Sunday, May 5, 2013

ஒருவர் செய்த நன்றியை நீங்கள் மறவாதீர்கள் !!




தமிழர்களாக வாழ்ந்திடுக !!


தனித் தமிழில் மட்டுமே பேசிடுக !!


( தமிழர்களிடமாவது )


தினம் ஒரு திருக்குறள். 


அதிகாரம்  :-  செய்ந்நன்றி அறிதல்.     

குறள் எண் :-  1௦8.                                         


நன்றி மறப்பதுநன்றன்றுநன்றல்லது 

அன்றே மறப்பது நன்று.                           

விளக்கம் :-  ஒருவர் நமக்கு முன்பு  

செய்த நன்றிதனை நாம் மறப்பது 

நல்லது கிடையாது.ஆனால் அவர் 

செய்த தீமையை,தீமைசெய்தஅந்தக் 

கணமேமறந்துவிடுவதுஅறம் ஆகும். 

இது வள்ளுவப் பெருந்தகை நமக்குத் 

தந்த குறளும் அதன் விளக்கமும்  

ஆகும்.                                                         


(கீழ்க்கண்ட கட்டுரையில் வருபவை எல்லாம் "கற்பனையே" தவிர யாரையும் எவரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவன அல்ல !!இது கட்டுரை ஆசிரியர் தரும் உண்மை விளக்கம்.)

நமது நாட்டு நடப்பு விளக்கம்:-


அந்த மாநிலம் நல்லதொரு 

தொன்மை மொழி பேசும் மாநிலம். 

ஆனால் அம்மொழி பேசும் மக்கள் 

மிகவும் திறமைசாலிகள் ஆனாலும் 

இலவசம் என்றால் போதும்.யாருக்கு 

வேண்டுமானாலும் ஆதரவுக்கரம் 

நீட்டி அவர்களை ஆளும் பொறுப்பு  

வரைகூடச்செல்லஅனுமதிஅளித்தி

டும் பெருந்தன்மை நிறைய உண்டு. 

இவர்களது இந்த குணத்தை நன்கு 

அறிந்த ஒரு திறமை நிறைந்த 

"துக்ளக்" தர்பார் கூட்டம் நன்கு சதித் 

திட்டம் தீட்டி இரண்டு ஆண்டுக்கு 

முன்பு நடந்த பொதுத்தேர்தலில்ஆடு, 

மாடு போன்றவைகளும் இவைகட்கு  

மேலாக ஒரு நடிகர் கட்சியோடு 

இவர்கள் வைத்த கூட்டின் காரணமே  

இவர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் 

அந்த நன்றியை இவர்கள் மறவாது 

அந்த நடிகர் கட்சியை உடைத்து 

பல்வேறு பொய் வழக்குகள் போட்டு 

நாயைப் போல நடிகரையும்  அந்தக் 

கட்சிஉறுப்பினர்களையும் சித்திர 

வதை செய்து சின்னா பின்னமாக             

ஆக்கும்அந்த ஆளும் கட்சியின் 

தலைமை நடிகருக்குகாட்டும் நன்றி 

வானளவு புகழ் பெற்றது. இதுவே 

வள்ளுவர் சொன்ன நன்றி மறப்பது 

நன்று அன்று என்ற குறள்  விளக்கம். 

மீண்டும் சந்திப்போமா ? நேயர்களே!! 

நன்றி. வணக்கம்.



























































No comments:

Post a Comment