Saturday, June 22, 2013

வறிய நிலையில் உள்ள ஏழைக்கு உதவிடும் மனம் வேண்டும் இறைவா !!







உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!                 


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!   


தமிழ்பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும் பொழுது !!     



தினம் ஒரு திருக்குறள்.                                   


அதிகாரம்  :-  புகழ்.                                         


குறள் எண்:-  231.                                             


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது 


ஊதியம் இல்லை உயிர்க்கு... ... ... ... ...   


விளக்கம்:-  வறியவர்க்கு/ஏழை 


எளிய மக்களுக்கு ஈதல்/உதவி 


செய்திட வேண்டும். அதனால் புகழ் 


உண்டாகி வாழ்ந்திட வேண்டும். 


அந்த புகழ் இல்லாமல் உயிர்க்கு 


வேறுவகையான ஊதியம் என்பது 


வேறு ஒன்றும் இல்லை. இது 


வான்புகழ் திருவள்ளுவர் நமக்கு 


அருளிய குறளும் அதன் விளக்கமும்  


ஆகும்.மீண்டும்நாளை சந்திப்போமா 


(பேராசிரியர் திரு.சாலமன் 


பாப்பையா அவர்கள் பாணியே 


எனக்கும் வருகிறது. மன்னிக்க 


வேண்டுகிறேன்.)                                           



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-               


கந்தசாமி  :-  முதலாளி !! அய்யா 


கும்புடுறேன் சாமி.                                              


ரங்கசாமி:-    வாடா !! கந்தா. என்ன 


காலங்காத்தாலேயே   இங்க 


வந்திருக்க.. உம்..என்னலே 


விசேஷம்.(தனது மனதுக்குள் 


என்னவோ பிட்டைப் போட்டு பணம் 


கேக்கத்தான் வந்திருக்கான்னு 


நினைக்கேன். பாத்துக்குடுவோம் )  


கந்த:-  இல்லை முதலாளி. நாங்க 


சலவைத்தொழிலாளிகள் கூட்டுறவு 


சங்கத்துக்காக கட்டடம் ஒன்னு கட்ட 


முடிவு செஞ்சிருக்கோம் முதலாளி.  


ரங்க:-  என்னது ? கட்டடமா ! ஏலே. 


கட்டடம் கட்டுறதுன்ன என்ன லேசுப் 


பட்ட காரியமாலே. அதுக்கு 


லட்சக்கணக்குலே பணம் 


வேனுமுல்லே பணம். அதுக்கு 


எங்கலே போய் மடிஏந்தப்போறீங்க? 


கந்த:- அது என்ன முதலாளி அப்பிடி 


கேட்டுப்புட்டீக ? உங்களை மாதிரி 


பெரிய மனுசங்க,முதலாளிங்க 


இருக்குறப்போ எங்களுக்கு என்ன 


முதலாளி கவலை?                                         


ரங்க:-  சரிதாம்போ!! நான்லாம் 


முதலாளின்னு யார்லே சொன்னா 


உனக்கு. நானே 5க்கும் 1௦க்கும் 


அன்னாடம் நாயா பேயா வேலை 


பாத்துக்கிட்டு கிடக்கேன். கிறுக்குப் 


பயபுள்ளே. என்னையைப்போய் 


முதலாளி கிதலாளி அப்படின்னுட்டு 


இன்னொருவாட்டி சொல்லாதலே. 


கந்த:-  ஏன் முதலாளி இப்படில்லாம் 


பொய் சொல்லுதீக. வீடு,வாசல், 


தோட்டம்,மணியம்,சொத்து,வண்டி, 


அம்புட்டும் வச்சுக்கிட்டு..நீங்க 


ஒன்னு.. அப்பிடி எல்லாம் பேசாதீக 


முதலாளி இன்னொரு வாட்டி.          


ரங்க:-  அட! கிறுக்குப் பயபுள்ளே 


எல்லாம் கடன்லே இல்லே கிடக்கு. 


இந்தா பாரு கந்தா. என்னமோ 


வந்தியா அழுக்குத்துணியை 


மூட்டை கட்டி கொண்டு போனியா, 


நல்லா வெள்ளை வெளேர்னு 


வெளுத்துதுணியக் கொண்டாந்தியா 


அதுக்கு உண்டான சில்லறையை 


வாங்கிட்டுப் போனியா அந்த 


மட்டோட நின்னுக்கடா கந்தா. இது 


எல்லாம் உனக்கு அதிகப் பிரசங்கித்  


தனமான வேலை. ஆமா 


அம்புடுதான் நான் சொல்லுவேன். 


நன்கொடை கழுதை குதிரைன்னு 


கேட்டுக்கிட்டு எங்கிட்ட நீயோ இல்ல 


உங்க சங்கத்து ஆட்களோ யாரும் 


வந்துராதீகப்பா ஆமா பத்து நயா 


பைசா தர மாட்டேன். யாபகம் 


வச்சுக்க. என்ன சரியா.                               


கந்த:- அட போங்க முதலாளி உங்க 


தரத்துக்கு பத்து பைசால்லாம் நான் 


வாங்குவேனா. ஏதோ உங்க அப்பா 


அதுக்கு அப்புறம் நீங்க,உங்க மவன் 


உங்க பேரன் இப்படி உங்க குடும்பம் 


ஒட்டு மொத்தத்துக்கும் நாங்க 


பரம்பரைபரம்பரையா துணி 


வெளுத்துகிட்டு இருக்கோம். நீங்க 


உதவலன்னா நாங்க வேற யார்ட்ட 


முதலாளி போய் கேக்க முடியும். 


நீங்களே சொல்லுங்க.                                      


ரங்க:- நீ யார்ட்டையும் போய் கேக்க 


வேணாம். இப்ப நடையைக்கட்டு.   


(கோபத்துடன்) போடா போடா போய் 


பொழைப்பை பாரு. வந்துட்டிங்க 


காலங்காத்தாலே மனுஷன் உசுரை 


எடுக்க. போ.போ.                                                    


கந்த:-(கவலைதோய்ந்தமுகத்தோடு) 


(மனசுக்குள்உம்..அந்தக்காலத்துல 


கண்ணதாசன் சும்மாவாமுதலாளி 


பாட்டு எழுதிவச்சுட்டு செத்துப் போய்


இன்னைக்கு வரைக்கும் பேரு 


சாகாம வாழ்ந்துகிட்டு இருக்காரு.       



" "பணம் இருக்கும் இடத்தினிலே !!       


மனம் இருப்பதில்லே !!                                  


மனம் இருக்கும் மனிதனிடம் !!                   


பணம் இருப்பதில்லே!!                                     


பணம்படைத்தவீட்டினிலே 


வந்ததெல்லாம் சொந்தம் !!      


பணமில்லாத மனிதனுக்கு சொந்தம் 


எல்லாம் துன்பம்!!                                 


அப்படின்னு.) சரிங்க முதலாளி நான் 


போயிட்டு வாரேன்.                                            


ரங்க:- வராதே.அப்பிடியே போயிரு. 


துணி எடுக்க மட்டும் வா.பணம்னு 


கேட்டு  வீட்டு வாசப்படி 


மிதிக்காதலே.போ..போ..                                   


கந்த:- என்ன முதலாளி நீங்க.. நாங்க 


என்ன பிச்சைக்காரங்களா? இந்த 


விரட்டு விரட்டுதீக. இனிமே உங்க 


சங்காத்தமே வேணாம் சாமி. நீங்க 


யாரையும் வச்சு துணியை 


வெளுத்துக்கிடுங்க முதலாளி.நீங்க


செத்தாலும் உங்க வீடு வாசப் படி 


மிதிக்க மாட்டான் இந்த ரோசக்கார 


கந்தசாமி. செத்தா ஒரு பைசாகூட 


கொண்டுபோகமுடியாது 


முதலாளி.அரைஞான் கயித்தைக் 


கூட அத்துட்டுத்தான் கொள்ளியை 


வைப்பாங்க பாத்துக்கிடுங்க. நீங்க 


செஞ்ச புண்ணியம் மட்டும்தான் 


உங்க கூட வரும் முதலாளி.உங்க 


வம்ச வாரிசுகளை காப்பாத்தும். 


நீங்க போயி திருக்குறளை வாங்கிப் 


படியுங்க. அப்பனாச்சும் நெஞ்சுலே 


ஈரம் கசியுதாணு பாப்போம்.....................                            



அன்புள்ள உலகத் தமிழர்களே!! 


பார்த்தீர்களா. இந்த பூமி எப்படிப்பட்ட 


மனிதர்களை எல்லாம் 


தாங்கிக்கொண்டு இருக்கிறது என்று. 


நீங்கள் அனைவரும் அந்தக் 


கருமியைப் போல இல்லாமல் உங்க 


அளவுக்கு ஏழைகளுக்கு உதவி 


செய்து வாழ்ந்திடுங்கள். அதுவே 


தமிழன் பண்பாடு!!தமிழன் வகுத்த 


பாடம்!!தமிழன் உருவாக்கிய 


நாகரீகம்!!தமிழன் கற்றறிந்த 


பயனுள்ள அரசியல் தத்துவம். 


தமிழனாக வாழ்ந்திடுவோம்!! தமிழ் 


பெருமைதனைக் காத்திடுவோம் !! 


நன்றி!! வணக்கம் !!                                            


அன்புடன். மதுரை TR. பாலு.

No comments:

Post a Comment