Friday, June 21, 2013

" நன்னடத்தை " இல்லாத மனைவியை உடைய கணவர்களது நிலை ?!?!!





உடல்மண்ணுக்கு!! உயிர் தமிழுக்கு!!  


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!                 


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!  


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!   


தமிழ்பேசும்சகோதர சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும்போது!!              


தினம் ஒரு திருக்குறள்.                                     


அதிகாரம்:-வாழ்க்கைத்துணைநலம். 


குறள்எண் :- 59.                                                


புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்         *                                                                                          முன்  ஏறுபோல் பீடு நடை ... ... ... ... ... ... ...... ... ... ... ... ....     


விளக்கம்:பெண்இனத்தின்மாண்பை


நற்பெயரை,பெருமையை,புகழை, 


காக்க விரும்பும் பரிசுத்த மனம் 


இல்லாத மனைவியை கொண்ட 


கணவர்களுக்கு தம்மை இகழ்ந்து 


பேசும் பகைவர்கள் முன் காளை 


போல நிமிர்ந்து நடக்கும் பெருமித 


நடை இருக்காது. இது வான்புகழ் 


திருவள்ளுவர் நமக்கு அருளிய 


திருக்குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.                                                                       



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-              


செல்லத்தாயி:- ஏன் அக்கா !! 


பொன்னுத்தாயி அக்கா.என்ன சுகமா 


இருக்கியா. பார்த்து எம்பூட்டு நாளா 


ஆச்சு. வீட்டுக்காரர், புள்ள குட்டிங்க 


அல்லாரும் சுகமா.அப்புறம் உன் 


நாத்தனார் "வசந்த சேனை" எப்படி 


இருக்கா. ஏதாவது திருந்தி கிருந்தி  


இருக்காளா இல்லை இன்னும் 


"அதே மாதிரி"த்தானா. அவளோட 


வீட்டுக்காரர் இப்ப எப்டிப்பா கீறாரு.                                             


பொன்னுத்தாயி:- உம்..அந்தக் 


கொடுமையை ஏண்டி காலங் 


காத்தாலே போட்டுக்குடையிற. 


எல்லாம் தலை எழுத்து. உம்... 


நாத்தனார் புருஷன் பேரு போகிற 


இடமெல்லாம் நாறிக் கிடக்குதுடி.       


செல்லத்தாயி:- என்னக்கா இது 


அநியாயமா இருக்கு. அவ செய்ற 


தப்பான தொழிலுக்கு அவ புருஷன் 


என்னக்கா பண்ணுவாரு.                             


பொன்னு:- அதுதாண்டி   உலகம்.


பொண்டாட்டி செய்ற நல்லதும் 


புருஷனைதான் சேரும். அவ செய்ற 


பாவமும் புருஷனைத் தான் வந்து 


சேரும்னு சும்மாவா சொல்லி 


இருக்காங்க. எல்லாம் 


தலையெழுத்துடி. தலையெழுத்து.                                               


செல்லத்:-  அடப் பாவமே. உன் 


நாத்தனாரைக் கல்யாணம்பண்ணிய 


புதுசில எல்லாம் அந்த மனுஷன் 


வீதிலே நடந்து வந்தாலே என்ன ஒரு 


தோரணையா இருக்கும். சும்மா ஜாம்  


ஜாம்னு பொலி காளைமாதிரி இல்ல 


அக்கா நடந்து வருவாரு.இப்ப அந்த 


நடை எல்லாம் போச்சா அக்கா.        


பொன்னுத்:- எல்லாம் போச்சுடி. 


அவுக இப்ப எல்லாம் குந்தின 


இடமெல்லாம் சிந்தின மூக்கா 


இருக்கார்டி. அவ்வளவு  கேவலமா 


அவரை எதிரிங்க பாத்து மூஞ்சிலே 


காறித்துப்புராய்ங்கடி. பொண்டாட்டி 


ஒழுங்கானவளா இல்லன்னு 


வச்சுக்க, அம்புட்டுத்தான் ஆம்பளை 


நிலைமை அதோகதிதான் 


அப்படின்னு நம்ம தெய்வப் புலவர் 


திருவள்ளுவர் எவ்வளவு தெளிவா 


நம்ம மதுரை TR.பாலு ஐயா எடுத்து 


கொடுத்து இருக்குற திருக்குறள் 


நமக்கு சொல்லி இருக்கு. படிச்சு 


பாருடி நீயும். எனக்கு நேரமாச்சு நான் 


போயிட்டு வாரேன்.                                          


செல்லத்:- சரிக்கா.அயையோ என் 


வீட்டுக்காரர் வர்ற நேரம் ஆய்ருச்சே 


நானும் வாரேன்கா.                                             


நன்றி !!                                      வணக்கம்!! 


அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment