Tuesday, June 4, 2013

ஆட்சியை இழந்தாலும் கலங்காத இரும்பு மனம் கொண்டவர் கலைஞர் மட்டுமே !!




உடல் மண்ணுக்கு !!                       உயிர் தமிழுக்கு !!



தினம் ஒரு திருக்குறள்.                                      


அதிகாரம் :-  ஊக்கம் உடைமை.                      


குறள் எண்:-  593.                                            



ஆக்கம்இழந்தேமென்றுஅல்லாவார்  

                                                               ஊக்கம் 

ஒருவந்தம் கைத்துடை யார்.                                              



விளக்கம் :- ஊக்கம்என்ற பொருளை 


உறுதியாகத் தம் கைப்பொருளாக 


உடையவர்,ஆக்கம்(அனைத்தையும் 


இழந்து விட்ட காலத்திலும் )  


இழந்துவிட்டோம் என்று கலங்க     


மாட்டார். இது திருவள்ளுவர் நமக்கு 


அருளிய குறளும் அதன் விளக்கமும்  


ஆகும்.                                                                       



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-  என் 


உயிரினும் மேலான அன்பு உடன் 


பிறப்புகளே ! என்று நம்மை எல்லாம் 


பாசத்தோடும் உண்மை அன்பு 


நேசத்தோடும் அழைத்திடும் ஒரே 


ஒரு தமிழ் இனத் தலைவர் 


திருக்குவளை முத்துவேலர் கருணா-  


நிதி அவர்கள்தான் தமது வாழ்வில் 


எத்தனை எத்தனையோ அதிகாரம் 


மிக்க பதவிகளில் மாநிலத்திலும் சரி  


இப்போது மத்தியில் கூட்டணி 


அரசில் பங்கேற்று பணியாற்றி பின் 


அதனின்று விலகி இன்று அந்த மிகப் 


பெரும் அதிகாரம் மிக்க அந்த மத்திய 


அமைச்சரவையில்இருந்துஆதரவை


விலக்கிக்கொண்டு வெளியே வரும் 


தைரியம் யாருக்கு வரும்? அப்படி 


எல்லாவற்றையும் இழந்து விட்டு 


இன்று ஒரு மாபெரும் மக்கள் 


இயக்கத்திற்கு தலைவர் என்ற அந்த 


ஒரு பொறுப்பினை மட்டும் தனது 


கைவசம் வைத்திருக்கிறார். ஆக 


இப்படிப்பட்ட சூழலிலும் அவர் எப்படி 


நெஞ்சு உரத்தோடும் நேர்மை 


திறத்தோடும் வாழ்ந்துவருகிறார் ,


வாழ முடிகிறது என்று கேட்டால், 


அது தான் அவர் தந்தை பெரியாரிடம் 


படித்தது,பேரறிஞர் அண்ணாவிடம் 


கற்றுக் கொண்டது.இவை 


அனைத்துக்கும் மேலாக ஊக்கம் 


எனும்  விலைமதிக்கமுடியாத மன 


தைரியத்தை அவர் தனது இந்த 


அகவை 9௦ ஆண்டுகளிலும் கடைப் 


பிடித்து வாழ்கிறார்,வளர்கிறார் 


நாளை அரியாசனமும் ஏறி அமரப் 


போகிறார். என்னே அவர்தம் நெஞ்சு 


உறுதி!என்னேஅவரதுஆளுகத் திறம் 


இந்த நன்நாளில் அவரின் 


திறமைகளை நாம் வாழ்த்துவதுடன் 


நின்றுவிடக்கூடாது.அவரது கரத்தை  


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில்  


தமிழர்களாகிய நாம் அனைவரும் 


கலைஞரை தேடிச் சென்று வணங்கி 


அவர்தரும் அறிவுரைகளை ஏற்று 


நாமும் நமது வாழ்வினை வளப்     


படுத்திட வேண்டும். அண்ணா புகழ் 


ஓங்குக!! பெரியாரைப் பணிந்து  


வாழ்ந்திடுவோம் !!


கலைஞர் பெருமை ஒன்றினையே 


பேசிக்கொண்டு இருப்போம்.மீண்டும் 


நாளை சந்திப்போமா நேயர்களே!  


நன்றி !!வணக்கம் !!                                              


அன்புடன்,மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment