Friday, June 28, 2013

விருந்தினரை வரவேற்பது தமிழர் பண்பாடு !!






உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!


தினம் ஒரு திருக்குறள்.                                     


அதிகாரம்   :-  விருந்தோம்பல்.                       


குறள் எண் :-  81.                                                


இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்  

**                                                                   விருந்தோம்பி       


வேளாண்மை செய்தற் பொருட்டு... ... ... ... ... ... ... ...  


விளக்கம் :-  வீட்டில் இருந்து 


கொண்டு அனைத்துப் பொருட்கள் 


எல்லாம் வாங்கி அதனைக் காத்து 


இல்வாழ்க்கை நடத்துவது எல்லாம் 


வீடு தேடி வருகின்ற விருந்தினர்கள்  


அனைவருக்கும்ம் உதவி செய்யும் 


பொருட்டே ஆகும்.  இது வான்புகழ் 


திருவள்ளுவர் நமக்கு அருளிய 


திருக்குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.  மீண்டும் நாளை நாம் 


சந்திப்போமா நேயர்களே ?                                           



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-             


தமிழ்கூறு நல்லுலகினில் வாழ்ந்து 


வரும் என் இனிய தமிழ் 


உடன்பிறப்புகளே!! வணக்கம் !!


இராகவன்,தேசிகன் இருவரும் 


இணைபிரியா நண்பர்கள் ஆரம்பப் 


பள்ளி காலம் முதல் கல்லூரி வரை. 


இருவருமே அவர்களைப்பெற்று பின் 


வளர்த்து அரவணைத்து ஆளாக்கிய 


பெற்றோர்களது எதிர்ப்பினையும் 


மீறி காதல் வயப்பட்டு தங்களது 


வாழ்கையை அமைத்துக் கொண்ட 


பரிதாபத்துக்கு உரியவர்கள்.இந்த 


காதலித்து பின்னர் மணம் செய்து 


கொள்வதிலே ஒரே ஒரு சிக்கல்தான் 


உண்டு அன்புத்தமிழ் நெஞ்சங்களே !! 


அது என்னவென்றால், இருவருக்கும் 


காதலிக்கும்போது ஒருவரை 


ஒருவர் எந்த அளவு உளமார, 


மனமார, நேசிக்கிறார்களோ அந்த 


உணர்வுகள், திருமணமான பின்னும் 


எள்ளின் முனை அளவு கூட 


குறைந்துவிடாமல்இருக்கின்றவரை


அவர்களது காதலுக்கு அது வெற்றி!! 


வாழ்ந்திடும் வாழ்க்கைக்கு வெற்றி!! 


ஆனால் அதற்கு மாறாக தமிழில் ஓர் 


சொல்வழக்கு உண்டு. ஆசை 6௦ நாள் 


மோகம் 3௦ நாள் ஆக 9௦ நாள் என 


வாழ்ந்தார்களே ஆனால் அந்தக் 


காதல் அம்பேல் காதல் தான். நான் 


எதற்காக இந்தக் கருத்தை இங்கே 


பதிவு செய்கிறேன் என்று 


சொன்னால் நான் வாழ்ந்த 1975ம்     


(அப்போது எனக்கு வயது 21) ஆண்டு 


அப்போதெல்லாம் நாங்கள் மணப் 


பெண்ணை (மனைவி)திருமண நாள் 


அன்றுதான் அதுவும் திருமண 


மேடை அங்கே தான் பார்த்திடும் 


அளவு இறுக்கமான/கட்டுப்பாடு, 


கண்டிப்பு நிறைந்த  சூழலில் 


வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்.             


இரண்டாவதாக நாங்கள் தாய் 


தந்தை இவர்களது சொல்லுக்கு 


மதிப்பு தந்து வளர்க்கப் பட்டவர்கள். 


அவர்கள் சொல்லுக்கு எதிர் சொல் 


சொல்லாதவர்கள். ஏன் 


சொல்லாதவர்கள் என்றால் தாய் 


தந்தை இல்லை என்றால் நாம் 


இல்லை. நம்மைப் பெற்று வளர்த்து 


ஆளாக்கிய அன்பு நிறைந்த "வாழும் 


தெய்வங்கள்" என்ற சிந்தனை 


எங்கள் நினைவினில் இருந்தது.  


அப்போது உள்ள கால கட்டத்தில் 


நாங்கள் நினைத்தாலும் காதலிக்க 


எங்களால் முடியாது. ஏன் முடியாது?


எங்களுக்கு காதலிக்க தெரியாது!!ஓ 


அப்படியா விஷயம். கடைசியாக 


இந்த காதலித்து திருமணம் புரிவர் 


வாழ்க்கை கசந்துபோக மிக முக்கிய 


காரணமாக நான் கருதுவது என்ன 


என்றால் பொதுவாக காதல் செய்து 


வாழ்ந்திடும் வாழ்வினில் காதலி 


அவளது கை மட்டுமே சற்று 


மேலோங்கி நிற்கும். அவள் தனது 


காதலுடன்  சினிமா,பீச், கோவில்,


பார்க், ஓட்டல்,மியுசியம்,பொருட் 


காட்சி என சுற்றித் திரியும் போது 


எல்லாம் இரு சக்கர வாகனத்தில் 


ஊர்வலம் செல்லும் போதெல்லாம் 


இவள் அவன் தோள் மீது தனது 


காதுகளை இறுக்கமாக வைத்துக் 


கொண்டு செல்லமாக சிணுங்கிக் 


கொண்டு வாடா,போடா,புஜ்ஜி பாபு, 


பஜ்ஜி மாவு என்றெல்லாம் கொஞ்சிக் 


குலாவிடும் போதெல்லாம் தேனாக 


இனித்திடும் அதே காதலி, தனது 


மனைவியாக திருமணம் செய்து 


கொண்டதற்குப்  பிறகு, இந்தக் 


கணவனால் அவளுக்குஅந்த 


அளவுக்கு சுதந்திரம் தர அவன் மனம் 


இடம் தர மறுப்பது ஒன்றே முக்கிய 


காரணமாக நான்  எண்ணுகிறேன். 


சரி, இதனை  அந்தப் பேதைப்பெண் 


அவள் புரிந்து கொண்டாலாவது 


இவர்களது மன முறிவுகள் 


தவிர்க்கப் படலாம். ஆனால் அதுவும் 


கிடையாது. பொதுவாக இந்தப் 


பெண்களுக்கு என்று ஒரு குணம் 


அந்தக் காலம் தொட்டு இன்றுவரை 


கணவனிடம் அதீத உரிமைகளை 


தான் எடுத்துக் கொண்டு செயல் 


படுவது. இரவு நேரங்களில் படுக்கை 


அறைதனில் சரி தொலஞ்சு போ உன் 


இஷ்டப்படியே நான் இருந்து 


தொலைகிறேன் என (Adjust) செய்து 


தனது தேவைகளைப்  பூர்த்திசெய்து 


கொள்ளும் இந்த ஆண் இனம் 


இருக்கிறதேஅப்பப்பா!! 


அரக்கனிலும்  அரக்கத்தனமான 


குணம் உடையோர்கள் என 


பெண்குலம் சொல்லுவதையும் 


என்னால் மறுத்திட இயலவில்லை 


அன்பர்களே !!உற்றதோர் பிணிகள் 


தீர்ந்தால் உலகோர் பண்டிதரைத் 


தேடார் என்ற முது மொழிக்கு ஏற்ப 


இந்தக் கணவன்மார்களும் அவ்வப் 


போது நடந்து கொள்வதும் உண்டு. 


பெண்ணாகப் பட்டவள்/


மனைவியாகப் பட்டவள் இதனை 


அறிந்து,உணர்ந்து,தெரிந்து,புரிந்து 


நடந்துகொள்வாளேயானால் அங்கு 


பிரச்சினைக்கு இடம் இருக்காது. 


ஆனால் இந்த அனுசரிக்கும் 


குணம்தான் இந்தக் காலப் 


பெண்களிடம் அறவே இல்லையே. 


அதனால் தானே இந்த குடும்ப 


உறவினில் பிரிவு,அதனால் மன 


முறிவு,இத்யாதி.,இத்யாதி 


சங்கடங்கள் ஏற்படுகிறது. நான் 


இந்தக் கட்டுரையை இந்த அளவுக்கு 


வியாக்கியானமாக, மிக நீண்ட 


விவரமாக எழுதுவதற்கு என்ன 


காரணம். ஒருவேளை இந்தக் 


கட்டுரைதனைப் படித்திடும் 


பெண்குலம் அதிலும் காதலித்துப் 


பின் கணவனை கைப்பிடித்துக் 


கொண்டு வாழ்ந்துவரும் பெண்கள் 


இந்தக் கட்டுரையைப் படித்திட்ட 


பிறகாவதுதங்களது "வாலைசுருட்டி 


மடக்கி,அடக்கி "வைத்துகொண்டு 


கணவனுக்கு எது பிடிக்குமோ, 


அதனை மட்டுமே பேசி,எதனை தன் 


மணாளன் விரும்புகின்றானோ 


அதை மட்டுமே செய்து,   மணம் 


செய்து கொண்டவனே தனக்கு 


அரசன்,அவன்தான் தலைவனாக 


வேண்டிய புருஷன், என்ற பதிபக்தி 


உணர்வுகள் இந்த பெண்களிடம் 


வளர்ந்து விட்டால் போதும் 


அன்பர்களே. என் ஜென்மம் 


சாபல்யம் விடும். ஆனால் அப்படி 


ஒரு நல்ல வாய்ப்பினை நிச்சயம் 


இந்தக் காலப் பெண்கள் எனக்கு 


வழங்கிட மாட்டார்கள். அதுவும் 


எனக்குப் புரியும்.இருந்தாலும்  


கவிஞர் கண்ணதாசன் அவர்கள் 


சொன்னது போல " சொல்லுறத 


சொல்லிபுட்டேன்!! செய்யுறத 


செஞ்சுக்குங்க!! நல்லதுன்னா 


கேட்டுக்குங்க !! கெட்டதுன்னா 


விட்டுடுங்க !!" என்ற அந்த மகாகவி 


அவரது கவித்துவம் நிறைந்த 


வாசகத்தின்படியே வாழ்ந்து பழக்கப் 


பட்டவன் இந்த மதுரை TR. பாலு என் 


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!



சரி அன்பர்களே நாம் இப்போது 


கட்டுரையின் உள்ளே செல்வோம்.                                               


இராகவன் திருச்சியிலும் அவனது 


சிநேகிதன்  தேசிகன் மதுரையிலும் 


வாழ்ந்து வருகிறார்கள் ஏதோ 


பெயருக்கு. வாழ்ந்துதான் தீர 


வேண்டும் அதற்காக. அப்படி உள்ள 


போது ஒரு நாள் தேசிகனுக்கும் 


அவன் காதல் மனைவி தேன்மொழி 


இருவருக்கும் இடையில் சண்டை 


சச்சரவுகள்எல்லைமீறிப்போனதால் 


வேறு வழி இன்றி தேசிகன் மனம் 


வெறுத்து வீட்டை விட்டு வெளியேறி  


திருச்சி வருகிறான். அங்கே சத்திரம் 


பேருந்து நிலையம் அருகே நின்று 


கொண்டு இருக்கும்போது அங்கே !!


நண்பன் இராகவன்:-  (இவனை 


பார்த்து) நண்பா! தேசிகா !!எப்படா 


வந்த.உம்.உன்னையைப் பார்த்து 


ஒரு 5வருஷத்துக்கு மேல 


இருக்கும்னு நினைக்கிறேன்.ஏண்டா 


ஆள் ரொம்ப  அசந்து இருக்கே? 


முந்தி எல்லாம் பாத்தா உறிச்சு வச்ச 


பலாப்பழம் மாதிரி எவ்வளவு சூப்பரா 


இருப்பே!இப்ப எண்டா உன் முகம் 


சூப்பி போட்ட மாங்கொட்டை மாதிரி 


இருக்க.  வீட்டுலே எதாச்சும் பெரிய


பிரச்னையா. அவள் எப்படி வழக்கம் 


போல அதே திமிர்தானாடா.சொல்றா  


நான் உன்உயிர்நண்பன் கேக்குறேன். 


தேசிகன்:- ஆமாண்டா ராகவா !! 


அந்தக் கருமத்தை மறக்கனுன்னு 


தானே நானே ஊரு விட்டு ஊரு 


வந்திருக்கேன். நீ என்னடானா அந்த 


திமிர் பிடிச்ச மூதேவியைப் பத்தியே 


பேசுடா.                                                                    


இராகவன்:- என்னையை என்னடா 


பண்ணச் சொல்ற.இதே மூதேவிகள் 


தான் நாம காதலிக்கும்போது நம்ம 


கண்களுக்கு ஸ்ரீதேவிகளாத் தெரிஞ் 


சாளுக. இப்ப மாறிக்கிரிச்சு.               


தேசிகன் :-  ஆமா!! உன் வீட்டுக் 


குயில் எப்படிடா இருக்கு? அதுவும் 


இது மாதிரிதானா ? இல்லை 


இன்னும் படு மோசமா ?சொல்றா.   


இராகவன் :- தேசிகா. வீட்டுக்கு வீடு 


வாசப்படிதான். இதுலே போய் 


என்னத்தை சொல்லச் சொல்ற. 


கழுதை விட்டையிலே முதல்ல 


வர்றது நல்லதா இல்லை பின்னாலே 


வர்றது நல்லதான்னு கேட்டா நான் 


என்னடா பதில் சொல்றது?ஒரு 


கோட்டை அழிக்காம கொள்ளாம 


அதை சின்னக் கோடா மாத்துறது 


எப்படி? தெரியுமாடா உனக்கு?          


தேசிகன்:- அழிக்காம.. அது எப்படிடா 


முடியும்.சிறுசா மாத்த முடியும்..                                  


இராகவன் :- முடுயும்டா. முடியும். 


அதுக்குப் பக்கத்திலேயே கொஞ்சம் 


பெரிய கோட்டைப் போட்டுப் பாரு. 


தன்னாலே இந்தக் கோடு சிறுசா 


மாறிடும். அதுதண்டா வாழ்க்கை. 


இப்ப நீ என் வீட்டுக்கு வர்ற.என் 


மனைவி எப்படி இருக்கான்னு பாரு. 


ஒருவேளை மதியம் சாப்பாடு 


சாப்பிடு. அப்ப தெரியும் உனக்கு. உன் 


நண்பன் எப்படி ஒரு தேவதையுடன் 


வாழ்ந்துட்டு இருக்கான்னு. புரியுதா 


போலாமா வீட்டுக்கு.                                   


தேசிகன்:- நண்பா.அந்த மாதிரியான 


விளையாட்டு எல்லாம் தயவு செஞ்சு 


வேணாண்டா.பிளீஸ்.நான் 


பாட்டுக்கு ஓட்டல்ல சாப்டுட்டு ஊரு 


போய் சேர்ந்துருவேன். 


வேணாண்டா.                                                 


இராகவன் :- சும்மா பிகு 


பண்ணாதடா வாடா வந்து என் 


சம்சாரத்தைப் பாத்த பிறகு தெரியும் 


உனக்கு.உன் மனைவி எப்படி 


நல்லவன்னு அதுக்குத்தான் நான் 


சிம்பாலிக்கா அந்தக் கோடு 


கதையை உனக்கு சொன்னேன். 


வாடா.பேசாம.வாயை மூடிட்டு            


(இருவரும் மோட்டார் பைக்கில் 


இராகவனின் வீட்டுக்கு 


போய்சேருகின்றனர். அவனை முன் 


அறையில் உட்காரவச்சுட்டு)                 


தேசிகா! நீ இந்தப் பேப்பரை 


பாத்துட்டு இரு. நான் சாப்பாட்டுக்கு 


ஏற்பாடைப் பண்ணிட்டு வாரேன் 


(என சொல்லிவிட்டு மனைவி 


மங்களத்தை தேடி வீட்டினுள் 


செல்கிறான் இராகவன்)                                                   


இராகவன் :- மங்களம்!!. மங்களம்!!. 


எங்கடா கண்ணு இருக்க.                              


மங்களம் :-  சும்மா ஏன் இந்த வால் 


அருந்த நாய் மாதிரி இந்தக் கத்து 


கத்துறீங்க? உம்..ஒரு தர கூப்பிட்டா 


போதும்னு உங்க மரமண்டைக்கு 


எத்தனை தடவை சொல்றது ஒரு 


மனுஷி. சும்மா சும்மா கத்தியே என் 


உசிரை எடுத்துராதீங்க.                          


இவர்கள்இருவரும் பேசிக்கொள்வது 


முன் அறையில் உட்கார்ந்து 


இருக்கும் தேசிகனின் காதுகளில் 


ஈட்டி போல பாய்கிறது. பேப்பரை 


மடிச்சு வச்சுட்டு நிமிர்ந்து உட்காரு 


கின்றான் தேசிகன்.                                       


இராகவன்:- அடி கள்ளி. கோவிச்சுக் 


கிரப்பக் கூட நீ எவ்வளவு அழகா 


இருக்க தெரியுமா?                                           


மங்களம்:- சும்மா ஐஸ் 


வைக்காதீங்க.நீங்க விஷயத்துக்கு 


வாங்க. என்ன வேணும் உங்களுக்கு. 


இல்லாட்டி நீங்க இப்படி வலிய வந்து 


நடிக்க மாட்டிங்க. சொல்லுங்க.          


இராகவன்:-  இல்லை ஊர்லே 


இருந்து என் பால்ய சிநேகிதன் 


தேசிகன் பஜார்ல வர்ரச்ச பாத்தேன்.  


மங்களம்:- நானும் உங்க வண்டி 


சத்தம் கேட்டவுடன் எட்டி பாத்தேன் 


நீங்க உங்களோட இன்னொரு 


நாயை கூட்டிட்டு வந்ததை 


பாத்தேன்.                                                           


இராகவன்:- ஏய். சத்தம் போட்டு 


பேசாத கண்ணு. அவன் காதுலே 


விழுந்துறப் போது.                                       


மங்களம்:- விழுகட்டுமே. எனக்கு 


என்ன.                                                                        


இராகவன் :- உனக்கு என்ன, 


ஒன்னும் இல்ல. எல்லாமே 


எனக்குத்தான் . எனக்குத்தான்.         


மங்களம்:- சும்மா வழியாதீங்க 


எனக்கு நேரம் இல்லை.மேட்டரை 


சொல்லுங்க.                                                     


இராகவன்:- அதான் இதனை 


வருஷம் கழிச்சு பாக்றோம்டா. 


வீட்டுக்கு வந்து ஒருவாய் சாப்டுட்டு 


போலாம்னு கூட்டி வந்தேன். 


ஹி..ஹி.. (அசடு வழிந்திட நமட்டு 


சிரிப்பு சிரிக்கிறான் இராகவன்)            


மங்களம்:-  யோவ்!!.உமக்கு அறிவு 


கிறிவு எதாச்சும் இருக்குதாய்யா.       


இராகவன்:- (தனக்குள். உம்..அது  


இருந்தா உன்னை ஏன் நான் 


காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டு  


இப்படி சீரழியிறேன்)  ஏன் அப்படி 


கேக்கிற மங்களம்.                                          


மங்களம் :- உம் வீட்டுல இருக்கிறது 


வீசம்படி அரிசி வடிக்கிற பானை 


ஒன்னே ஒண்ணுதான் இருக்கு. 


அதுல பொங்கினா உனக்கும் 


எனக்குமே பத்த மாட்டேங்குது.  இந்த                              


லட்சணத்துலே ஊர்லே இருந்து 


கண்ட கண்ட நாய்களை எல்லாம் 


கூட்டி வந்து பொங்கிப் போடுரின்னு 


சொன்னா நான் என்ன 


என்...கையிலேயா அரிசியைப் 


போட்டு பொங்கி வடிக்க முடியும். 


