Wednesday, June 5, 2013

முற்றும் துறந்த முனிவரது வாழ்வினை விட வல்லமையான வாழ்க்கை யாருடையது ?




உடல் மண்ணுக்கு !!                           உயிர் தமிழுக்கு !!



தமிழனாக வாழ்ந்திடுக !!


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி !!


தமிழர்களுடன்உரையாடும்போது !!  


தினம் ஒரு திருக்குறள்.                                      


அதிகாரம்  :-  இல்வாழ்க்கை.                   

குறள் எண்:-  48.                                                       


ஆற்றின்  ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 


நோற்பாரின் நோன்மை உடைத்து.. .. .. .. .. .. .. .. .. ..   


விளக்கம் :-    தம்முடன் இணைந்து 


இருக்கின்ற மற்றவர்களையும் அற 


நெறியில் வாழச்செய்து தானும் அது 


போல அறம் தவறாது வாழ்ந்திடும்  


இல்வாழ்க்கை, முற்றும் துறந்து 


தவம் செய்து வாழும் முனிவர்களது  


வாழ்க்கையைவிட மிக்க வல்லமை 


உடைய வாழ்க்கை ஆகும். இது 


திருவள்ளுவர் நமக்கு அருளிய 


திருக்குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.                                                                         



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-                        


சங்கிலி :- ஏ! புள்ளே செல்லத்தாயி!!

எங்கே புள்ளே போய்ட்டே!                    


செல்லத்தாயி :-  மச்சான் !! எப்ப 

வந்த! இன்னைக்கும்  வேலை 

ரொம்ப கடுசா மச்சான் !!                            


சங்:-  ஆமா! புள்ளே!! என்ன செய்றது. 

நம்ம தலை எழுத்து. பொண்ணு 

விளையிர பூமி உங்க அப்பன் நமக்கு 

சீதனமா கொடுத்தாரு. ரெண்டு 

வருஷத்துக்கு முந்தி வரைக்கும் 

நல்லாத்தான் விவசாயம் பண்ணிக் 

கிட்டு இருந்தோம்.என்னைக்கு நம்ம 

ஊர் பஞ்சாயத்துக்கு தலைவரா இந்த 

ஜெயந்தன் வந்து உக்காந்தானோ 

போச்சு! எல்லாம் போச்சு!!குறுவை 

காலி. சம்பா கோவிந்தா. இந்த 

வருஷமும் அப்படித்தான் ஆயிரும் 

போல இருக்கும்மா. பூமிவிளையல 

அப்படிங்க்ரதுக்காண்டி நம்ம வயிறு 

பசிக்காம இருக்குமா புள்ளே! அதான் 

எங்க என்ன வேலை கிடைச்சாலும் 

போய்பாத்துட்டுகூலியை வாங்கிட்டு 

வாரேம்புள்ள.இந்தாபுள்ளேஇன்னை-

க்கு கூலி 35௦ ரூவா.  சரியா இருக்கா 

பாரு புள்ளே!                                                     


செல்லத்:-  ஏன்! மச்சான் நீ கொண்டு 

வர பணத்தை என்னைக்கு நான் 

எண்ணி பாத்துருக்கேன்.சொல்லு 

மாமு. சரி! நீ போய் கை,காலை     

நல்லா தேச்சு கழுவிட்டு வா 

ராசா.உனக்கு பிடிச்ச மீன் கொழம்பும் 

கோழிவறுவலும் பண்ணிருக்கேன். 

வாமச்சான்வந்துசாப்டு.நீசாப்டதுக்கு 

அப்றம்தான் நான் சாப்டனும்.                 


சங்:- இங்க பாரடா! என்னைக்குதான் 

நீ மாறப் போறியோ.பசிச்சா நீ உம் 

பாட்லே சாப்பிட  வேண்டியதுதானே 

புள்ளே.


செல்லத்:- அட !என்ன மச்சான் 

அப்டிஒருவார்த்தைசொல்லி 

புட்ட.நமக்கு கண்ணாலம் ஆயி 3௦ 

வருஷம் போன சித்திரையோட 

முடிஞ்சு போச்சு. இம்மாங்கட்டியும் 

சாப்புடாத நான் இனிமேலேயா மாமு  

உன்னையைவுட்டுட்டு சாப்புடப் 

போறேன் சொல்லு மாமு.                         


சங்:- உன்னோட ஒரே கூத்துதான் 

புள்ளே.  சரி! சரி! சாதத்தை போட்டு 

கொழம்பை ஊத்து கண்ணு. 

இன்னைக்கு ஒரு பிடி பிடிக்றேன்.      


செல்லத்:- இந்தா ! ஒரு நிமிசம்.மாமு 

உடனே சாதம்போட்டு கொழம்பு 

ஊத்தறேன். என்மச்சான் திருப்தியா 

சாப்டாலே நான் சாப்ட்ட மாதிரி 

இருக்கும் மாமு.


சங்:-  என்னா புள்ளே!! அந்தக்கால 

ஜிவாஜி சரசாதேவி பாட்டுலே வர்ற 

மாதிரி சொல்லுதே?


செல்லத்:- அது ஏன்னா பாட்டு? 

மச்சான் கொஞ்சம் எனக்கும் தான் 

சொல்லேன்.


சங்:-  பாலோட பழம் அல்லாம் 

உனக்காக வேணும். பாவை உம் 

முகம் பாத்து பசி ஆற வேணும்.  

எப்படி நான் சொல்றது !!சரியான்னு 

சொல்லு புள்ளே!


செல்லத்:-கரீட்டா சொல்லிட்டமாமு. 

எனக்கு மனசு ரொம்ப ரொம்ப 

சந்தோசமா கீது மாமு.சாப்டு!சாப்டு!



திருவள்ளுவர்:- அடடா! என்ன மனம் 

இணைந்த குடும்பம். இவர்கள் 

வாழும் இந்த வாழ்கையை விடவா 

வல்லமைமிகுந்ததுமுனிவர் வாழும் 

வாழ்க்கை. இல்லை.இல்லவே 

இல்லை.இதைத்தான் நான் மேலே 

சொன்னகுறளில்எழுதி உள்ளேன் 

உலகின் தமிழ் இன மக்களே. படித்து -

-ப்பார்த்து நீங்களும் அன்போடும் 

அறத்தோடும் இல்வாழ்க்கை 

வாழ்ந்திடுங்கள். இதைவிட முனிவர் 

வாழும் வாழ்க்கை வல்லமை 

உடையதுஅல்ல.வாழ்க ! வளமுடன் !

No comments:

Post a Comment