Friday, June 7, 2013

புலால் உணவு வகைகளை மறுப்பது நம் முழு முதல் கடமை அல்லவா !!




உடல் மண்ணுக்கு !!                           உயிர் தமிழுக்கு !!   



அனைவருக்கும் எனது அன்பு 

நிறைந்த  

வேண்டுகோள் :- 

தயவு செய்து நீங்கள் அனைவரும் 


தனித் தமிழில் மட்டுமே பேசிப் 


பழகுங்கள்.ஆங்கில மொழி கலப்பு 


ஏதும் இடையே வந்துவிடாமல் 


பார்த்துக் கொள்ளுங்கள். நமது 


தமிழ் சகோதர, சகோதரிகள் 


நடுவிலே உரை நிகழ்த்தும் போது !!  


தமிழனின் பண்பாடு நிறைந்த 


வாழ்வினை வாழ்ந்திட பழக 


வேண்டுகிறேன் !! நன்றி !!


தினம் ஒரு திருக்குறள்.                                     

அதிகாரம் :-  புலால் மறுத்தல்.                       

குறள் எண் :-  251.


தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் 

எங்ஙனம் ஆளும் அருள்... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... 


விளக்கம் :-  தனது உடம்பினைப் 


பெருக்கச் செய்வதற்காக தான் 


மற்றொரு உயிரின்உடம்பினைத் 


தின்கின்றவன் எவ்வாறு 


அருளுடையவனாகஇருக்கமுடியும் ? 


இது திருவள்ளுவர் நமக்கு அருளிய 


திருக்குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.                                                                          



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-                      


எல்லோருக்கும் வணக்கம். 


பொதுவாக நான் மிக நீண்ட நெடு 


நாட்களாக எனது அன்புத் தமிழ் 


நெஞ்சங்களுக்கு இந்த புலால் 


மறுத்தல் பற்றிய ஒரு நீண்டதொரு 


விளக்கத்தைத் தர வேண்டும் என 


எண்ணியிருந்தேன். எல்லாம் வல்ல 


இறைவன் திருவருளால் அது இன்று 


நிறைவேறுகிறது. அதற்காக அந்த 


இறையருளுக்கு நன்றி. அன்பர்களே! 


நீங்கள் இந்த புலால் மறுத்தல் எனும் 


ஒரு விஷயத்தினைப்பற்றி யோசிக்க  


முற்படுவதற்கு முன்பாக எனது இந்த  


செய்தியைமுதலில்நீங்கள்நெஞ்சின்


உள்ளே பதிய வைத்திட வேணுமாய் 


கேட்டுக்கொள்கிறேன் அன்பர்களே !! 


உலக உத்தமர்! ஜீவகாருண்ய சீலர்!!


அஹிம்சா மூர்த்தி !! மகாத்மா காந்தி 


இந்த புலால் மறுத்தல்பற்றி சொன்ன 


-தாக நான் எப்போதோ படித்த ஒரு 


கருத்து என் சிந்தனையின்பால் 


இப்போது நினைவுக்கு வருகிறது 


அன்பர்களே !! எந்த ஒரு பொருளை 


உனக்குஉருவாக்கும்சக்தி உள்ளதோ  


அந்தப் பொருளை மட்டுமே உனக்கு 


உண்பதற்கு உரிமை உள்ளது. இது 


மகாத்மாசொன்னகருத்து. அதுபோல 


மனிதன் வாழ்வதற்கு பழகிக் 


கொண்டாலே போதுமானது. 


அவனுக்கு வர இருக்கும் நோய் 


வாய்ப்புகளில் 7௦ விழுக்காடுகளுக்கு  


மேல்அவன் தப்பித்துக் கொள்கிறான்  


என்பது மருத்துவ ஆய்வுகளில் நம் 


சிந்தனைக்கு சொல்லப்பட்ட முடிவு 


உயர் இரத்த அழுத்தம், இரத்தக் 


குழாய்களில் கொழுப்புகளால் 


உருவாகிடும் அடைப்புகள்,அதனால் 


ஏற்படும் மாரடைப்பு, அதிக எடை 


இது போன்ற இத்யாதி,இத்யாதி 


வியாதிகளில் இருந்து அவனுக்கு 


விடுதலை கிடைத்து விடும். நான் 


இப்போது எல்லாம் ஆட்டுக் கறி 


சாப்பிடுவது இல்லை.அது கொழுப்பு 


மிகக் கொண்டது.அதனால் நான் 


கோழிக் கறி மட்டுமே எடுத்துக் 


கொள்கிறேன். இது சிலரது தற்காப்பு 


வாசகம். கெட்ட பொருளை ஒரு 


வண்டி உண்டால் என்ன ?சிறிது 


அளவு உண்டால் என்ன? நரகல் 


நரகல் தானே. நான்  இது போன்ற 


மிகக்கடுமையான சொற்களை 


பயன்படுத்துவதற்காக நீங்கள் 


என்னை அருள்கூர்ந்து மன்னிக்க 


வேண்டும் அன்பர்களே!! 


எப்படியாவது நீங்கள் இந்தக் 


கொடிய பிற உயிர்களைக் 


கொல்லுகின்ற பழக்கத்தில் இருந்து 


மாற வேண்டும் என்ற மன 


ஆசையின் வெளிப்பாடுதான் 


அதுவே அன்றி வேறு ஒன்றும் 


இல்லை அன்பர்களே. தவிரவும் 


மனிதனின் வாய் அமைப்பினை 


சற்று உற்று நோக்கிப் பார்த்தால் 


உங்களுக்கே தெரியும் அது மரக்கறி 


உணவு வகைகளான காய்,கனிகளை 


உண்பதற்காகவே படைக்கப் பட்டது 


என்பது உங்களாலேயே உணர 


முடியும். புலால் உணவு உண்ணும் 


இனங்களுக்கு வாய் முதலில் அளவு 


மிகப் பெரியதாக இருக்கும். அடுத்து 


கோரைப்பற்கள் மிகவும் பெரியதாய் 


அமைந்துஇருக்கும்.இவை இரண்டும்   


நமக்கு இல்லையே !! மாமிச உணவு 


உண்பவர்களில் ஒரு பிரிவினர் ஒரு 


கருத்தை சொல்லுவார்கள். 


படைத்தான் படைப்பு எல்லாம் 


மனுவுக்காக. மனுவைப் படைத்தான் 


தன்னை வணங்க என்று. இது புலால் 


உண்பதற்காக மனிதனால் 


உருவாக்கப்பட்ட ஒரு சொற்றொடர். 


தயவு செய்து நான் உங்களில் புலால் 


உணவு உண்ணும் பழக்கம் உடைய 


அனைவரையும் வேண்டி விரும்பி 


கேட்டுகொள்வதெல்லாம் இதுதான். 


இதுவரை செய்திட்ட பாவங்கள் 


போதுமானது. இனிமேலும் 


பாவங்கள் தொடர்ந்து செய்து 


உங்கள் மதிப்பு மிக்க பிறவியை 


மென்மேலும் அழுக்கு உள்ளதாக 


ஆக்கிக் கொள்ள வேண்டாம். 


மாறுவதற்குப் பழகுங்கள். சுத்த 


சைவ உணவுப் பிரியர்களாக நீங்கள் 


மாறினீர்கள் என்று சொன்னால் 


முதலில் மகிழ்ச்சி அடையப் போவது 


உங்கள் உடலில் உள்ள உள் 


உறுப்புகள் தான் அன்பர்களே.இதை 


நீங்கள் நினைவில் வைத்து உங்கள் 


உடலைப்பாதுகாத்துகொண்டால் 


தான் உங்கள் வாழ்கையை நீங்கள் 


செம்மையாக நோய்நொடி 


இல்லாமல் வாழ்ந்திட முடியும். 


எனது மறைந்த தந்தை எனது 


வாழ்வில் காட்டிய ஒளி விளக்கு 


என்னிடம் அடிக்கடி ஒரு கருத்தை 


சொல்லிக்கொண்டே இருப்பார்கள். 


குதிரையை தண்ணீர் தொட்டி வரை 


மட்டுமே நம்மால் இட்டுச் சென்றிட 


முடியுமே ஒழிய அதன் வாயில் நீரை 


புகட்டிட முடியாது என்று.இதனை 


அவர் ஆங்கிலத்தில் சொல்வார்கள்.



WE CAN TAKE THE HORSE TO THE  



TANK BEND !!  BUT WE CAN'T MAKE IT 



DRINK!!                                                                 


அதுபோல கருத்துகளை நான் 


உங்களது சிந்தனைக்கு எடுத்து 


உரைத்து விட்டேன். அதனை செயல் 


படுத்துவதும் உதாசீனப்படுத்துவதும் 


உங்கள்முடிவு.கவிஞர்கண்ணதாசன்


ஒரு திரைப்பாடலில் எழுதி 


இருப்பார்:-                                                                


சொல்லுறதை சொல்லிப்புட்டேன்!!


செய்யுறதை செஞ்சுக்குங்க !! 


நல்லதுன்னா கேட்டுங்கங்க!! 


கெட்டதுன்னா விட்டுடுங்க!!                 


என்ற கருத்துமிக்க பாடலையும் 


உங்கள் சிந்தனைக்கு விருந்தாக 


படித்துவிட்டு,முடிவு உங்கள் 


கையில் என்று சொல்லி, இதுவரை 


இந்த கட்டுரையை குறள்விளக்கம் 


அதனை அடுத்த நமது நாட்டு நடப்பு 


விளக்கத்தினை இத்தனை 


பொறுமை உணர்வினோடு படித்த 


உங்கள் அனைவருக்கும் எனது 


நெஞ்சார்ந்தநன்றிதனைகாணிக்கை 


யாக்கி விட்டு  வணக்கம் கூறி விடை 


பெறுவது உங்கள் அன்பன் மதுரை 


T.R. பாலு. 



No comments:

Post a Comment