உம் .. பேசாம உங்க பிரண்டை 


கூட்டிட்டு போயிருங்க  எனக்கு 


கெட்ட கோபம் வந்துரும்.                           


இராகவன்:- (சற்றே உரத்த குரலில் 


கோபமாக) ஏண்டி நானும் பொறுத்து 


பொறுத்துப் போறேன். நீ ரொம்ப 


எல்லையை மீறிப் பேசுறே.ஏண்டி 5 


வருஷம் கழிச்சு பாக்றேன் 


நண்பனை அவனுக்கு வீட்டுக்கு 


கூட்டி வந்து ஒரு வாய் சோறு 


போடாம இருந்த நான் மனுஷனாடி.  


மங்களம்:- அப்படின்னு உங்களை 


நான் ஒன்னும் சொல்லலையே. 


நீங்களா நினைச்சுக் கிட்டா அதுக்கு 


நான் என்ன பண்றது.போங்க.பேசாம 


பொத்திக்கிட்டு.                                               


தேசிகன் :- (நண்பன் ராகவன் அவன் 


மனைவி மங்களம் இருவரின் 


உரையாடல் அவனைப்பொறுத்த 


வரைஒருஅதிர்ச்சிவைத்தியமாகவே


அமைந்து விட்டது. ஆம் அன்பர்களே. 


மங்களத்தைப் பார்த்த பின்பு தான் 


தன் மனைவி எவ்வளவு தங்கமான 


பெண் என்பதைப் புரிந்துகொண்ட 


தேசிகன், நண்பனின் வீட்டை விட்டு 


வெளியே வந்து ஊர் திரும்புகிறான். 


மனைவி தேன்மொழியை தனது 


நெஞ்சாரத் தழுவிக் கொள்கிறான். 


கதை இத்துடன் முடிகிறது 


அன்பர்களே. இது விருந்தோம்பல், 


மற்றும் காதல், பிறகு, திருமணம், 


அது சம்பந்தப்பட்ட வாழ்க்கை 


அதனுடன் இணைந்த கதைகளாக 


அமைந்து விட்டது.அதாவது 


இதுபோல விருந்தோம்பல் 


இருந்திடக் கூடாது அதேபோல் இது 


போல காதலித்துக் கல்யாணம் 


செய்து கொண்டவர்களும் 


வாழ்ந்திடக் கூடாது என்பதனை 


அறிவுரையுடன் கூடிய விளக்கங்கள் 


நிறைந்திட்ட கதைகளாக 


இருப்பதினால் நீங்கள் 


படித்துபார்த்து இது போல 


வாழ்ந்திடாமல் நல்ல வாழ்க்கை 


வாழ வேண்டும் என வேண்டி 


விரும்பி கேட்டுக் கொண்டு எனது 


மிக மிக நீண்ட கட்டுரைதனை 


படித்திட்ட ங்களது பொறுமைக்கு 


என் தலைதாழ்ந்த நன்றியையும் 


வணக்கத்தினயும் சமர்ப்பித்து விடை 


பெறுகிறேன் அன்பர்களே !! நன்றி!!


வணக்கம்!! அன்புடன்.மதுரை 


TR.பாலு.மீண்டும் நாளை 


சந்திப்போமா என் அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !!

Wednesday, June 26, 2013

ஒருவர் நமக்கு செய்த நன்றியை நாம் அறிந்திட வேண்டும் !!





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 


தமிழனாக   வாழ்ந்திடுங்கள் !!                         


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!           


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!  


தமிழ்பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும் பொழுது !!       



முன்னுரை :-    உலகெங்கிலும் 


அன்போடும் தூய தமிழ் பண்போடும் 


வாழ்ந்து வரும் என் உயிரினும் 


மேலாக நான் போற்றி 


வணங்கிவரும் நல்ல தமிழ் உடன் 


பிறப்புகளே !!   


அனைவருக்கும் என் இதயம் கனிந்த 


நல் வாழ்த்துக்கள்.!!    என்னுடைய 


எழுத்துக்களைக்கூட படித்து 


பார்த்திட இந்த உலகில், ஐக்கிய 


அமெரிக்க குடியரசு, ரஷ்யா, 


போலந்து,கத்தார்,பிரிட்டிஷ்கூட்டரசு 


ஜெர்மன்,கனடா,நெதர்லாந்து,ஆகிய 


நாடுகளில் பார்வையாளர்கள் 


இருப்பார்கள்,  நான் எழுதுவதை 


அவர்கள் பார்ப்பார்கள், படிப்பார்கள் 


என்று, (சத்தியமாக நான் 


சொல்கிறேன் என் அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே!!)நான் கனவில் கூட 


நினைத்துப் பார்த்திடவில்லை.  


இதுபோல உலகில் உள்ள நாடுகளில் 


எனக்கு நல்ல பார்வையாளர்களைப் 


பெற்றுத் தந்த அந்த எல்லாம் வல்ல 


இறைவனுக்கு நான்என்றும் அடிமை


அந்த நல்உள்ளங்களுக்கு நான் என் 


நெஞ்சார்ந்த நன்றிகளை அவர்களது 


தூய மலர் பாதங்களில் வைத்து 


வணங்குகிறேன்.  நன்றி!! நன்றி !!      



தினம்  ஒரு திருக்குறள்.                                      


அதிகாரம்   :-  செய்ந்நன்றி அறிதல்.    


குறள் எண் :-  104.                                                   



தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணை     *                                                                                          யாக்   

கொள்வர் பயன் தெரிவார்... ... ... ... ... ... ... ... ... ... ... ...  



விளக்கம் :-  


ஒருவன் தினையளவாகிய  


உதவியைச் செய்த போதிலும் அதன் 


பயனைஆராய்கின்றவர், அதனையே 


பனையளவாகக் கொண்டு (பனை 


மரம் அளவு உயரமாக)போற்றுவர். 


இது வான் புகழ் திருவள்ளுவர் 


நமக்கு அருளிய திருக்குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.                     


நமது நாட்டு நடப்பு விளக்கம்:-                


இந்த குறள் விளக்கம் பக்கத்தில் 


முன்னுரையாக நான் எழுதி உள்ள 


விஷயங்களையே நமது நாட்டு 


நடப்பு விளக்கமாக ஏற்றுக் கொள்ள 


வேண்டுமாய் பணிவன்புடன் 


கேட்டுகொண்டுவிடை பெறுகிறேன்.                       


நன்றி!! வணக்கம்!! மீண்டும் நாளை 


சந்திப்போமா.  அன்புடன் மதுரை T.R. 


பாலு.

Tuesday, June 25, 2013

நல்ல காலத்திற்கு காத்திருங்கள்!!






உடல்மண்ணுக்கு!! உயிர் தமிழுக்கு!! 


தினம் ஒரு திருக்குறள்.                                           


அதிகாரம்  :-  காலம் அறிதல்.                              


குறள் எண்:-  485.                                             



காலம் கருதி இருப்பர் கலங்காது         


ஞாலம் கருது பவர்... ... ... ... ... ... ...                    



விளக்கம் :-  அகில உலகத்தை தனது 


ஆளுகையின் கீழ் கொண்டுவர 


வேண்டும் என கருதுகின்றவர்,            


வேறு எதைப்பற்றியும் எண்ணிக்      


கலங்காமல்அதற்குஏற்ற காலத்தை 


கருதிக் கொண்டு பொறுத்து  அமைதி 


காத்து இருப்பார். இது வான்புகழ் 


திருவள்ளுவர் நமக்கு அருளிய 


திருக்குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.மீண்டும்நாளை சந்திப்போமா 



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-        


உலகெங்கிலும் பண்புடனும் 


அன்புடனும் வாழ்ந்துவரும் என் 


உயிரினும் மேலான உடன் 


பிறப்புக்களே! அனைவருக்கும் 


எனது இனிய நண்பகல் வணக்கம்.   


(பகல் மணி 12.௦5) இன்றைய தினம் 


நான் மேலே குறிப்பிட்ட குறளுக்கு 


பொருளாக,விளக்கமாக,இலக்கண


மாக,இலட்சியமாக, வாழ்ந்து வரும் 


தன்னிகரில்லாத ஒரே தலைவர் 


உலகத் தமிழ் இனத்தின் 


பாதுகாவலர், தமிழ்நாட்டின் மூத்த 


மற்றும் முதுபெரும் தலைவர்,தமிழ் 


இனத்திற்கு,தமிழ் நாட்டிற்கு,தமிழ் 


மொழிக்கு ஏதேனும் ஆபத்து வருகிற 


போதெல்லாம் தமது இயக்கத்தின் 


முன்னணித் தலைவர்கள், தொண்டு 


உளம் படைத்தோர்கள்,ஆக இந்த 


அத்துனைபேர்களையும் தமக்கு 


பின்னால் நிறுத்தி தான் மட்டுமே 


இந்த தள்ளாத 9௦ வயது காலத்தேயும்  


தலைமை ஏற்று செயல் 


படுத்துவதில் கலைஞருக்கு நிகர் 


கலைஞர் மட்டுமே.  ஆட்சி மாற்றம் 


காரணமாக இன்று அவரையும் 


அவரது கழகத்தினரையும் எந்தெந்த 


வகையில் பொய்வழக்குகள் 


போட்டாலும் காராக்கிரகத்தில் 


உள்ளே தள்ளினாலும் இங்கேயும் 


அங்கேயும் இழுத்தடிக்கப்பட்டு இதய 


நோய் வாய்பட்டவர் சேலம் 


வீரபாண்டி ஆறுமுகம் என்பதனை 


அறிந்தே அந்த சேலம் மண் பெற்று 


எடுத்த வீரமகன் கழக முன்னோடி 


அவரை வலுக்கட்டாயமாக 


எமனிடம் இந்த அரசு ஒப்படைத்து  


அகம் மகிழ்ந்தாலும் அவை 


அனைத்தையும் தனது இதயம் எனும் 


இரும்பு பெட்டகத்தில் வைத்து நல்ல 


காலத்திற்காக காத்திருக்கும் 


கலைஞர் அவர்களுக்காகவே 


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு 


முன்பாகவே அறிந்து,தெரிந்து, 


புரிந்து  திருவள்ளுவர் குறள் எழுதி 


இருக்கிறாரோ எனக்கு தெரியாது 


அன்பர்களே !! அதனை எண்ணி 


அதனால் எனது மெய் சிலிர்கிறது. 


கண்களில் கண்ணீர் பெருகுகிறது. 


இதயம் கனக்கிறது.நல்ல காலம் 


வந்து கலைஞர் அவர்கள் மீண்டும் 


ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இனி 


எதிர்காலத்தில் இது போன்ற 


நிகழ்வுகள் நிகழா வண்ணம் 


மக்களை பாதுகாத்து வழி நடத்தி 


செல்லும் ஆற்றலும் வல்லமையும் 


ஒருங்கே அமையப் பெற்ற என் 


தானை தலைவர் கலைஞர் 


அவர்கள் இருக்கின்றவரை நாம் 


எதற்கும்கலங்கப்போவதும் 


இல்லைகண்ணீர் விடப் போவதும் 


இல்லை.காலம் வரும்வரை கட்டுப் 


பட்டு இருப்போம்.பொறுமை 


காப்போம்.பிறகு வரலாறு 


படைப்போம் என்று சொல்லி 


பேரறிஞர் அண்ணா புகழ் வாழ்க!! 


கலைஞர் வாழ்க என்று சொல்லி 


இத்துடன் குறள் விளக்கத்தினை 


நிறைவு செய்து விடை பெறுகிறேன். 


நன்றி! வணக்கம் !!                                       


அன்புடன்.மதுரை T.R. பாலு.