Monday, June 3, 2013

அறிஞர்களோடு கூடி இருப்பதால் ஏற்படும் பயன் என்ன !!




உடல் மண்ணுக்கு !!                           உயிர் தமிழுக்கு !!





தமிழனாக வாழ்ந்திடுக !!                                                                      




தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!                                          


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!                                   


தமிழர்களுடன் உரையாடும்போது!!   



தினம் ஒரு திருக்குறள்.                                     


அதிகாரம்  :-  பெரியாரைத்துணைக்     

                                                            கோடல்.  

குறள் எண்:-  445.                                            


சூழ்வார்  கண்ணாக ஒழுகலான் மன்னவன்               

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்... ... ... ... ... ... ... ...                                           


விளக்கம் :-    நாட்டினை எவ்வாறு 


வழி நடத்தி செல்வது என்பதை  


ஆராய்ந்துகூறும் நல்அறிஞரையே 


இவ்வுலகம் கண்ணாகக் கொண்டு 


நடத்தலால் நாட்டினை ஆளும் 


மன்னவனும் அத்தகையாரை தேடிச்   


சென்று நட்புக்கொள்ள வேண்டும்.  


இது வான் புகழ் வள்ளுவன் நமக்கு 


அளித்த குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.  


நமது நாட்டு நடப்பு விளக்கம்:- ( இந்த  


கட்டுரை குறிப்பிடும் விஷயங்கள் 


அனைத்தும் தனிப்பட்ட எவரையும் 


குறிப்பிடுவன அல்ல)


இன்று தமிழர்களுக்கு எல்லாம் ஒரு 


மறக்க முடியாத திருநாள். தமிழ் 


அன்னை மிகவும் மனம் மகிழ்ந்த 


நாள் இன்று.  தமிழ் மொழி தனது 


சிறப்பினை இந்த அகில உலகம் 


முழுவதும் அறிந்திட,தெரிந்திட, 


புரிந்திட, ஒரு நல்ல அறிஞரை, 


கலைஞரை, இந்தப்  பூவுலகிற்கு 


வழங்கிய நன்னாள். ஆம் அன்பு 


இரசிகர்களே !! இன்று ஜூன் 3ம் தேதி 


தமிழினத்தின் தானைத் தலைவன் 


முத்தமிழ் வித்தகர், இயல் தமிழ், 


இசைத்தமிழ்,நாடகத் தமிழ் ஆகிய 


இம்மூன்று தமிழையும் அறிந்து 


அதன்சிறப்பை நம் அனைவருக்கும் 


அறிந்திட உதவிய தமிழக முன்னாள் 


முதல்வர்,இனிவருங்கால முதல்வர் 


மக்கள்மனதில்என்றுமேமுதல்வர் 


என்னும் இதய சிம்மாசனத்தில் 


கொலுவீற்றிருக்கும் கலைஞர் 


திருக்குவளை முத்துவேலர் கருணா 


-நிதி அவர்கள் பிறந்த தேதி.நாம் 


எற்கனவே மேலே சொன்ன 


குறளைப் போல இந்த அறிஞர் 


ஒருவர் போதும். நாட்டை ஆளும் 


மன்னர் இவரிடம்  ஆலோசனை 


கேட்டு நடந்தாலே போதுமானது. 


இந்த நாடு எப்படி வளம் பெறும். உம்.. 


அந்தக் கொடுப்பினை எல்லாம் 


நமக்கு ஏது ? அப்படிப்பட்ட பரந்த 


உள்ளம் கொண்ட மன்னரிடமா 


இன்று நம் நாடு ஆட்சிமன்றத் 


தலைமையைத் தந்திருக்கிறது? 



((யோவ் !போய் வேற ஏதாச்சும் 


வேலைஇருந்தா பாருங்க போங்க. 


அவுங்ககிட்ட இருக்கிற அசுர 


பெரும்பான்மை பலத்திலே, 


இவர்கிட்டேத்தான் வந்து 


ஆலோசனை கேட்டு நாட்டை ஆளப் 


போறாங்க? யோவ் ! உமக்கு என்ன 


மறை களன்றுச்சா? இல்லை கிறுக்கு 


கிறுக்கு பிடிச்சுப் போச்சா? பெரிய 


திருக்குறள் தெளிவுரை எழுத 


வந்துட்டாரு மாப்ளை !! இரண்டு 


பேருக்கும் நடுவுலே ஈரத்துணியை 


போட்டா தீப்பிடிக்குற சூழ்நிலைலே 


உங்க யோசனையைத்தான் 


கேக்கப்போறாங்க !! போங்க,போங்க 


பேசாமபோய்ப் படுத்துத்தூங்குங்க!!)       



என்ன பார்க்குறீங்க என் அன்புத் 


தமிழ் நெஞ்சங்களே !! மேலே 


சொன்ன அடைப்புக்குள் உள்ள 


வசனங்கள் அனைத்தும் இந்த 


திருக்குறள் விளக்கத்தினை நான் 


இந்த தளத்தில் பதிவு செய்து 


கொண்டு இருந்தபோது எனது 


உடலில் சரிபாதி உரிமை உள்ளவள் 


என் இதயத் தாமரைதனில் வீற்று 


இருக்கும் மகா லெட்சுமி, என் உயிர் 


மூச்சு, என் வாழ்க்கைப்பாதையின் 


போக்கினை மாற்றி நல்ல வழிக்கு 


கொண்டு சென்று மாற்றிட எனக்கு 


பெரிதும் துணை நிற்பவள், எனது 


அன்பு மனைவி எனக்கு பின்னால் 


நின்றுநான் எழுதிய குறளையும் 


அந்த விளக்கத்தையும் படித்துப் 


பார்த்து விட்டு எனது சக தர்மினி 


வெளியிட்ட  அர்த்தபூர்வமான 


கருத்து   விளக்கங்களை 


நான் அடைப்புக்குள் குறித்து 


இருக்கிறேன். அதனாலே அந்தக் 


கால நாட்டு நடப்பு பழமொழி ஒன்னு 


சொல்லிட்டு உங்கட்டே இருந்து 


விடைபெறுகிறேன் அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !!                                                  


நரி இடது பக்கம் போனா நல்லதா ? 


இல்லை வலது பக்கம் போனா 


நல்லதா? என்று கேட்டால், நான் 


சொல்லும் கருத்து .நரி நம் மேலே 


விழுந்து நம்மை பிறாண்டிட்டுப் 


போகாமப் போனாலே நல்லது !! 


என்ற பழமொழிதான் நினைவுக்கு 


வருகிறது அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !                                               


மீண்டும் நாளை சந்திப்போமா  


நேயர்களே!!வணக்கம் நன்றி !!             


அன்புடன் மதுரை T.R. பாலு.


No comments:

Post a Comment