Friday, June 14, 2013

விண்ணின் மழைத்துளி !! மண்ணின் உயிர்த்துளி !!





உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!    


தமிழனாக வாழ்ந்திடுக!!                           


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!   


தமிழ்பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும்போது!!                


தினம்ஒருதிருக்குறள்.                                       


அதிகாரம்  :-  கொடுங்கோன்மை.         


குறள் எண்:-  557.                                             


துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் 


அளியின்மை வாழும் உயிர்க்கு... ... ... ... ... ... ... ... ...     


விளக்கம் :-  மழைத்துளி எதுவும் 


இல்லாதிருத்தல் இந்த உலகத்திற்கு 


எவ்வளவு கொடுமையானதோ அந்த 


அளவு கொடுமை நிறைந்தது அந்த 


நாட்டில் வாழ்ந்திடும் குடிமக்களுக்கு 


அந்த நாட்டை ஆண்டுகொண்டு 


இருக்கும் அரசனுடைய  (முதல்வர்) 


அருள் இல்லாத ஆட்சி. இது வான் 


புகழ் திருவள்ளுவர் நமக்கு அருளிய 


திருக்குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.                                                                            



(நமது நாட்டு நடப்பு விளக்கம்:-  


இந்தக் கட்டுரையில் வரும் 


சம்பவங்கள், குறிப்புகள், விளக்க 


உரைகள் இவை யாவும் ஆசிரியரின் 


கற்பனையில் உருவானவையே  


அன்றி வேறு தனிப்பட்ட யாரையும் 


எவரையும்குறிப்பிட்டுஎழுதப்பட்டது 


அல்ல.)                                                                 



அந்த நாடு ஒரு தீபகற்ப நாட்டின் 


தென் கடைக்கோடியில் உள்ள ஒரு 


தொன்மைமிக்க மொழி பேசும் நல்ல 


தூய்மையான மக்கள் நிறைந்த ஒரு 


மாநிலம். இரண்டு ஆண்டுகளுக்கு 


முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தல் 


அதில் சூழ்ச்சியின் மூலம் ஒரு நடிகர் 


கட்சியின் வாக்குகளை நயவஞ்சக- 


மாகப் பெற்று அதன் மூலம் உண்மை 


உணர்வுடன், தொண்டு செய்யும் நல் 


உள்ளத்துடன் தூய்மை நிறைந்த 


அந்த நாட்டு மக்களின் நலத்திற்கு 


வேண்டிய அனைத்து பணிகளும் 


செய்து வந்த ஒரு முதுபெரும் 


தலைவர் நல்ல அரசியல் அனுபவம் 


பெற்ற ஆற்றல் உள்ள அரசினை வழி 


நடத்திசெல்லும் திறனில் சக்கரவர்த் 


-தியாய் திகழ்ந்து இருந்த கலைஞர் 


திரு அன்புநிதி, அவரை தோற்கடித்து 


ஆட்சிப் பொறுப்பை ஏற்று என்று திரு  


ஜெயந்தன் முதல்வராக பணி செய்ய 


துவங்கினாரோ அன்றோடு அந்த 


நாட்டின் இயற்கை மழை வளம் படு 


மோசமாகப் போய்விட்டது. பருவ 


மழை பொய்த்துப் போனதனால் 


எல்லா விலைவாசிகளும் கிடுகிடு 


எனவே உயரப் பறந்து மக்கள் படும் 


வேதனையும் கஷ்டமும் தாங்கிட 


முடியாத அளவு துன்பமும் துயரமும் 


கொண்டு அவர்கள் வேதனையின் 


விளிம்பிற்கே சென்று அல்லல் பட்டு 


அவதிப் பட்டு இன்றையதினம் அந்த 


நாட்டினில் வாழ்ந்துவருகிறார்கள். 


காரணம் அந்த நாட்டு முதல்வர் திரு 


ஜெயந்தனின் அரசாளும் முறை, 


ஆட்சி எப்படி நடத்துவது என்ற 


அரிச்சுவடி அறியாதவர் ஜெயந்தன். 


என்னமோ விதி செய்த சதி. நடிகர் 


கட்சி வாக்கு வங்கியைப் பெற்று 


ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அவர் 


ஆடும் ஆட்டமும் பாடுகின்ற பாட்டும் 


அப்பப்பா சொல்லிட முடியாத மன 


வேதனையில் அந்த நாட்டு மக்கள் 


தவித்துகொண்டுஇருக்கின்றார்கள்.


இதுவே உண்மை. இரண்டாயிரம் 


ஆண்டுகட்கு பிறகு வரும் காலத்தில் 


அந்த நாடு இப்படி ஒரு அரசனை 


தேர்ந்து எடுத்து மக்கள் இந்த அளவு 


மன வேதனை அடைவார்கள் 


என்பதனை அன்றே சொன்னார் 


வான் புகழ் திரு வள்ளுவர். அதனால் 


தான் அவர் தெய்வப் புலவர் என்று 


அழைக்கப் படுகிறார். இந்த கருத்தை 


யாவரும் புரிந்து கொள்ள 


வேணுமாய் பணிவன்புடன் கேட்டு 


விடைபெறுகிறேன். நன்றி 


வணக்கம். அன்புடன் மதுரை T.R. 


பாலு.

No comments:

Post a Comment