Sunday, June 9, 2013

அரசாங்கத்தின் வெற்றியின் வலிமையைத் தேய்க்கும்/அழிக்கும் அரம் எது ?




உடல்மண்ணுக்கு!!உயிர் தமிழுக்கு !!


தமிழனாக வாழ்ந்திடுக !!                                 


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!   


தமிழ்  பேசும்  சகோதரர்கள் மற்றும் 


சகோதரிகளிடம்உரையாடும் போது!!  


"தினம் ஒரு திருக்குறள்".                                 


அதிகாரம்  :- வெருவந்த செய்யாமை. 


குறள் எண்:-  567.                                             


கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்    


அடுமுரண் தேய்க்கும் அரம்... ... ... ... ... ...                         


விளக்கம்:-கடுமை நிறைந்த 


சொல்லும், முறையே இல்லாது 


தண்டனை தரும் சட்டமும், அந்த 


நாட்டினை ஆண்டுகொண்டிருக்கும் 


அரசனுடைய வெற்றிக்கு காரணம் 


ஆகியவலிமையைத்தேய்க்கும் அரம்  


ஆகும்.இது வள்ளுவர் நமக்கு தந்த 


குறளும் அதன் விளக்கமும் ஆகும்.    



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-              


(இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள 


கதாபாத்திரங்கள் அனைத்தும் 


முழுக்க முழுக்க கற்பனையே 


அன்றி வேறு எந்த தனிமனிதரையும் 


பற்றிக் குறிப்பிடுபவை  அல்ல. இது 


கட்டுரை ஆசிரியர் தரும் தன்னிலை 


விளக்கம்)


 ரங்கமுத்து :-  யோவ்! சிங்கமுத்து!! 


என்னாயா? நம்ம சிங்கபுரம் ஜமீன் 


செல்வன் ஜெயந்தன் அய்யங்கார் 


நம்ம ஊர் பஞ்சாயத்து தலைவரா 


வந்ததைப் பத்தி பொதுவா ஜனங்க 


என்ன பேசிக்குறாங்க?உமக்குத் 


தான்மக்களோட நெருங்கிப் பழகுற 


வாய்ப்பு அதிகமா இருக்குல்லே! 


அதான் கேட்டேன்.                                         


சிங்கமுத்து:- யோவ் ! ரங்கமுத்து !!   


இந்தக் குசும்புதானே வேணான்றது.  


குரங்கு குட்டியைவிட்டு ஆழம்               


பாக்கும்னு படிச்சுருக்கேன்.இப்ப 


அதை நேர்ல பாக்குறேன்.                         


ரங்க:-ஆமா! யாரை குரங்குன்றே 


யாரை குட்டின்றே! சொல்லுப்பா 


விவரமா!!                                                         


சிங்க:-சரிப்பா.அத்தவிடு. மேட்டர்க்கு 


வாரேன். நம்ம ஆளு செல்வன் 


ஜெயந்தன் ஐய்யங்கார் என்னைக்கு 


இங்கே பதவிலே வந்து குந்துனாரோ 


நம்ம ஊருக்கு நேரம் சரியில்லன்னு 


தான் ஜனங்க நினைக்கிறாங்க.             


ரங்க:- அட உந்தலையிலே இடி விழ!


என்னய்யா இப்படி சொல்லிட்டே. 


படக்குன்னு. நிசம்மாவா.                                                       


சிங்க:- அட ஆமாய்யா இதுலே போய் 


பொய்சொல்லிஎன்ன கோட்டையா 


கட்டப் போறேன். சத்தியமாய்யா.       


ரங்க:- ஏன் அப்படி ஜனங்க நினைக்க 


வேணும். அதுக்கு இன்னா காரணம். 


சிங்க:- யோவ். நீ அய்யாவோட ஆளு. 


உங்க ஜெயந்தன் ஐயங்காரைப்பத்தி 


ஏன்அப்டிஜனங்கநினைக்ராங்கன்னு 


சத்தியமா உனக்கு தெரியாது?             


ரங்க:தெரியும்.சும்மாதான்கேட்டேன்.      


