கள் யாரைத் தேர்வு செய்கிறார்  


-களோ அவர்களே  ஆட்சிசெய்திடும் 


அழகான மாநிலம்.அந்தமாநிலத்தில் 


இரு பெரும் இனம் சார்ந்த உணர்வு 


கொண்ட கட்சிகள் மாறி மாறி ஆட்சி 


புரிந்து வந்துள்ள நிலையில் 


ஒன்றினை ஒன்று ஒழிக்க துடிக்கும் 


எண்ணம் கொண்டவையாகவே 


இன்று வரை உள்ளது அந்த இரண்டு 


மாநிலக் கட்சிகளின் பெயர் தி.மு.க. 


(திருக்குறள் முன்னணிக் கழகம்) 


மற்றொன்று அ.இ.அ.தி.மு.க.(அதிக 


இன்னல் அளிக்கும் திருந்தாத 


முனைவர்கள் கட்சி) இவை 


இரண்டில் தி.மு.க.அரசியல் 


பாரம்பரியம் உள்ள, எல்லோரையும் 


மதித்து ஆண்ட கட்சி. ஆனால் இந்த 


அ.இ.அ.தி.மு.க. இருக்கிறதே அதன் 


தலைவர் திரு அப்பா ஜெயந்தன் மிக 


மிக தலைக்கனம்உள்ள, எவரையும் 


துச்சமென என்னும் மனோபாவம் 


உள்ளவர்.தனக்குத்தான் எல்லாம் 


தெரியும் பிறர் அனைவரும் 


அறிவற்ற ஜென்மம்,என்ற எண்ணம். 


கொண்டவர். ஆனால் இதற்கு எதிர் 


மாறான எண்ணம் உள்ளவர் தி.மு.க 


கட்சித் தலைவர் திரு அன்புநிதி 


அவர்கள். எவரையும் இகழாப் 


பெருந்தன்மை,எதிர் கட்சியையும் 


அரவணைத்துச் செல்லும் ஆற்றல் 


மிகக் கொண்டவர். இதுபோன்ற 


எண்ணம் கொண்ட இந்த இருவர் 


இடையில் ஈரத்துணியைப் 


போட்டால் கூடத் தீ பிடித்தே 


எரியுமாம்.அந்த அளவு அன்புநிதி 


மேல் தலைவர் ஜெயந்தனுக்கு 


அளவு சொல்லிட முடியா கோபம். 


ஏன் என்றால் ஒருமுறை ஜெயந்தன் 


ஆண்ட போது நிறைய மோசடி 


செய்து மக்கள் வரிப் பணம் சம்பாதி-  


த்து விட்டார்.இதை அன்பு நிதி கண்டு 


பிடித்து வழக்கு பதிவு செய்து 


விட்டார். அதனாலேயே மறுமுறை 


திரு ஜெயந்தன் ஆட்சிக்கு வந்த 


உடன் அவர் மேல் பொய் வழக்குப் 


பதிவு செய்து நள்ளிரவில் வீட்டை ,


பூட்டை உடைத்து அன்புநிதியை 


கைதுசெய்து தனது வஞ்சத்தை 


தீர்த்துக் கொண்டார் திரு ஜெயன் 


தன்.  ஆனால் அதேசமயம் சுமார் 5 


ஆண்டுகள் கழித்து மீண்டும் 


தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தபோது 


எல்லோரும் எதிர்பார்த்து 


காத்திருந்தனர்.இப்போதுஜெயந்தன், 


முதல்வர் அன்புநிதியால் கரம் பூட்டி 


கைது செய்யப்படுவார் என 


எல்லோரும் எதிர்நோக்கி இருந்த 


வேளையில் திரு அன்பு நிதி 


அவர்கள் உலகப் பொதுமுறை படித்-


தவர்.  அதில் கண்டதுபோல் தமக்கு 


வஞ்சம் செய்தவருக்கு மீண்டும் தாம் 


வஞ்சம் செய்திட எண்ணாத நல்ல 


நினைவினைக் கொண்டவர். இந்த 


இடம் எனக்கு எனக்கு திரு அன்பு நிதி 


அவர்களை மிகவும் பிடித்தது. அவர் 


ஒருவரே திருக்குறள் படித்து 


அதன்படி வாழ்கையை அமைத்து 


உயர்ந்திட்ட உன்னத தலைவர் திரு 


அன்புநிதியை பாராட்டிட எனக்கு 


நேரமும் இல்லை வெள்ளை பேப்பர் 


கூட இல்லை. இவரே  வள்ளுவன் 


கண்ட உண்மைத் தலைவன் 


மீண்டும் நாளை சந்திப்போம் 


எனது அன்பான நபர்களே !!/


நண்பிகளே !! 


வாழ்வோம் வளமுடன் !!  


அன்புடன் மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment