Wednesday, March 27, 2013

மிகப் பெரும் செல்வம் எது ?

தினம் ஒரு திருக்குறள் !!


அனைவருக்கும் வணக்கம் !  இன்றைய தினம் நான் 

உங்களது சிந்தனைக்கு தரும் குறளும் அதன் 

விளக்கமும் என்ன என்றால் :-


அதிகாரம்  :-  கேள்வி 

குறள் எண் :-  411.



செல்வத்துள்செல்வஞ்செவிச்செல்வம்அச்செல்வம் 

செல்வத்து ளெல்லாந் தலை .



செவியால் கேட்டு அறியும் செல்வம்,

செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப் படும் 

செல்வமாகும்.அதேசமயம்அந்தசெல்வம்அனைத்து 

செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

இது வள்ளுவன் வாக்கு. 


 இதை நான் மற்றும் ஒரு கோணத்தில் பார்க்கிறேன். 

 எப்படி என்றால் புலன்கள் ஐந்து.


 அவை யாதெனின் கண்டு கேட்டு 

உண்டு நுகர்ந்து உயிர்த்தல் எனப் படுபவையே 

ஆகும். இவைகளில் கேட்கும் திறன் உடைய

செவியைத் தவிர ஏனைய நான்கு புலன்களையும் 


வேறு எந்த துணையும் இன்றி நாமாகவே  தடை

செய்திட இயலும். அடக்கிவைத்திட முடியும். 


எப்படி என்றால் பார்க்க வேண்டாம் என்று முடிவு 

செய்தோமேயானால் நாம் நமது கண்களை இறுக 

மூடிக் கொண்டால் போதுமானது.

அதேபோல நுகர வேண்டாம் என்றால் மூச்சினை 

இழுத்து பிடித்து அடக்கி கொள்ளலாம்.

அதேபோலஉண்ண/பேச  வேண்டாம் எனில் வாயை 

திறக்காமல் மூடிக் கொண்டால் போதுமானது.

அதேபோல உயிர்த்தல்/தொடுதல் உணர்ச்சி 

வேண்டாம் என்றால் கைகளை கட்டுப்பாட்டில் 

வைத்துகொண்டால் போதுமானது.

ஆனால் இந்த கேட்டல் புலன் இருக்கிறதே 

அப்பப்பா நான் என்ன சொல்ல! இந்த புலனை 

அடக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்தால் 

கைகளின் துணை இன்றி முடியாதய்யா !

முடியவே முடியாது!!  அதனால்தானோ என்னவோ 

திருவள்ளுவர் இந்த செல்வத்தினை தலையானது 

என்று ஒருவேளை சொல்லி இருப்பாரோ?


யான் அறிந்திலேன் பராபரமே!! நன்றி வணக்கம் !!

அன்புடன் மதுரை T.R.பாலு.


(பின் குறிப்பு:-  எனது இந்த எழுத்துப் பணிக்கு 

நேயர்களாகிய நீங்கள் ஒருவார காலம் எனக்கு 

விடுமுறை அளித்திட வேணுமாய் பணிவன்புடன் 

கேட்டுக் கொள்கிறேன்.  ஏன் என்றால் எனது இடது

கண் பிறை நீக்குதல் அறுவை சிகிச்சை இன்று 

வியாழக்கிழமை (28-03-2013) காலை எட்டு மணி 

அளவில் நடைபெற இருப்பதினால் அவசியம் 

தவறாது ஓய்வு எடுத்திடல் வேண்டும் என எனது 

மருத்துவ குழுவினர் பணித்திருப்பதினால் நான் 

இந்த வேண்டுகோளை உங்கள் முன்வைக்கிறேன்.

அருள்கூர்ந்து எனது வேண்டுகோளை ஏற்று எனக்கு

ஒருவார கால விடுமுறை அளிப்பீர்கள் என்று நம்பி 

எனது இந்த கடிதத்தினைநான்நிறைவு செய்கிறேன்)

Monday, March 25, 2013

செல்வத்தினை இழந்தவனின் நிலைமை !!


தினம் ஒரு திருக்குறள்



.
அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம்.

இன்று நான் உங்கள் சிந்தனைக்கு தரும் குறளும் 

விளக்கமும்:-


        அதிகாரம் :- மானம் 

       குறள் எண் :- 964,

  தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

  நிலையின் இழிந்தக் கடை..

 .. .. .. .. .. ..
சமுதாயத்தில் மனிதன் செல்வம் செல்வாக்கோடு கூடிய நிலையில் வாழ்ந்திடும் போது அவன் உயர்வாக மதிக்கப் படுகிறான்.

ஆனால் அதே மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் விதிவசத்தால் தசா புத்தி மாற்றங்களினால் செல்வம் இழந்து செல்வாக்கு சரிந்து ஏழ்மை நிலைக்கு தள்ளப்படும் போது  இதே சமுதாயம் அவனை மதிக்காதது மட்டுமின்றி கேவலமாக பார்த்து தூற்றும் நிலைதனை அடைகிறான்.

இந்த நிலைக்கு வள்ளுவன் காட்டும் உதாரணம் மிக அருமையிலும் அருமை. தலையில் முடி உள்ளவரை அதை மதித்து வளர்த்து அழகு பார்க்கும் அதே மனிதன் அந்த முடி உதிர்ந்து கீழே விழுந்துவிட்டால் எப்படி மதிக்காமல் அதை கேவலமாக பார்கிறான் என காட்டும் உதாரணம் மிகச் சிறந்தது. நாமும் அதை கண்டு நம் செல்வ நிலை சரியாமல் இருக்க மது,மாது சூது இவைகளில் மனம் நாடாமல் இருக்க பழகிக் கொள்ளவேண்டும்

.நன்றி வணக்கம்.மதுரை T.R.பாலு.மீண்டும் நாளை சந்திப்போம்!

Monday, March 18, 2013

சாமியாராக போகலாமா?சந்யாசியாக ஆகலாமா ?


சன்னியாசியாகப் போகலாமா? அல்லது சாமியாராக ஆகலாமா?


தெய்வப்புலவர் திருவள்ளுவர் மானுடத்துக்குச் 
சொல்லிச்சென்றகருத்துக்களும் அறிவுரைகளும் ஏராளம்.ஏராளம். அவற்றுள் ஒன்றுதான்நான் மேலே சொன்னது. 

திருவள்ளுவப் பெருந்தகையை சந்தித்த ஒருவர் 
தமக்கு வாழ்க்கை முழுவதும் ஒரே பிரச்சனையாக உள்ளது.

பேசாமல் சந்நியாசியாக போகலாமா அல்லது சாமியாராக ஆகலாமா என கேட்கும் போது அவர் சொன்னகருத்து கீழேயுள்ள குறளிலும்  அதன் 
விளக்கத்திலும் தரப்பட்டுள்ளது.

    அதிகாரம் :-  கூடா ஒழுக்கம்.
       குறள் எண் :-  280.

        மழித்தலும்  நீட்டலும் வேண்டா உலகம்
        பழித்தது ஒழித்து விடின்.. .. .. .. .. .. .. ..

விளக்கம்:- இந்த உலகம் பழிக்ககூடிய செயல்களான பிறரை ஏமாற்றுவது 
திருடறது பொய் சொல்றது அடுத்தவன் காசுக்கு ஆசை படுவது நம்பிக்கை துரோகம் செய்வது இதுபோல இன்னும் பற்பல குறிப்பிட முடியாத 
பாவ செயல்களை செய்யாமல் இருந்தாலே போதுமானது

.(ஆனால் இந்த காலத்திலே இதை எல்லாம் செய்பவர்கள் மிக நல்ல நிலைமையில் இருக்காங்க அது வேற விஷயம்).

நீ மொட்டை அடிச்சு சந்நியாசியாகவும் ஆக வேண்டாம் தாடி வளர்த்து 
சாமியாராகவும் போக  வேண்டாம் என வான்புகழ் வள்ளுவர் கூறிய 
கருத்து மனிதகுலத்துக்கு என்றும் பயன்தரும் என்பதில்
சந்தேகமேயில்லை.

மீண்டும் அடுத்த குறள் விளக்கத்தில் நாம் அனைவரும் சந்திப்போம்
.அதுவரை உங்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டி
விடைபெறுகின்றேன்.வணக்கம்.அன்பன் மதுரை T.R.பாலு.

Sunday, March 17, 2013

செல்வத்தின் சிறப்பு !!


தினம் ஒரு திருக்குறள் !!

அனைவருக்கும் காலை வணக்கம். இன்று நான் உங்கள் சிந்தனைக்கு தரும் குறளும் அதன் விளக்கமும் கீழ் கண்டவாறு”-

        அதிகாரம் :-   பொருள் செயல்வகை.
   குறள் எண்:-   751

 பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
 பொருளல்லது இல்லை பொருள்.. .. .. .. . .
.
இந்த குறள் செல்வத்தையும் அதன் சிறப்பையும் விளக்குவதாக தெய்வ புலவர் திருவள்ளுவர் அமைத்து உள்ளார்.

அதாவது மனிதனுக்கு அடிப்படைத்  தேவையான மூளை சிறிதளவும் இல்லாத, சரியான சிந்திக்கும் ஆற்றல் பெறாத, பகுத்துஅறியும் திறன் அற்ற ஒருமனித உருவத்தை  பணத்தால்  மட்டுமே  அவனை இந்த சமுதாயத்தில்  ஒரு பொருளாக/ஒரு பெரிய மனிதராக நம்மிடையே காட்ட இயலும் ஆற்றல் கொண்டது இந்த பணம் மட்டும்தான்.
இந்த பணத்தை தவிர அந்த முட்டாள் பணக்காரனை வேறு எந்த பொருளாலும் பெரிய மனிதராக காட்ட முடியாது என்பதனை ஆணித்தரமாக கூறுகிறார் நமது தமிழ்த்தாய் பெற்றுஎடுத்த தலை மகன் தெய்வப்புலவர் திருவள்ளுவப் பெருந்தகை.

அவர் சொன்ன இந்தகருத்தை நாமும் மனதில் பதியவைத்து பணத்தின் முக்கியத்துவத்தை  அறிந்து வாழ்வில் நடந்துகொள்வோம்.

நன்றி! வணக்கம் !! மீண்டும் நாளை அடுத்த  குறள் விளக்கத்தில் சந்திப்போமா நேயர்களே என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே!  மதுரை T.R.பாலு.

Saturday, March 16, 2013

செவிச் செல்வம் மட்டுமே தலையாயது !!

தினம் ஒரு திருக்குறள் !!




 அதிகாரம்  :-  கேள்வி.

 குறள் எண்:-  411.




 செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் 

செல்வத்து ளெல்லாந் தலை 





செவியால் (காதினால்) நாம் கேட்டு அறிந்து 

இன்புறும் செல்வம்  அனைத்து 

செல்வங்களுள் ஒன்றாகக் கருதப்படும் மற்றும் 

போற்றப்படும் செல்வமாகும்.

ஆனால் அந்த செவிச் செல்வம் மட்டுமே அனைத்து 

செலங்களுக்கெல்லாம் 

தலையான செல்வமாக கருதப்படும்.



இது வள்ளுவர் நமக்கு சொன்ன அறிய 

கருத்து.மீண்டும் நாளை சந்திப்போமா 

நேயர்களே!



நன்றி !வணக்கம் !!

அன்புடன்.மதுரை T..R. .பாலு.

Friday, March 15, 2013

கடன் வாங்காமல் வாழ்வது எப்படி ?


தினம் ஒரு திருக்குறள் !!

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நான்  தினம் ஒரு திருக்குறள் மூலமாக உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். 

உலக பொதுமறையான நூல் நம் தெய்வ புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்.  ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் அதுவே.

படிக்கவேண்டியது தமிழன் ஆகிய நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

பொதுவா தமிழில் ஒரு சொல் வழக்கு உண்டு என்னன்னா உள்ளூர் மாடு விலைபோகாது என.

மதுரையில் வசிக்கும் எத்தனைபேர் திருமலை நாயக்கர் கட்டிய மஹால் பார்த்திருப்பாங்க?

அதுபோல குற்றாலத்தில் வசிக்கும் எல்லோருமா அருவியில் குளிப்பாங்க?இல்லைங்க. அதுபோலத்தான் தமிழன் எல்லோரும் திருக்குறள் படிப்பது இல்லை. இனிமேலாவது நாம அந்தமாதிரி இல்லாம இருக்கணும்னு உங்க எல்லோரயும் நான் கேட்டுக்கிறேன்

 -
 அதிகாரம்   :-     வலியறிதல் 
குறள் எண் :-478.

    ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை
    போகாறு அகலாக்கடை


பொருள் :-நமதுவருமானம் அதன்  அளவு மிகச் சிறியதான  அளவாக  இருந்தாலும்  நமக்கு எந்த கேடும்/தீமையும் வந்து விடாது.எப்போது ?நமது செலவுகளை வருகின்ற வருமானதிற்குள்  வைத்துக்கொள்ளும்போது !

அதனாலே நாம எல்லோரும் வரவுக்குள் செலவை வைத்துகொள்வோம் என திருக்குறள் மேல உறுதி எடுத்துக் கொள்வோம்

நன்றி !வணக்கம் !!

மதுரை T.R.பாலு. மீண்டும் அடுத்த குறள் விளக்கத்தில் சந்திப்போம் ! சிந்திப்போம்.!!




  

தோல்வி அடைந்தவரே வெற்றி பெற்றவர் !!

தினம் ஒரு திருக்குறள் 




 அதிகாரம் :- ஊடலுவகை.


 குறள் எண்:- 1 3 2 7 .



ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலில் காணப் படும்.  .. .. .. .. .. .. 



எங்கேயாவது நீங்கள் இதுவரை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இல்லை யாராச்சும் சொல்லித்தான் இருக்காங்களா? எதை?
அட அதாங்க நம்ம வான் புகழ் வள்ளுவர் மேலேசொன்ன குறளில் சொன்னதுபோல தோத்தவங்களை ஜெயித்தவங்க என்று.

கணவன் மனைவி இவங்க இருவருக்குள் வரும்விவாதங்களில் சச்சரவுகளில் (இதற்கு பெயர் “ஊடல்”) கணவன் மனைவியுடன் மோதவிரும்பாமல் சரி சரி
நீ சொல்ற மாதிரியே நான் நடந்துக்கிறேன் என தோல்வியை ஒத்துக்கொள்கிறான் என வைத்துகொள்வோம்.

அவன் ஜெயித்து விடுகிறான்.   அதன் பிறகு இரவில் இருவருக்கும் இடையில் ஏற்படும் கூடலில் உறவின் பிணைப்பில் கணவன் முதலில் இன்பத்தை அடைகிறான் அல்லவா? ஆகவே கணவன் தான் வெற்றி பெறுகிறான்.
பகலில்  தோல்வியை ஒப்புகொண்டாலும் கூட இரவில் ஏற்படும் உறவில் விளையும் சுகத்தை பெறுவதில் முதல் இடத்தை பிடிப்பதன் மூலம் அவனே வெற்றிபெறுகிறான்  என்பதனை வள்ளுவ பெருந்தகை எவ்வளவு நேர்த்தியாக நாசூக்காக  சொல்லி உள்ளார்என்பதனை  படித்து ரசியுங்கள் நேயர்களே.நன்றி வணக்கம்.


Thursday, March 14, 2013

அடுத்தவர் மனைவி மீது ஆசை பட்டவர் நிலைமை !!

தினம் ஒரு திருக்குறள் !! 


                       அதிகாரம் :-   பிறனில் விழையாமை.

                      குறள் எண் :-   143.


  
    விளிந்தாரின் வேறல்லர் மற்ற தெளிந்தாரில் 

     தீமை புரிந்து ஒழுகுவார்.. .. .. .. .  ..  .  .  . .. .. .. .. .. 


அன்புமிகு நேயர்களே !


வான்புகழ் வள்ளுவனுக்கு ஏனைய புலவர்களைப்
  
போலன்றி தெய்வப் புலவர் என்னும் சிறப்பு பட்டம் 

எதனால்வழங்கப்பட்டிருக்கக்கூடும் என்ற சிந்தனை 

எனது மனதில் பன் நெடுங்காலமாக ஓடிக்கொண்டு

இருந்தது.ஒரு நாள் அதற்கு விடையும் கிடைத்தது.

அதைப் பற்றி குறள் விளக்கத்தின் இறுதியில் நான் 

உங்களுக்கு சொல்கிறேன்.இப்போது விளக்கத்தை 

பாப்போம்:-

நம் மீது எவ்விதமான ஐயமுமில்லாமல் தெளிவாக 

நம்மை நம்பியவருடைய  மனைவி இடத்தே 

விருப்பம் கொண்டு அவளிடம் தீமையைச் செய்து 

நடப்பவர் உண்மையில் உயிருடன் இருப்பினும் 

செத்துப் போனவரை விட வேறுபட்டவர் அல்லர்.

இது வள்ளுவர் நமக்கு அருளித் தந்த குறளும் அதன் 

விளக்கமும்.


அதாவது அவர் நமக்கு தந்த 1330 குறள்களிலும் 

நமக்குச் சொன்ன விஷயங்களோ கருத்துக்களின் 

தொகுப்பினையோ அல்லது சம்பவங்களின் 

உண்மைகளை அவர் தனக்கு தான் நேரடியாக 

எந்த காலத்தேயும் சந்திக்காமல் இது இப்படித்தான் 

என தனது ஆழ்ந்த தெளிந்த அறிவின் முதிர்ச்சி 

காரணமாக நமக்கு மனிதகுலத்திற்கு எடுத்து 

தந்தாரே அந்த அவரது சிறந்த குணத்தின் வெளிப் 

பாடு பயனாகவே அன்னாருக்கு "தெய்வப் புலவர்"

என்ற பட்டம் வழங்கப் பட்டு இருக்கலாம் என்றே 

நான் கருதுகிறேன்.

மீண்டும் அடுத்த குறள் விளக்கத்தில் சந்திப்போமா!!

நன்றி வணக்கம்.

அன்புடன் மதுரை T.R.பாலு.



மழையின் சிறப்பு !!

தினம் ஒரு திருக்குறள் !! 


அனைவருக்கும் வணக்கம். இன்று நான் உங்கள் 

அனைவரின் சிந்தனைக்கு தரும் குறளும் அதன் 

விளக்கமும்  என்ன என்றால் வான் சிறப்பு என்னும் 

அதிகாரத்தில் வரும் ஒரு குறள். பாடலை பார்க்கும் 

முன்னர் ஒரு விஷயத்தை நாம் இங்கே கேட்போமா 

நேயர்களே !

எங்கே நேர்மை அரசாளுகிறதோ எங்கே அந்த 

நாட்டின் அரசன்/அரசி முழுமனதுடன் மக்கள் 

வளமே தனது  சுகமே என்று நினைத்து தனது 

குடும்பத்தைக்கூடகவனிக்காமல்ஆட்சிசெய்கின்ற-

னரோ அந்த நாட்டில் மாதம் மும்மாரி மழைபெய்த 

வரலாறு  சேர,சோழ,பாண்டியர் காலங்களில் 

வேண்டுமானால் நடைபெற்றிருக்கலாம். ஆனால் 

இப்போது நடைபெறும் கலி காலத்தில் வானம் 

வசப்படாமல் வறண்டுபோய்விடுமாம். அந்த நிலை 

தான் இன்று நம் நாட்டில் காணப்படுகிறது. சரி நாம்  

இப்போது குறள் மற்றும் அதன் விளக்கத்தினை 

பார்ப்போமா நேயர்களே !

                           அதிகாரம் :-   வான் சிறப்பு !! 

                          குறள் எண்:-    15 


    கெடுப்பதூ உங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றங்கே 

    எடுப்பதூ உம் எல்லாம் மழை .... ... .. ...


பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்யாமல் (உழவர் 

பெருமக்களின்) வாழ்வினைக் கெடுக்க வல்லதும் 

இந்த மழைதான்.  அப்படி பருவத்தில் மழை ஏதும் 

இல்லாமல் வாழ்க்கை கெட்டு தங்கள் வளம் கெட்டு  

நொந்து போனவர்களுக்குத் துணையாக  அதற்கு 

அடுத்த பருவத்தில் நன்கு குளிர மழை பெய்து 

அவர்களுக்கு துணையாய் அவ்வாறே காக்க 

வல்லதும் இதே மழைதான் என்று தெய்வப் புலவர் 

திருவள்ளுவர் அருளிச் சென்ற குறளின் ஆழ்ந்த 

கருத்தினை படித்து உணர்ந்திடுவோமா நேயர்களே 


மீண்டும் நாளை அடுத்த குறள் விளக்கத்தில் உங்கள் 

அனைவரையும் சந்திக்கிறேன். நன்றி வணக்கம்.


அன்புடன் மதுரை T.R.பாலு.

            

Monday, March 11, 2013

நல்ல ஒழுக்கம் என்றும் நன்மை தருபவையே !!

தினம் ஒரு திருக்குறள்!!  



                          அதிகாரம் :-  ஒழுக்கமுடைமை 

                            குறள் எண்:-  134.


மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் 

பிறப்பொழுக்கல் குன்றக் கெடும்.. .. .. .. .. .. .. ..



தான் கற்று உணர்ந்த வேதங்களையும் அதன் 

உண்மைப் பொருள்களையும் மறந்தாலும் கவலை 

கொள்ள வேண்டியதில்லை. ஏன் என்றால் அவை

அனைத்தையும் மீண்டும் ஓதிக் கற்றுக்கொள்ள 

அந்தணர்கள் என்று அழைக்கப்படும் பார்ப்பனர்-

-களால் முடியும்.  ஆனால் அதே சமயம் அவர்கள் 

(வேதம்/மறை ஒதிடுபவர்கள் என்றுஅழைக்கப்படும் 

அந்தணர்கள்) குடிப்பிறப்பு ஒழுக்கம் நேர்மை 

நிறைந்த அவர்களது வாழ்க்கை,உண்மையான 

அந்தணர்களதுநடவடிக்கைஇவைகளில் எது ஒன்று 

குன்றினாலும் குறைந்தாலும் மறைந்தாலும் 

அது கெட்டுப் போனதாக மட்டுமே கருதப்படும்.

மீண்டும் அதனை சரிசெய்திட இயலாது என்று 

வள்ளுவர் சொன்ன கருத்தினை அந்தணர்கள் 

அனைவரும் ஆராய்ந்து வாழ்வில் கடைப்பிடித்து 

ஒழுகிட வேண்டுமாய் கேட்டுகொள்ளப் படுகி-

றார்கள்.

நன்றி! வணக்கம்!!

காதலின் சிறப்பு !!



தினம் ஒரு திருக்குறள் !! 



                   அதிகாரம்  : -   காதற் சிறப்புரைத்தல்.

                குறள் எண்    : -   1 1 2 2.



   " உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன 
        மடந்தையொடு எம்மிடை நட்பு ".. .. .. .. .. .. 


குறள் விளக்கம்:-   இந்த மடந்தையோடு (பெண்ணோடு)  எனக்கு உள்ள நட்பு முறைகள் தொடர்புகள் எப்படி உள்ளது என்று கேட்டால் எனது இந்த உடம்பிற்கும் உயிருக்கும் உள்ள தொடர்புகள் எந்த தன்மையானவைகளோ அதற்கு இணையான அதே தன்மையானவைகள் என்றுதான் என்னால் சொல்ல முடிகிறது என்று வள்ளுவர் அருளிச் சென்ற கருத்து விளக்கத்தில்தான் காதலுக்கு எவ்வளவு சிறப்புகளை அவர் அளித்து உள்ளார் என்பது நமக்குப் புலப்படுகிறது. 

மீண்டும் நாளை சந்திப்போமா அடுத்த குறள் விளக்க தொகுப்பினில். நன்றி!வணக்கம் !!   அன்புடன் மதுரை T.R.பாலு.

Sunday, March 10, 2013

சோம்பல் குணத்தை கைவிடு !!

தினம் ஒரு திருக்குறள் !! 
  


                         அதிகாரம்  ;-   மடி இன்மை.

                     குறள் எண்:-  605.

 

             " நெடுநீர் மறவி மடி துயில்நான்கும் 

        

                  கெடுநீரார் காமக் காலன் ".. .. .. .. .. .. ..

 

   காலம் நீட்டித்து எந்த ஒரு செயலையும் செய்திடும் போக்கு, மறதி குணம், சோம்பல்,   அளவுக்கு அதிகமாக தூங்கிதுடும் பழக்கம்        இவை நான்கும் சமூகத்தில் கெட்டு அழிந்து         போகக்கூடியவர்கள் விரும்பி ஏறி பயணிக்கும்  மறக்கலமாகும்.

எனவே நாம் யாவரும் மேலே குறிப்பிட்ட நான்கு விதமான நம்மை கெட்டு அழிக்க கூடிய பழக்க  வழக்கங்களை பழகாமல் வாழ்ந்திடல் அவசியம்  ஆகும். நன்றி.வணக்கம்.மீண்டும் நாளை அடுத்த குறள் விளக்கத்தில் சந்திப்போமா நேயர்களே !!   அன்பன் மதுரை TR பாலு.








 

Saturday, March 9, 2013

சொல்லுவது எளிது! ஆனால்..............செயல் ? ? ?

       தினம் ஒரு திருக்குறள் !! 
   
  

                                             அதிகாரம் :-    வினைத் திட்பம்.

                                            குறள் எண் :-     664.




                     சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்                                                           

                           சொல்லிய வண்ணம் செயல் ........ .......

 

         பொதுவாக எந்த ஒரு செயலையும் இதனை இப்படி செய்திருக்கலாம் அதனை அப்படி செய்திருக்கலாம் நான் என்றால் இன்னும் உன்னைவிட சிறப்பாக செய்திருப்பேன்.இவ்வாறு எல்லாம் சொல்றது என்பது நாம் அனைவருக்கும் மிக எளிதான ஒன்று. ஆனால் அரிதானது எது என்றால்  மிகவும் கஷ்டமானது எது என்று கேட்டால் அதுபோல செய்து முடிப்பது என்று வள்ளுவர் சொல்லி உள்ளார்.  ஆகவே நாமும் இனிமேல் நம்மால் எதை செய்ய முடியுமோ அதை மட்டுமே சொல்வோம். எதை சொல்லு கிறோமோ அதை மட்டுமே செய்வோம் என்று சொல்லி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.அன்புடன் மதுரை T.R.பாலு.


நட்பு என்றால் என்ன ?

தினம் ஒரு திருக்குறள் !! 


                                           அதிகாரம் :-   நட்பு 

                                குறள் எண்:-  186.  

 

                        முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 

                                 அகநக நட்பது நட்பு ..........................

 
 

பொருள் விளக்கம்:-    முகம் மட்டும் மலரும்படியாக தமது நண்பரிடம் நட்பு பாராட்டுவது நட்புக்கு இலக்கணம் ஆகாது.  ஆனால் நாம் நமது நண்பரிடம் காட்டிடும் நட்பு வெளிப்பாடு, அதனால் விளைந்திடும் நல்ல நன்மைகள் அவரது நெஞ்சத்தை தொடும்படியாக அமைந்திடவேண்டும் அது ஒன்று தான் தூய நட்பின் இலக்கணம் என்று திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற உண்மைதனை நாம் இதுவரை கடைபிடிக்காவிட்டாலும் இனிமேலாவது கடைபிடித்து நண்பர்களுக்கு உண்மையுடன் வாழ்ந்திட முடிவெடுத்து செயல்படுத்துவோம்உலகத்தில் . மீண்டும் நாளை அடுத்த குறள்  விளக்கத்தில் சந்திப்போமா நேயர்களே!

நன்றி வணக்கம். அன்பன் மதுரை T.R.பாலு.

Friday, March 8, 2013

திருக்குறள் தெளிவுரை !!

தினம் ஒரு திருக்குறள் !! 

                                        அதிகாரம் :-       ஊடலுவகை.

                                           குறள் எண்:-    1330.

 

      "  ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் 

             கூடி முயக்கப் பெறின் .. .. .. .. .. .. .. .. .. .. .. 

 

          காமம் என்று சொல்லப் படும் இருபாலர்களுக்கு இடையே ஏற்படும் அந்த உணர்வுக்கு இன்பம் தருவது எது என்று கேட்டால் தலைவன்  தலைவி இருவருக்கு இடையில் ஏற்படும் ஊடுதல் ஆகும். ஊடுதல் என்றால் சிறுசிறு பிரச்சனைகளுடன் ஒருவருக்கு  ஒருவர் ஏற்படும் ஆசை உணர்வுகள் யாவையும் உள்ளடக்கி சீண்டிப் பார்த்தாலே ஆகும். இது இரவுவரை நீடிக்கும்.அந்த நிகழ்வுகள் அனைத்தும் முடிவுற்றபின் அந்த ஊடலுக்கு இன்பம் எது என்று வள்ளுவனிடம் கேட்கும் போது என்ன சொல்கிறார் என்றால் அதற்கு இன்பம் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் இறுகக் கட்டித் தழுவுதலே ஆகுமாம். இது வள்ளுவன் சொன்ன கருத்து.   மீண்டும் நாளை வேறு ஒரு திருக்குறள் தெளிவுரையில் சந்திப்போமா  நேயர்களே! நன்றி! வணக்கம்!!   


Thursday, March 7, 2013

திருக்குறள் தெளிவுரை!!

தினம் ஒரு திருக்குறள்!!

         தினம் ஒரு திருக்குறள் பதிவுகளில் உங்கள் அனைவரையும் காண்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய நான் தரும் குறளும் அதன் விளக்கமும் என்னவென்றால் :-

                                             அதிகாரம் : குறிப்பறிதல்  

                                                         குறள் எண்   :  1094.  

 

       " யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் 

           தான்நோக்கி மெல்ல நகும் " .. .. .. .. .. 

 

 பொருள்:-  எனது உள்ளம் கவர்ந்த அன்புக் காதலி எப்படிப்பட்டவள் எனில் நான் அவளை பார்க்கும்போது ஏதும் அறியாதவள் போல என்னை சற்றும் புரியாதவள் போல நிலத்தைப் பார்த்திடுவாள். ஆனால் அதே சமயம் நான் அவளை பார்த்திடாமல் இருக்கும்போது அவள் நிலைமை எப்படி இருக்கும் தெரியுமா என்னை பார்த்து  தனது மனதுக்குள் அவள் மெல்ல மகிழ்ந்து கொள்வாளாம் என வான் புகழ்வள்ளுவர் பெருந்தககை  கூறிச்சென்ற குறள் "அந்தக்கால பெண்களுக்குரிய "குணமாக இருந்து உள்ளது என்பதனை அறியும்போது மனம் என்னே மகிழ்வுறுகிறது.

மீண்டும் அடுத்த  குறள் விளக்கத்தில் சிந்திப்போம் நேயர்களே. நன்றி வணக்கம்.அன்புடன் மதுரை T.R.பாலு.      

    

  

Monday, March 4, 2013

திருக்குறள் விளக்கம் !!

திருக்குறள்  

அனைவருக்கும் வ ணக்கம்.இன்று நான் உங்கள் அனைவருக்கும் தரும் குறள் ...     
 
மற்றும் அதன் விளக்கம் என்னவென்றால்:-
 
 

                                அதிகாரம் :-   அறன்வலியுறுத்தல் 

 

                                         குறள் எண்  :-    35 

 

                   அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 

 

                         இழுக்கா இயன்றது அறம் !.. .. . . .. .. .. .. .. .. .. ..

விளக்கம்:-பொறாமை,ஆசை, சினம். கடுஞ்சொல் இந்த நான்கு விதமான 

குற்றங்களுக்கும் இடம் கொடுத்திடாமல் அவற்றை களைந்து நடப்பது 

மட்டுமே அறன் எனப்படுவதாகும்.  இது வள்ளுவன் நமக்கு அருளிச்சென்ற 

வழியாகும். நாமும் இதன்படி நடந்திட முயல்வோமா? 