சிங்க:-  யோவ் ரங்கமுத்து. நம்ம 


அய்யா இங்கே பதவிக்கு வரதுக்கு 


முந்தி என்ன ஒழுங்கா பஞ்சாயத்து 


பணியை செஞ்சுட்டு இருந்தாரே 


நம்ம அன்புநிதி அய்யா !!ஊரே 


எவ்வளவு கட்டுப்பாடா இருந்துச்சு !!


ஒருகொலைஉண்டாஒரு கொள்ளை  


உண்டா? உம்..சரி அத்த விடு. மழை 


எப்படி கரீட்டா பெஞ்சு நம்ம பொன் 


விளையுற தஞ்சை பூமி குறுவை, 


சம்பா,தாளடின்னு மூணு போகமும் 


எப்படி சரியா விளைஞ்சுது கடந்த 


ஐந்தாண்டு காலத்துக்கு. நம்மவர் 


என்னைக்கு வந்து உக்காந்தாரோ 


போச்சு.எல்லாம் போச்சு. ரெண்டு 


வருஷமா மழைபோச்சு.விவசாயம் 


போச்சு. மகசூல் போச்சு. மக்கள் 


கிட்டே வருமானம் போச்சு. எல்லாம் 


கடன் வாங்கி கிட்டு பொழைப்பு 


நடத்துராய்ங்க ஒய்! வெளியே 


சொன்னா வெக்கக் கேடு.                               


ரங்க:- அப்ப நீ சொல்றதைப் பாத்தா 


நம்ம அய்யாவுக்கு அவர் தேர்தலில் 


பெற்ற வெற்றியோட வலிமை 


தேஞ்சு போச்சுன்னு சொல்றியா.                


சிங்க:- அடங்கொப்பன் தன்னானே!! 


இந்த எழவை நான்வேற தனியா 


மேடை போட்டு சொல்லனுமா ?


என்ன. ஆனாநம்மஅன்புநிதி அய்யா 


அவங்களை இவரு என்ன பேச்சு 


எல்லாம் பேசினாரு.கேடு விளையற 


மாதிரி நாக்கு கூசுற மாதிரி அவர் 


குடும்பத்தைப் பத்தி, இதெல்லாம் 


பத்தாதுன்னு அவர் கட்சிக் காரங்க 


மேலே எல்லாம் இல்லாததையும் 


பொல்லாததையும் சொல்லி பொய் 


கேஸ் போட்டு உள்ளே தள்ளினாரே. 


அதுக்குத்தான் ஒய்! இப்ப நல்லா 


அனுபவிக்கிறார் உங்க அய்யா 


செல்வன் ஜெயந்தன் அய்யங்கார் 


ஸ்வாமிகள்.                                                  


ரங்க:- உம்.. என்ன..உமக்கு லந்தா 


இருக்காஎங்க அய்யாவோடவலிமை 


தேஞ்சுபோச்சுன்னு நானே கவலை 


பட்டுகிட்டு கிடக்கேன்.                                   


சிங்க:- உம்.. இப்ப கவலைப் பட்டு 


என்ன செய்றது. அதான் வட்டியும் 


முதலுமா நம்ம அன்புநிதி அய்யாக்கு 


எந்தெந்த வகையிலே கெடுதல் 


பண்ண னுமோ அம்புட்டும் பண்ணி 


ஆச்சு. நம்ம அய்யா மாதிரி எதிர் 


காலத்திலே பதவிக்கு வர்றவங்க 


இப்படி நடந்தா இப்படி நடக்கும்னு 


நம்ம திருவள்ளுவர் சொன்ன திருக் 


குறளை மேலே சொல்லிருக்காரு 


இந்த கட்டுரை ஆசிரியர் யாரோ 


மதுரை T.R.பாலு சாராம். நீயும் படி. 


முடிஞ்சா உங்க ஐயாவையும் 


படிக்கசொல்லு. அப்பயாச்சும் உங்க 


அய்யா திருந்துராரான்னு பாப்போம். 


உம். என்னத்தை படிக்கப்போறாரு!!.  


அவரு எப்பத் திருந்தப் போறாரு !!


என்ன எனக்கு நேரம் ஆச்சு.நான் 


வரட்டா.                                                                


ரங்க:- சரி! சிங்கமுத்து!! போயிட்டு 


வாங்க.நாளைக்கு சந்திப்போம். 


நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment