Monday, June 24, 2013

பொறுமைக்கு உண்டு என்றும் பெருமை !!





உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!! 


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!                 


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!! 


தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும் பொழுது!!         



தினம் ஒரு திருக்குறள்.                                


அதிகாரம்  :-  பொறையுடைமை.           


குறள் எண்:-   156.                                                 


ஒறுத்தார்க்குஒருநாளைஇன்பம்பொறுத்தார்க்கு**                                                                                                     ப்  

பொன்றுந் துணையும் புகழ்... ... ... ... ... ... ... ... ... ... ... 


விளக்கம் :-தீங்கு செய்தவரைப்   


பொறுக்காமல் வருத்தினவர்க்கு/


நமக்குத் துன்பம் தந்தவர்க்கு  ஒரு 


நாள் மட்டுமே  இன்பம்.  ஆனால்           


அத்துன்பத்தை பொறுத்துக்கொண்ட 


நபருக்கு இந்த உலகம் அழியும் 


வரைக்கும் புகழ் உண்டு. இது 


வான்புகழ் திருவள்ளுவர் நமக்கு 


அருளிய திருக்குறளும் அதற்கான 


விளக்கமும் ஆகும்.மீண்டும் நாளை 


சந்திப்போமா அன்பு உள்ளங்களே !!   



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-               


(இந்தக் கட்டுரையில் குறிப்பிடும் 


சம்பவங்கள்/நிகழ்வுகள்/


உதாரணங்கள் இவை யாவும் 


முழுக்க முழுக்க எமது சுயமான 


கற்பனையில் உதித்ததே அன்றி 


வேறு தனிப்பட்ட யாரையும் 


எவரையும் எந்த அமைப்பையும் 


குறித்து எழுதப்பட்டது அல்ல. இது 


கட்டுரை ஆசிரியர் தரும் தன் நிலை 


விளக்கம் ஆகும்.)                                              


உலக மக்கள் தொகையில் தனக்கு 


என ஒருதனி இடம் பிடித்த பல இன, 


பல மொழி, பல்வேறு கலாச்சார 


உணர்வு கொண்ட மக்கள் நிறைந்த 


ஒரு தீபகற்ப நாடு அது.                                  


அந்த நாட்டின் தென்கடைகோடியில் 


தொன்மைமிக்க தூய மொழி பேசும் 


மக்கள் வாழும் ஒரு மாநிலம். கடும் 


உழைப்பாளிகளும் மொழியின் மீது 


தீவிரமான பக்தியும் நிறைந்த 


மக்களாக ஒரு காலத்தில் 


வாழ்ந்திருந்த மாநிலம் அது.  


ஆனால் இன்றோ நிலைமையே 


வேறு. உடல் மண்ணுக்கு உயிர் 


மொழிக்கு என்ற உணர்வுடன் 


வாழ்ந்திருந்த மக்கள் இன்று பலம் 


இழந்து ஆட்சியாளர்கள் செய்திடும் 


அக்கிரமங்களைக் கண்டு மனம் 


பொறுக்க முடியாமல் உள்ளத்தில் 


உதிரக் கண்ணீர் வடித்தபடி காலம் 


கடத்திக் கொண்டு உள்ளனர்.  ஏன் 


இந்த நிலைமை. எல்லாம் ஆட்சி 


மாறியதால் அந்த காட்சி மாறியதால்  


வந்த நிலைமை.  ஆம் அன்பர்களே. 


இரண்டு ஆண்டுகட்கு முன்பு நடை 


பெற்ற மக்கள் பொதுவாக்கெடுப்பில் 


மக்களுக்கு இலவசம் என கவர்ச்சி 


விளம்பரம் தந்து துக்ளக் தர்பார் 


சதிகாரர்கள் பின்னிய சதி வலையில் 


அஜயகாந்த் என்ற நடிகர் கட்சியோடு 


செய்துகொண்ட தொகுதி உடன்பாடு 


இதன் காரணமாக மக்கள் 


வாக்கெடுப்பில் வெற்றிகண்டு ஆட்சி 


தனைக் கைப்பற்றிய அரசாங்கம் 


அதற்கு  5 ஆண்டுகள் முன்புவரை  


மக்கள் நலத் திட்டம் பலவற்றை 


முன் நிறுத்தி திறம்பட ஆட்சி செய்த 


பாரம்பரியம் மிக்க கட்சியை மக்கள் 


தோற்கடித்ததன் பலனை இன்று 


அவர்கள் அனுபவித்துக்கொண்டு 


உள்ளனர். மக்களின் உண்மையான 


செல்வாக்கு மிக்க அந்த முதுபெரும் 


தலைவர் திரு அன்புநிதிஅவர்களை 


ஆளும் கட்சி பல்வேறு அடக்கு 


முறை கொண்டு அழித்திடப் 


பார்த்தாலும் அதை எல்லாம் அந்த 


அநியாயங்களை,அந்த 


அக்கிரமங்களை, ஆட்சியாளர்கள் 


போட்ட பொய் வழக்குகளால் 


அலைக்கழிவு செய்யப்படும் நிலை, 


இவை அத்தனையையும் பொறுத்துக் 


கொண்டு புன்முறுவல் பூத்திட 


இந்த 95 வயது  காலத்திலும் 


மக்கள் பணி செய்திடும் திரு 


அன்புநிதி அவர்களுக்காகவே 


ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 


மேற்சொன்ன திருக்குறளை என் 


அய்யன் திருவள்ளுவன் 


எழுதிவிட்டு சென்று உள்ளதை 


எண்ணிடும்போது எனது மெய் 


சிலிர்கிறது. தர்மத்தின் வாழ்வு 


தன்னை சூது கவ்வும்.ஒரு நாள் 


தர்மம் வெல்லும். அந்த நாளும் 


அம்மாநிலத்தில் வெகு விரைவில் 


வர வேண்டும் என மக்கள் மனதில் 


வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள் 


என பேசிக்கொண்டிருப்பது நானிலம் 


முழுவதும் எதிரொலிக்கிறது. 


வள்ளுவர் புகழ் வாழ்க. நன்றி. 


வணக்கம். அன்புடன்.மதுரை 


T.R.பாலு. மீண்டும் நாளை 


சந்திப்போமா ? என் அன்பு நிறைந்த 


நெஞ்சங்களே!!

No comments:

Post a Comment