நன்றி வணக்கம். 

 

                         

Sunday, March 3, 2013

திருக்குறள் விளக்கம்!!

திருக்குறள்  

 
 இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். இன்று நான் 
 
உங்கள் அனைவருக்கும் தரும் குறள் மற்று அதன் விளக்கம் யாதெனின்:-
 
 

                                                       அதிகாரம் :-   ஊழ் 

 

                                                                  குறள் எண்;-    380. 

               ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று 

               சூழினுந் தான் முந்துறும்,, ,, ,, ,, ,, ,, , , ,, ,,, ,

 
 

விளக்கம்:-   

                         ஊழைவிட மிகவும் வலிமை உள்ளது வேறு எதுவம் கிடையாது.
 
ஊழை விலக்கஅதனைஒதுக்கிவிட்டுமற்றும்ஒருவழிதனை நாம் தேடினாலும் 
 
கூட அங்கேயும் ஊழ் தானாக வந்து முன் நிற்கும்இது  வள்ளுவனின் வாக்கு 
 
இங்கே ஊழ் என்று நாம் குறிப்பிடுவது எது என்றால் முன்ஜென்ம வினைப் 
 
பயன் என்பதாக அறிக. அதாவது விதியை வெல்ல இயலாது என்பதே நமக்கு 
 
வான்புகழ் வள்ளுவன் அருளிச்சென்ற மையக் கருத்து.மீண்டும் நாளை நாம் 
 
வேறு ஒரு குறள் விளக்கத்தில் சந்திப்போமா நேயர்களே.நன்றி.வணக்கம்.
 
அன்புடன் மதுரை T.R.பாலு.
 

       

 
 





Saturday, March 2, 2013

திருக்குறள் விளக்கம் !!

திருக்குறள்  !!


உலகெங்கிலும் வாழ்ந்து வரும் எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு உங்கள்  அனைவரின் பொற்கமல 
பாதங்களில் என்னுடைய  நெஞ்சார்ந்த நன்றி தனை காணிக்கையாக வைத்து வணகுகின்றேன் !!

தெய்வப் புலவர் திருவள்ளுவரின் அறிய படைப்பு நம் திருக்குறள் ஆகும். அதனின்று இன்று உங்களில் 
அனைவருக்கும் ஒரு குறளும் விளக்கமும் தந்து நான் மகிழ்ச்சி அடைந்திட விழைகிறேன்.நன்றி.

                  அதிகாரம்:-  பொறையுடைமை 

                   குறள் எண்:- 151

           அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 
             இகழ்வார் பொறுத்தல் தலை.. .. .. .. ..  

எவ்வாறு தம்மை குழிதோண்டி வெட்டுவோரையும் 
தாங்கிடும் நிலத்தை போலநம்மை இகழ்ந்திடுவோர் 
நம்மை கேலி செய்வோர் அனைவரையும் நாம் 
பொறுத்துக்கொண்டு இருப்பதே நமது தலையாய 
நற்பண்பு என வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளதை 
நாமும் நமது வாழ்கையில்கடைபிடிப் போமா அன்பு நெஞ்சங்களே!!மீண்டும் அடுத்த குறள் விளக்கம் 
நிகழ்ச்சியில் நாம் அனைவரும் சந்தித்து இன்புறுவோம்  நண்பர்களே!! நன்றி!வணக்கம்!!

அன்புடன் மதுரை T.R.பாலு.



திருக்குறள் விளக்கம் !!

தினம் ஒரு திருக்குறள்  


அனைவருக்கும் வணக்கம். இன்று நான் தரும் குறளும் அதன் விளக்கமும்:-


                          அதிகாரம் :-   புறங்கூறாமை 

                           குறள் எண் :- 133.

         புறங்கூறிப் [பொய்த்துயிர் வாழ்தனின் சாதல் 

          அறங்கூறும் ஆக்கம் தரும் .. .. .. .. .. .. .. .. .. .. .. .


ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் இல்லாததும் பொல்லாததும் கூறி 

அவர் தரும் காசைப் பெற்று உண்டு உயிர்வாழ்தலை விட அதனால் 

வறுமையுற்று உயிரை விட்டு விடுதல் சாலச் சிறந்ததாகும்.  அது 

மட்டும் அல்ல. அது அற நூல்கள் நமக்கு அருளிய ஆக்கத்தையும் 

தரும் என்று வள்ளுவப் பெருந்தகை நமக்கு கூறியுள்ளார். நாமும் 

அதனை நமது வாழ்வினில் கடைபிடிப்போமா நேயர்களே! நன்றி.

வணக்கம். அன்புடன் மதுரை  T.R.பாலு.

 























  


  


Friday, March 1, 2013

திருக்குறள் விளக்கம்

தினம் ஒரு திருக்குறள்   


 அனைவருக்கும் வணக்கம். இன்றைய தினம் நான் உங்கள் அனைவருக்கும் 

தரும் குறளும் அதன் விளக்கமும் என்னவென்றால்:-


                                              அதிகாரம் :-  வரைவின் மகளிர் 

                                               குறள் எண் :- 92௦ 


                           இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் 

                           திருநீக்கப் பட்டார் தொடர்பு.. .. .. .. .. .. .. .. ..


இருவகைப்பட்ட மனம் கொண்டுள்ள பொது மகளிரும் (அன்னியப் பெண்கள்.

