Sunday, June 16, 2013

அரசின் கடமை எது? திருவள்ளுவர் தந்த விளக்கம்.




உடல்மண்ணுக்கு!! உயிர் தமிழுக்கு!!


தினம் ஒரு திருக்குறள்.                                 


அதிகாரம்   :-  தெரிந்து செயல்வகை.   


குறள் எண் :-  466.                                                      


செய்தக்கஅல்லசெயக்கெடும்செய்தக்க

செய்யாமை யானும் கெடும்... ... ... ... ....  


விளக்கம் :-  செய்யத்   தகாத   


செயல்களை/திட்டங்களை 


செய்வதனால் கெட்டுவிடும்.              


அதேபோல செய்யத் தக்க/செய்ய    


வேண்டிய செயல்களை/


திட்டங்களை செய்யாமல் விட்டு 


விடுவதாலும் கெட்டுவிடும். இது 


திருவள்ளுவர் நமக்கு அளித்த  


குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம்:- (இந்த 


கட்டுரையில் வரும் செய்திகள், 


விளக்கங்கள் இவைகள் 


அனைத்தும் கட்டுரை ஆசிரியரின் 


கற்பனையில் உதித்தவைகளே 


அன்றி தனிப்பட்ட யாரையும் எந்த 


அமைப்பையும் குறிப்பிடுவன 


அல்ல.இது கட்டுரை ஆசிரியரின் தன் 


நிலை விளக்கம்.)



தனி ஒரு மனிதனுக்கும் சரி அந்த 


மாநிலத்தினை ஆளுகின்ற 


அரசுக்கும் சரி இரண்டிற்கும் 


பொருந்துவது போன்று குறள் 


அய்யன் திருவள்ளுவர் ஒருவராலே 


மட்டும் முடியும் என்பது அடியேன் 


கருத்து.ஒரு அரசு என்னென்ன 


செய்யவேண்டும்?நாட்டுக்கு வேலை 


வாய்ப்பு திட்டங்கள் நிறைய 


ஏற்படுத்தி படித்து முடித்த 


இளைஞர்கட்கு பொருள் ஈட்டும் வழி 


வகை செய்து தருவது, 


விலைவாசியை ஏழை,நடுத்தர 


மக்கள் இவர்களை வாட்டிடாத 


வண்ணம் பல்வேறு முயற்சிகள் 


எடுத்து குறைத்திட வேண்டிய 


நடவடிக்கைகள் மேற்கொள்வது, 


நாட்டின் மின் பற்றாக்குறையை 


எப்படி சமாளிப்பது, நிரந்தரமாக 


அந்த மின்வெட்டில் இருந்து தொழில்  


துறை,வாணிபத்துறை,மற்றும் 


பொது மக்கள் இவர்களுக்கு 


பாதுகாப்பு அளித்து நாள் முழுவதும் 


மின்சாரம் வழங்கிட என்னென்ன 


செய்திட வேண்டும் அதற்கு 


யாதொரு முயற்சிகள் 


மேற்கொள்வது இதுபற்றி 


அனுபவசாலிகளிடம் ஆலோசனை 


கேட்டு அவர்கள் சொல்லிடும் 


திட்டங்களை மேற்கொண்டு 


மக்களை வாட்டும் மின்வெட்டு 


இதை போக்கிட கடும் முயற்சிகளை 


மேற்கொண்டு செயலாக்குவது, 


அண்டை மாநிலங்களுடன் நல்ல 


உறவுகளை மேற்கொள்வது, 


அவர்களொடு சமாதானமாகப்பேசி 


நமக்கு காரியங்கள் ஆற்றிக் 


கொள்வது, தண்ணீர் பெற்று 


விவசாயப் பெருங்குடி மக்களுக்கு 


உரிய நேரத்தில் தண்ணீர் தந்து அந்த  


ஏழை விவசாயியின் முகத்தில் 


புன்னகை வரவழைக்க பாடுபடுவது. 


பேரறிஞர் அண்ணா சொன்னார் 


ஏழையின் சிரிப்பில் இறைவனைக் 


காண்கிறேன் என்று. சும்மா 


அண்ணா பெயரைமட்டும் கட்சிக்கு 


வைத்துகொண்டு அவர்வழி 


நடக்காமல் இருப்பதை கைவிட்டு 


மக்களுக்கு இது போன்ற 


செயல்களைச் செய்ய வேண்டியது 


அரசாங்கத்தின் கடமை ஆகும்.  இது 


திருவள்ளுவர் சொன்ன கருத்து.   



சரி. அப்படின்னா செய்யத்தகாத 


செயல்கள் எவை?எவை?                         



1)  இதற்கு முந்திய அரசு மக்களுக்கு 


செய்திட எண்ணிய பல்வேறு நலத்   


திட்டங்களை செய்யவிடாமல் 


கிடப்பில் போடுவது.                                          


2)  அரசாங்கமே மதுவிற்பனையை 


மேற்கொண்டு மக்களை பாவக் 


குழியில் தள்ளி அவர்களது 


மரணத்தின் மூலம் அரசுக்கு 


வருவாய் ஈட்டுவது என்பது 


இறைவனே மன்னிக்க முடியாத 


பாவச் செயல்களின் சிகரம் ஆகும். 


அதனை முற்றிலும் ஒழித்து மது 


இல்லாத மாநிலமாக ஆக்கிட என்ன 


செய்வது என்று யோசித்து செயல் 


படுத்துவது.                                                               


3)  தனியார்கள் செய்திடும் 


தொழிலில் அரசு தலையிட்டு அந்த 


தொழிலைக் கெடுத்து நாசக்காடு 


ஆக்குவது. (உதாரணம். மலிவு 


விலை உணவகங்கள்.இது 


நெடுகிலும் செயல்படுத்தக்கூடிய 


திட்டமா என்பதை ஆராயாமல் 


துவக்கியது. மக்களின் ஒட்டு 


வங்கியை கைப்பற்றிட வேண்டி 


அரசாங்கம் செய்திடும் சதி 


வேலை இது. )                                                          


4)  தனது மனம் போன போக்கில் 


விலை 


உயர்த்துவது.பால்,பேருந்து,மின்சார 


கட்டணங்களை  தாறுமாறாக 


உயர்த்தி ஏழைபாளைகளின் 


வயிற்றில் அடிப்பது. அவர்கள் 


வாக்கு அளித்ததினால்தான் இந்த 


அரசு பதவிக்கு வந்தது என்பதை 


மறந்து செயல்படுவது.                               


5)  எதிர் கட்சிகளை எதிரிக் 


கட்சிகளாக பாவிக்காமல் 


அவர்களொடு நேசமாக இருந்து 


அவர்களிடமும் ஆலோசனை 


பெற்று அரசினை நடத்துவது.                 


6)  தன்னிடம் மிருக பலம் கொண்ட 


பெரும்பான்மை உள்ளது என்ற ஒரே 


காரணத்திற்காக மக்கள் மன்றத்தில் 


எதிர்கட்சிகளுக்கு பேசுவதற்கு கூட 


வாய்ப்புகளை மறுப்பது, அவர்களது 


குரல்வளையை நெறிப்பது,அவர்கள் 


மேல் பொய் வழக்கு போடுவது, 


உள்ளே தள்ளுவது, தன்னோடு 


கூட்டணி வைத்திருந்த கட்சியை 


தனக்கு ஜால்ரா போடவில்லை 


என்ற ஒரே காரணத்திற்காக அந்த 


கட்சி மக்கள் மன்ற 


உறுப்பினர்களுக்கு வேண்டியதை 


கொடுத்து தனது கட்சிக்கு சலாம் 


போட வைப்பது .........................இது 


போன்ற செயல்களை செய்யாமல் 


இருந்தாலே போதுமானது அந்த 


அரசு மக்களிடம் நல்ல பெயர்பெறும். 


இதுவும் திருவள்ளுவர் நமக்கு 


அளித்த திருக்குறளும் அதன் 


விளக்கமும் ஆகும். மீண்டும் நாளை 


சந்திப்போமா!!                                                


நன்றி!!  வணக்கம்!!                                  


அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment