Monday, May 6, 2013

கேலி செய்பவரையும் மன்னித்திடுக !!




தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  பொறையுடைமை.

குறள் எண் :-  151.

அகழ்வாரைத் தாங்கும் நிலம் 

                               போலத் தம்மை  

இகழ்வார் பொறுத்தல் தலை.  


விளக்கம் :-தன்னை வெட்டுவோரை 

கூட, அவர் விழுந்துவிடாமல் நிலம் 

எப்படி தாங்குகிறதோ அது போலவே 

தம்மை இகழ்ந்து பேசுவோரையும் 

பொருத்துக்கொள்வதே தலையான  

பண்பு. இதுவள்ளுவப்பெருந்தகை 

நமக்கு அருளிச் சென்ற குறளும்  

அதன் விளக்கமும் ஆகும்.               


நமது நாட்டு நடப்பு விளக்கம்:-       

(இந்தக் கட்டுரையில் வருபவை 

எல்லாம் "கற்பனையே" தவிர, வேறு 

தனிப்பட்ட எவரையும் குறிப்பிடுவன 

அல்ல என்பதை ஆசிரியர்  இங்கே  

தெளிவுடன் கூறுவதை இந்த மன்றம் 

பதிவு செய்கிறது.)                                    

அதுஒருதேனினும் இனியதொரு 

நல்மொழி பேசிடும் நல்லதோர் 

திருநாடு.மக்கள்மன்றத்திற்கு கடந்த 

இரண்டு ஆண்டுகட்கு முன்பு நடந்த 

ஒரு பொதுத் தேர்தலில் மிருக பலம் 

பெற்ற அந்த கட்சியின் தலைமை  

இதற்கு முன்பு ஆட்சி செய்த 

கட்சியின் தலைவரையும் அவரின் 

குடும்பஉறுப்பினர்களைவாய்க்கு 

வந்தபடி இன்னதான் பேசுவது என்ற 

கணக்கு இல்லாமல் என்னதான்பேசி 

வந்தாலும் கூட அந்த அரசியல் முது 

பெரும் தலைவர் புன்முறுவலோடு 

எல்லா ஏச்சுக்களையும் பேச்சுக்கள் 

அனைத்தையும் ஏற்றுக்கொண்டு 

குன்றில் இட்ட விளக்குப்போல 

இன்று செயல்படுவது காணும்போது 

திருவள்ளுவர் சொன்ன அந்த குறள் 

விளக்கமாக இந்த மாபெரும் மனிதர் 

நிற்பது கண்டு எல்லோரும் 

பெருமிதம் கொள்வது உண்டு. 

வாழ்க!!அவரது நினைவு ஆற்றல்.  

வளர்க!! அவரின் தமிழ் தொண்டு !! 

நன்றி!வணக்கம் !!அன்புடன் மதுரை 

T.R. பாலு. 

No comments:

Post a Comment