விலைமகளிர்) நல்லவனையும் பொல்லாதவனாக கள்வனாக மாற்றம் 

செய்திடும் கள் என்று சொல்லப்படும் மதுவும் கவறுதல் என்று சொல்லும் 

சூதாட்டமும் ஆக  இந்த மூன்றும் திருமகள் என்று அழைக்கப்படும்  லட்சுமி 

தேவியால் ஒதுக்கப்பட்ட நிராகரிக்கப்பட்ட நீக்கப்பட்ட நபர்களின் முக்கிய 

உறவாகும். இது வள்ளுவன் நமக்கு சொன்ன அறிவுரை.


எனவே நாம் அனைவரும் மேலேசொன்ன நம்மை செல்வத்துடன் உள்ள 

தொடர்புகளை வேர் அறுக்கும் இந்த மூன்று விஷயங்களிலும் நாம் மிகவும் 

எச்சரிக்கையுடன் இருந்து அவற்றுடன் சேர்ந்திடாமல் வாழ்ந்திடல் மிகவும்

முக்கியமானது என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

திருக்குறள் விளக்கம் !!

தினம் ஒரு திருக்குறள் !!        




                        அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.  இன்றைய தினம் நான் 

உங்கள் சிந்தனைக்கு தரும் குறளும் அதன் விளக்கமும்:-



                                    "  பணியுமாம் என்றும் பெருமை சிறுமை 

                                        அணியுமாம் தன்னை வியந்து !! " .. .. .. .. .. .. 

                                                    (அதிகாரம்: பெருமை.. குறள் எண்.978)


                         பெரும் புகழ் உடையவர்களும் நல்ல பண்பு உடையவர்களும் 

எப்போதும் பணிவுடன் மட்டுமே இருப்பார்கள். ஆனால் சிறு மதி படைத்த 

நபர்கள் எப்பொழுதும்தன்னை தானே பாராட்டிக்கொண்டும் தன்னால் மட்டுமே  

எல்லா காரியங்களும் நடப்பதாகவும் பிதற்றிக் கொண்டு இருப்பார்கள்.ஆகவே 

நாம் அனைவரும் இனிமுதல் கொண்டாவது வாழ்வில் பணிவுடன் நடந்து 

பெரும் புகழும் நற்பண்பு உடையோர்களாகவும் மாறிட முயலுவோமாக! 

நன்றிவணக்கம்மீண்டும் அடுத்த குறள் விளக்கத்தில் சந்திப்போமா நேயர்களே 






திருக்குறள் விளக்கம்

தினம் ஒரு திருக்குறள் 




                            எனது அன்பு நிறைந்த குறள்தனை நேசிக்கும்  இனிய தமிழ் 

நெஞ்சங்களே!! உங்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள். இன்று   

நான் உங்கள் அனைவரின் சிந்தனைக்கு தரும் குறளும் அதன் விளக்கமும்:-  


                               '        அதிகாரம் :-   அழுக்காறாமை 


                                                  குறள் எண் : 169


                            அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ செவ்வியான்
                           
                                 கேடும்  நினைக்கப் படும்... .. .. . ........ ...... .................


அதாவது வள்ளுவப்பெருந்தகையிடம் ஒருவன்கேட்கிறான் .என்னவென்றால்

அய்யா கெட்ட நெஞ்சம் உள்ளவன் ஊரை அடித்து உலையில்போட்டு லஞ்ச

லாவண்யங்களில் கோடிகோடியாய் சம்பாதித்தவன்  வீடு வாசல் தோட்டம்

வேலைக்கு ஆட்கள் ,கார்,,போன்ற சகல செல்வங்களுடனும் வாழ்ந்திட,

உண்மையும் நேர்மையும் பேசி சத்தியத்துடன் வாழ்ந்திடும் ஒருவன் அவனின்

அன்றாட தேவைகளுக்கே சிரமப் படுகிறானே ஐயா!இது என்ன நியாயம்!!என்ற

கேள்விகணையைவள்ளுவன்முன் வைக்கிறான். வள்ளுவனோ புன்முறுவல்

பூத்த முகத்துடன் பதில் சொல்கிறான்.என்ன பதில் அது?

இது முன்ஜென்ம வினைப்பயன்தான் என்கின்றார் வள்ளுவர். அதாவது கெட்ட

நெஞ்சம் படைத்த பிரமுகர் கடந்த ஜென்மத்தில் செய்திட்ட புண்ணியங்கள்

அவனுக்கு இந்த பிறவியில் பலன் தருகிறது.அது போல இப்பிறவியில் நல்ல

எண்ணங்களுடன் வாழ்பவன் சென்ற ஜென்மத்தில் செய்திட்ட பாவங்களின்

பலன் இந்த ஜென்மத்தில் அவனை பாதிக்கின்றது என்கிறார் வள்ளுவர்.


 எனவே நான் உங்கள் அனைவருக்கும் கூறிடும் கருத்து என்னவென்றால்

நாம்  இப்பிறவியில் புண்ணியங்களை செய்திட்டால் மறு ஜென்மமாவது

நலமுடன் வளமுடன் வாழ்ந்திடலாம் என்று வள்ளுவன் கூறிய கருத்தை

உங்கள் அனைவரின் சிந்தனைக்கு விருந்தாக படைக்கிறேன்.வாழ்வோம்

வளமுடன்.நன்றி வணக்கம்.மதுரை T.R.பாலு.மீண்டும் அடுத்த குறள்

விளக்கத்தில் சந்திப்போமா நேயர்களே!!